என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இமாச்சலப் பிரதேசம்"
- மாநில அரசானது தொழிற்பூங்கா அமைக்க இதுவரை ரூ.74.95 கோடி செலவிட்டுள்ளது
- நிதியை ஏற்றால் தொழிலதிபர்களுக்கு இலவசமாக வழங்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படும்
மத்திய அரசு மாநிலங்களுக்கான நிதி பகிர்வில் பாரபட்சம் காட்டிவருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருவது தெரிந்ததே. இந்நிலையில் மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பதற்கான ஒருங்கிணைந்த தொழிற்பூங்கா [Medical Device Park] அமைப்பதற்கு மத்திய அரசு வழங்கிய நிதியை திருப்பி அனுப்பியுள்ள ஹிமாச்சல பிரதேச காங்கிரஸ் அரசு தங்கள் மாநிலத்தின் செலவிலேயே அதை அமைத்துக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.
இதுதொடர்பாக இமாச்சலப் பிரதேச அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநில அரசானது தொழிற்பூங்கா அமைக்க இதுவரை ரூ.74.95 கோடி செலவிட்டுள்ளது. எனவே மாநிலத்தின் விருப்பத்தின்படி, மத்திய அரசிடம் இருந்து வந்துள்ள ரூ.30 கோடியைத் திருப்பி அளிக்க அரசு முடிவெடுத்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தொழிற்பூங்கா அமைப்பதற்கான மொத்த செலவு ரூ.350 கோடியாகும்
இந்த அறிவிப்பு குறித்து பேசிய அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு பேசுகையில், 265 ஏக்கர் பரப்பளவில் இந்த தொழிற்பூங்கா அமைக்கப்பட்டு வரும் நிலையில் மத்திய அரசு வழங்கிய ரூ.30 கோடியை நாங்கள் ஏற்றால், இந்த வளாகத்தில் உள்ள நிலங்களைத் தொழிலதிபர்களுக்கு ஒரு சதுரடி 1 ரூபாய்க்கும், ஒரு யூனிட் மின்சாரம் 3 ரூபாய்க்கும், மற்ற அனைத்து வசதிகளையும் அடுத்த 10 வருடங்களுக்கு இலவசமாகவும் வழங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.
எனவே நாங்களே எங்களது நிதியில் இந்த திட்டத்தை செயல்படுத்தும் பட்சத்தில் அடுத்த 5 முதல் 7 வருடங்களில் மாநில அரசுக்கு ரூ.500 கோடி வரை லாபம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
- ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச நோய்களுக்கு வழங்கப்படும் மாத்திரைகளும் இதில் அடங்கும்
- 52 மருந்துகளில் அதிகபட்சமாக 22 மருந்துகள் இமாச்சலப் பிரதேசத்தில் தயாரிக்கப்படுகின்றன.
மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியம் [CDSCO] கடந்த மே மாதம் நடத்திய பரிசோதனையில் இந்தியாவில் தயாரிக்கடும் 52 மருந்துகள் தரமற்றவை என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த 50 மருந்துகளில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் காய்ச்சல் மருந்தான பாராசிட்டமால், வயிறு சம்பந்தமான அசௌகரியங்களுக்கு உட்கொள்ளப்படும் பென்டோபிரசோல் மற்றும் முன்னணி ஆன்டிபயாட்டிக் மருந்துகளும் உள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுதவிர்த்து வைட்டமின், கால்சியம் சத்துக்கான மாத்திரைகள், மன அழுத்தம் மற்றும் ஹைப்பர் டென்ஷனுக்கு பரிந்துரைக்கப்படும் மாத்திரைகள், ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச நோய்களுக்கு வழங்கப்படும் மாத்திரைகளும் இதில் அடங்கும். இந்த தரமற்ற 52 மருந்துகளில் அதிகபட்சமாக 22 மருந்துகள் இமாச்சலப் பிரதேசத்தில் தயாரிக்கப்படுகின்றன.
இதுதவிர்த்து ஜெய்ப்பூர், ஹைதராபாத், குஜராத், அந்திரப்பிரதேசம், இந்தோர் ஆகிய இடங்களில் மீதமுள்ள மருந்துகள் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கும், மருந்தகங்களுக்கும் விநியோகிக்கப்படுகின்றன.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு மருந்து கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் ஏற்கனவே சந்தையில் உள்ள இந்த 52 மருந்துகளை திரும்பப்பெறும் நடவடிக்கையும் முடுக்கி விடப்பட்டுள்ளது. கடந்த வருடம் இமாச்சலப் பிரதேசத்தில் மட்டுமே தயாரிக்கப்பட்ட 120 மருந்துகள் தரமற்றவை என்று கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- மக்களவை தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
- தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது.
குஜராத், உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய 6 மாநில உள்துறை செயலாளர்களை மாற்ற தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், மேற்கு வங்க மாநில டிஜிபி ராஜீவ் குமாரை இடமாற்றம் செய்யும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கூடுதலாக, மிசோரம் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் பொது நிர்வாகத் துறையின் செயலாளர்களும் தங்கள் பணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் ஏற்கனவே 3 ஆண்டுகள் பணிபுரிந்த மாவட்டங்கள் மற்றும் சொந்த மாவட்டங்களில் இருந்து இடமாற்றம் செய்ய அனைத்து மாநில அரசுகளுக்கும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
மக்களவை தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தியாவில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
- சுக்விந்தர் சிங் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பிரதீபா சிங் ஆகியோரும் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவை டெல்லியில் சந்தித்து பேசினர்.
- முதலமைச்சர் சுக்விந்தர் சிங்கின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் பல அறிவிப்புகளை வெளியிட்டார்.
இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த நவம்பர் மாதம் 12ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சி மொத்தம் 40 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது.
இதையடுத்து, இமாச்சலப் பிரதேசத்தின் புதிய முதலமைச்சராக சுக்விந்தர் சிங் சுகு கடந்த ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றார். மேலும், சட்டசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் முகேஷ் அக்னிஹோத்ரி, துணை முதல்வராக பதவியேற்றார்.
பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, எம்பி ராகுல் காந்தி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற முதலமைச்சர் சுக்விந்தர் சிங்கின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் பல அறிவிப்புகளை வெளியிட்டார்.
இந்நிலையில், சுக்விந்தர் சிங் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பிரதீபா சிங் ஆகியோரும் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவை டெல்லியில் சந்தித்து பேசினர்.
பின்னர் பேசிய சுக்விந்தர் சிங், "இமாச்சலப் பிரதேசத்தில் புதிய அரசை அமைப்பதில் எந்த சவாலும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
புதிய அரசு அமைப்பதில் எந்த சவாலும் இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களைக் கொண்டு அமைச்சரவை அமைக்கப்படுகிறது. முதல்வர் எம்.எல்.ஏ.க்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார். எனவே, எந்த சவாலும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- இமாச்சலப் பிரதேசத்தின் மேம்பாட்டிற்கு மத்திய அரசின் அனைத்து ஒத்துழைப்பை வழங்க நான் உறுதியளிக்கிறேன்.
- புதிய முதல் மந்திரியாக பொறுப்பேற்ற சுக்விந்தர் சிங் சுக்குக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
சிம்லா:
இமாசலபிரதேச மாநில சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கை சென்ற 8-ந் தேதி நடைபெற்றது.
மொத்தம் உள்ள 68 இடங்களில் 40 இடங்களில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இதனையடுத்து, சிம்லாவில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக (முதல்-மந்திரியாக) சுக்விந்தர் சிங் சுக்குவும் (வயது 58), துணை முதல்-மந்திரியாக முகேஷ் அக்னிகோத்ரியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இமாசலபிரதேச மாநிலத்தின் புதிய முதல்-மந்திரியாக சுக்விந்தர்சிங் சுக்கு இன்று பதவி ஏற்றார்.
இந்நிலையில், புதிய முதல் மந்திரியாக பொறுப்பேற்றுள்ள சுக்விந்தர் சிங் சுக்குக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இமாச்சல பிரதேச முதல் மந்திரியாக பொறுப்பேற்றுள்ள ஸ்ரீ சுக்விந்தர்சிங் சுகுவுக்கு வாழ்த்துக்கள். இமாச்சலப் பிரதேசத்தின் மேம்பாட்டிற்கு மத்திய அரசின் அனைத்து ஒத்துழைப்பை வழங்க நான் உறுதியளிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
- இவர் உக்ரைன் நாட்டில் மருத்துவ படிப்பு இறுதியாண்டு படித்த போது போர் ஏற்பட்டதால் இந்தியா திரும்பினார்.
- இந்தியாவில் மற்றொரு தேர்வு எழுதுவதற்காக டெல்லியில் தங்கி பயின்று வந்தார்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் ஆல்வின் நாயகம். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் வில்லியம்.
இவர் உக்ரைன் நாட்டில் மருத்துவ படிப்பு இறுதியாண்டு படித்த போது போர் ஏற்பட்டதால் இந்தியா திரும்பினார். இதுதொடர்பாக இந்தியா வில் மற்றொரு தேர்வு எழுதுவதற்காக டெல்லியில் தங்கி பயின்று வந்தார்.
இதற்கிடையே தனது நண்பர்கள் 6 பேருடன் இருசக்கர வாகனத்தில் இமாச்சலபிரதேசத்துக்கு சுற்றுலா சென்றார். அப்போது அங்கு எதிர்பா ராத விதமாக ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் மாணவன் வில்லியம் பரிதா பமாக பலியானார். இதுபற்றி தகவல் அறிந்த அவரது தந்தை வெளி நாட்டிலிருந்து தாயகம் வருகிறார். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. விபத்தில் பலி யான மாணவர் வில்லியமின் தாயார் ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து போனார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்