search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொக்லைன்"

    • மாநகராட்சி அதிகாரிகள் 3 பொக்லைன் எந்திரங்கள் மூலம் அதிரடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
    • அதிகாரிகளுக்கும் கடைக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் மங்கலம் சாலையில் அதிக அளவில் ஆக்கிரமிப்புகள் இருந்ததால் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாக மாநகராட்சிக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

    இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் கிரியப்பனவர் உத்தரவின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என 2 முறை நோட்டீஸ் வழங்கினர். இருந்தபோதிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருந்தது.


    இந்தநிலையில் இன்று காலை மாநகராட்சி அதிகாரிகள் 3 பொக்லைன் எந்திரங்கள் மூலம் அதிரடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதற்கு ஒரு சில கடைக்காரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் அதிகாரிகளுக்கும் கடைக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினர்.

    • அரசுப்பேருந்து 15க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மேட்டுப்பாளையம் நோக்கி வெள்ளிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தது.
    • பேருந்து ஓட்டுநா் உள்பட 13 போ் பலத்த காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் அன்னூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

    அவிநாசி:

    திருப்பூரில் இருந்து அரசுப் பேருந்து 15க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மேட்டுப்பாளையம் நோக்கி வெள்ளிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தது. கருவலூா் காளிபாளையம் அருகே சென்றபோது, எதிரே வேகமாக வந்த பொக்லைன் வாகனம், அரசுப் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் பேருந்து ஓட்டுநா் உள்பட 13 போ் பலத்த காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் அன்னூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

    இது குறித்து அவிநாசி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். 

    • தாண்டவனூரை சேர்ந்த முத்துசாமி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் இருந்து, மண் எடுத்து சென்றது தெரியவந்தது.
    • இதையடுத்து டிராக்டர் மற்றும் மண் எடுக்க பயன்படுத்திய பொக்லைன் எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, தொளசம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டி பகுதியில் கட்டுமானத்திற்கு தேவைப்படும் கிராவல் மண் கடத்துவதாக சேலம் மாவட்ட கனிம வளம் மற்றும் சுரங்க துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் கனிமவளத்துறை புவியியல் உதவி அலுவலர் பிரசாந்த் மற்றும் அதிகாரிகள் தொளசம்பட்டி பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தாண்டவனூரை சேர்ந்த முத்துசாமி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் இருந்து, மண் எடுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து டிராக்டர் மற்றும் மண் எடுக்க பயன்படுத்திய பொக்லைன் எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, தொளசம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    மேலும் உதவி அலுவலர் பிரசாந்த் கொடுத்த புகாரின்பேரில் மானத்தாள் கிராமத்தை சேர்ந்த சித்துராஜ் (38), உப்பாரப்பட்டியை சேர்ந்த விஜி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் தேடி வருகின்றனர்.

    • மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
    • செம்மண் கடத்தியவர்கள் தப்பி சென்றனர்.

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் அருகே நல்லூர் பகுதியில் அனுமதியின்றி செம்மண் கடத்துவதாக நல்லூர் கிராம அலுவலர் செலஸ்டின் ராஜீக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர் அங்கு விரைந்து சென்று பார்வையிட்ட போது, அங்கு செம்மண் கடத்தியவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதையடுத்து மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் செம்மண் கடத்த பயன்படுத்திய டெம்போ மற்றும் பொக்லைன் எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து செம்மண் கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மேயர் மகேஷ் இன்று தொடங்கி வைத்தார்
    • புதிய எந்தி ரங்களை முறையாக பராமரிக்க வேண்டும்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநக ராட்சியில் குப்பைகளை அப்புறப்படுத்தவும், சாக்கடை அள்ளவும் பொக்லைன் மற்றும் கிட்டாச்சு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வரு கின்றன.

    இந்த நிலையில் மாநகராட்சிக்கு புதிய பொக்லைன், கிட்டாச்சு மற்றும் மினி கிட்டாச்சு ஆகியவை வாங்கப்பட்டு உள்ளது. 15-வது மத்திய நிதி குழுமத்தின் கீழ் ரூ.37.10 லட்சத்தில் பொக்லைன் எந்திரம், ரூ.46.94 லட்சத்தில் கிட்டாச்சு எந்திரம் மற்றும் ரூ.24.09 லட்சத்தில் மினி கிட்டாச்சு எந்திரம் ஆகி யவை வாங்கப்பட்டு உள்ளன.

    இந்த எந்திரங்கள் தொடக்க நிகழ்ச்சி மாநக ராட்சி அலுவலகத்தில் இன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த் மோகன் தலைமை தாங்கினார். மேயர் மகேஷ் பங்கேற்று புதிய எந்தி ரங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் கூறுகை யில், "நாகர்கோவில் மாந கராட்சியை தூய்மை யாக வைத்துக்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை மேலும் தீவிரப்படுத்த தூய்மைப் பணிக்காக பொக்லைன் மற்றும் கிட்டாச்சு எந்தி ரங்கள் வாங்கப்பட்டு உள்ளன.

    எனவே புதிய எந்தி ரங்களை முறையாக பராமரிக்க வேண்டும். குறிப்பிட்ட நாளில் சர்வீஸ் செய்ய வேண்டும்" என்றார்.

    நிகழ்ச்சியில் மாநகராட்சி செயற்பொறியாளர் பால சுப்பிரமணியன், மாநகர் நல அதிகாரி ராம்குமார், கவுன்சிலர்கள் முத்துராமன், ஜவகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×