என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருடியவர்"

    • சேலம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வரும் வார்டில் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் ஒரு மர்ம நபர் புகுந்தார்.
    • அங்கு தூங்கிக் கொண்டிருந்த நோயாளிகள் 2 பேருடைய செல்போன்களை எடுத்துக் கொண்டு நைசாக நழுவ முயன்றார்.

    சேலம்:

    சேலம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வரும் வார்டில் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் ஒரு மர்ம நபர் புகுந்தார். அங்கு தூங்கிக் கொண்டிருந்த நோயாளிகள் 2 பேருடைய செல்போன்களை எடுத்துக் கொண்டு நைசாக நழுவ முயன்றார். இதை கண்ட நோயாளிகளுடன் தங்கி இருந்த உறவினர்கள் உடனடியாக கூச்சலிட்டு அருகில் இருந்த நபர்களின் உதவியுடன் மர்ம நபரை பிடித்து சேலம் அரசு மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பிடிபட்ட நபர் சேலம் மாவட்டம் வாழப்பாடி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சிவராஜ் (வயது 58) என்பது தெரியவந்தது.தொடர்ந்து போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கொங்கரப்பட்டி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர், இரு சக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி, ஆடு குறித்து விசாரணை செய்தார்.
    • இதனால் பயந்துபோன அந்த நபர், ஆட்டையும், இருசக்கர வாகனத்தையும் அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார்.

    கடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அடுத்த கொங்கரப்பட்டி அம்மனேரி முனியப்பன் கோவில் பகுதியை சேர்ந்தவர் குமார்

    (வயது 40). இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று இவரது ஆட்டை திருடிய மர்மநபர், இரு சக்கர வாகனத்தில் அதை ஏற்றிக்கொண்டு சென்றார்.

    அப்போது கொங்கரப்பட்டி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர், இரு சக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி, ஆடு குறித்து விசாரணை செய்தார். இதனால் பயந்துபோன அந்த நபர், ஆட்டையும், இருசக்கர வாகனத்தையும் அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார்.

    இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மர்ம நபர் விட்டு சென்ற இரு சக்கர வாகனத்தை வைத்து போலீசார் விசாரணை செய்ததில், ஆடு திருடியவர் பொம்மியம்பட்டி மேல்கோம்பை பகுதியை சேர்ந்த அசோக்குமார் என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எலச்சிபா ளையம் அருகே மோர்பா ளையம் பிரிவு சாலையில் உள்ள ஒரு செல்போன் கடையில் கடந்த 18-ந் தேதி 10 செல்போன்களை திருடிச் சென்றதும் தெரிய வந்துள் ளது.
    • மேலும் அவரிடம் இருந்த 10 செல்போன்களையும் பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    திருச்செங்கோடு:

    எலச்சிபாளையம் அடுத்த கொன்னையார் பஸ்நிறுத்தத்தில் எலச்சி பாளையம் சப்-இன்ஸ் பெக்டர் ராமச்சந்தி ரன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் சிக்கி னார். அப்போது அங்கு வந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின்னாக பேசினார்.

    சந்தேகமடைந்து போலீ சார் விசாரித்த போது அவர் சேலம் மாவட்டம், பெரியசீரகாபாடியைச் சேர்ந்த மோகன்குமார் (39) என்பதும், அவர், எலச்சிபா ளையம் அருகே மோர்பா ளையம் பிரிவு சாலையில் உள்ள ஒரு செல்போன் கடையில் கடந்த 18-ந் தேதி 10 செல்போன்களை திருடிச் சென்றதும் தெரிய வந்துள் ளது.

    கைது

    மேலும் அவரிடம் இருந்த 10 செல்போன்களையும் பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • நாமக்கல் டவுன் போலீஸ் நிலையம் எதிரே துறையூர் சாலையில் வணிக வளாகம் ஒன்று உள்ளது. இங்கு நிதி நிறுவனங்கள் உள்பட பல்வேறு தனியார் நிறுவனங்கள் செயல்படுகின்றன.
    • பெரம்பலூரை சேர்ந்த ஹரிகரன் (வயது 47) என்பவர் மோட்டார் சைக்கிளை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து போலீ சார் அவரை கைது செய்து மோட்டார்சைக்கிளை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் டவுன் போலீஸ் நிலையம் எதிரே துறையூர் சாலையில் வணிக வளாகம் ஒன்று உள்ளது. இங்கு நிதி நிறுவனங்கள் உள்பட பல்வேறு தனியார் நிறுவனங்கள் செயல்படுகின்றன. தினமும் ஊழியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் வேலை நிமித்தமாக இங்கு வந்து செல்வது வழக்கம். இதனால் இந்த வணிக வளாகம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று நாமக்கல்லை சேர்ந்த தனியார் டிரான்ஸ்போர்ட் ஊழியர் வினோத்குமார் என்பவர் வேலை நிமித்தமாக மோட்டார்சைக்கிளில் அங்கு வந்தார். அவர் மோட்டார்சைக்கிளை வணிக வளாகம் வெளியே நிறுத்தி விட்டு உள்ளே சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார்சைக்கிளை காணவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த வினோத்குமார் இது பற்றி நாமக்கல் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இைதயடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்தனர். அதில் பெரம்பலூரை சேர்ந்த ஹரிகரன் (வயது

    47) என்பவர் மோட்டார்

    சைக்கிளை திருடியது தெரிய

    வந்தது. இதையடுத்து போலீ சார் அவரை கைது செய்து மோட்டார்சைக்கிளை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×