search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆட்கொணர்வு மனு"

    • சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல்
    • போலீஸ் சூப்பிரண்டு யோகா மையத்துக்கு நேரில் சென்று ஆய்வு.

    கோவை:

    கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள தனது 2 மகள்களை மீட்டுதருமாறு கூறி கோவையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற விஞ்ஞானி காமராஜ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார்.

    இந்த மனு மீதான விசாரணை நேற்று ஐகோர்ட்டில் நடந்தது. நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் வழக்கு தொடர்பாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.

    மேலும் ஈஷா யோகா மையம் மீது எத்தனை குற்றவழக்குகள் உள்ளன? என்ற விவரங்களை போலீசார் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை வருகிற 4-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

    ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் போலீசார் ஈஷா யோகா மையத்துக்கு இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    அவர்களுடன் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி அம்பிகாவும் சென்று விசாரணை நடத்தினார். விசாரணை அறிக்கை விவரங்களை போலீசார் ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளனர்.

    • சாரங்கபாணி மகன் ஜெகவீரப்பாண்டியன் என்பவருக்கும் கடந்த 2016 ல் திருமணம் நடைபெற்றது.
    • புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    கடலூர்:

    விருத்தாச்சலம் தாலுக்கா நடியப்பட்டு கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் மகள் வனிதா என்பவருக்கும் பண்ருட்டி தாலுக்கா மேலிருப்பு கிராமம் சாரங்கபாணி மகன் ஜெகவீரப்பாண்டியன் என்பவருக்கும் கடந்த 2016 ல் திருமணம் நடைபெற்றது. அதன்பின்னர் 2 வருடம் வாழ்ந்த அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனது மனைவி வனிதாவினால் தனக்கும் தனது குடும்பத்தில் உடன் பிறந்த சகோதரர் சகோதரிகளுக்கும் பிரச்சனை அடிக்கடி வருவதை தவிர்க்க வேண்டி தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது மனுதாரர் வனிதா தனது கணவரை காணவில்லை என காடாம்புலியூர் போலீஸ் நிலையத்தில் கடந்த 23.01.2019 ல் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு காணாமல் போனவரை கண்டுபிடித்து வனிதாவிடம் ஒப்படைக்கப்பட்டது. பிறகு அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு வனிதா பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தி்ல் தனது கணவர் அவரது குடும்பத்துடன் சேர்ந்து வரதட்சணை கேட்டுதுன்புறுத்துவதாக போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அன்றைய தினமே வனிதாவின் கணவர் ஜெகவீரபா ண்டியன் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து வெளி வந்தவர் நிபந்தனை ஜாமினின் பேரில் 30 நாட்கள் தினந்தோறும் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டுள்ளார். தற்போது 2022 ஆம் ஆண்டு மே மாதம் வெளிநாடு (கத்தார்) சென்று விட்டார்.

    இந்த தகவல் அவரது மனைவி வனிதாவிற்கு நன்குதெரியும் ஆனால் அவர் வெளிநாடு சென்றது பிடிக்காமல் அவரக்கு மன உளைச்சல் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் .மேற்படி வனிதா 23.11.2022 ந் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் 2019 ல் காடாம்புலியூர் காவல் நிலையத்தில் தனது கணவரை காணவில்லை என கொடுத்த புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தனது கணவர் உயிருடன் உள்ளாரா அல்லது உறவினர்களால் கொல்லப்பட்டாரா என ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இது சம்மந்தமாக காடாம்புலியூர் காவல் துறையினர் மேலிருப்பு கிராமம் சென்று ஜெகவீரபாண்டியனின் உறவினர்களிடம் விசாரணை செய்ததில் அவர் வெளிநாடு கத்தாரில் உள்ளதாகவும், அவருடன் வீடியோ காலில் பேசி அவருக்கும் அவரது மனைவிக்குமான பிரச்சனைக்கான காரணம் அறிந்து அவர் பேசிய வீடியோ வாக்குமூல பதிவினை பதிவு செய்யப்பட்டது. இந்த பதிவினை போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி அரசு தரப்பு வழக்கறிஞரிடம் சமர்ப்பித்த உடன் நீதிமன்றம் சார்பில் மேற்படி காணாமல் போன ஜெகவீரபாண்டியனிடம் வீடியோ காலில் பேசி உண்மை தன்மையை வெளிப்படுத்தினார். இதனை உயர் நீதிமன்ற நீதிபதி அவர்கள் உண்மையை புரிந்து கொண்டு மேற்படி மனுதாரர் மீது நீதிமன்ற நேரத்தை வீணடித்ததாலும் காவலர்களை அலைக்க ழித்ததாலும் உண்மைக்கு புறம்பான மனுவினை சுய லாபத்திற்க்காக பயன்படுத்தியதற்க்காக ரூ. 50,ஆயிரம்அபராதம் 4 வார காலத்திற்க்குள் கட்ட வேண்டும். அப்படி தவறு்ம் பட்சத்தில் சிறைதண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் மேலும் இந்த மனு வினை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். 

    ×