என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "எழுத்து"
- 2 ஆண்டுகள் என்.சி.சி. பயிற்சி முடித்த மாணவ, மாணவியர்களுக்கு எழுத்து மற்றும் செய்முறை தேர்வு ஈரோடு 15-வது பட்டாலியன் சார்பில் எஸ்.எஸ்.எம்.லட்சுமியம்மாள் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது.
- எழுத்து தேர்வுக்கு 350 மதிப்பெண்கள், செய்முறை தேர்வுக்கு 150 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.
குமாரபாளையம்:
2 ஆண்டுகள் என்.சி.சி. பயிற்சி முடித்த மாணவ, மாணவியர்களுக்கு எழுத்து மற்றும் செய்முறை தேர்வு ஈரோடு 15-வது பட்டாலியன் சார்பில் எஸ்.எஸ்.எம்.லட்சுமியம்மாள் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. எழுத்து தேர்வுக்கு 350 மதிப்பெண்கள், செய்முறை தேர்வுக்கு 150 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. செய்முறை தேர்வில் துப்பாக்கியை பிரித்து பூட்டுதல், பாகங்கள் கண்டறிதல், தூரத்தை கணக்கிடுதல், வரைபட பயிற்சி, அணி வகுப்பு பயிற்சி உள்ளிட்டவைகள் செயல்படுத்தி காட்டுவார்கள். ஈரோடு 15-வது பட்டாலியன் சார்பில் கமாண்டிங் அலுவலர் ஜெய்தீப், நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, உத்தரவின்படி சுபேதார் அன்பழகன் தலைமை வகிக்க, ஹவில்தார் விக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் தேர்வினை நடத்தினர். இந்த தேர்வில் எஸ்.எஸ்.எம். லட்சுமியம்மாள் மெட்ரிக் பள்ளி, ஜே.கே.கே. ரங்கம்மாள் மேல்நிலைப்பள்ளி, சித்தோடு அரசு மேனிலைப்பள்ளி, குமாரபாளையம் அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி, பர்கூர் பழங்குடியினர் அரசு உண்டு உறைவிடப்பள்ளி ஆகிய பள்ளிகளை சேர்ந்த 146 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். என்.சி.சி. அலுவலர்கள்
அந்தோணிசாமி, சிவகுமார், நீலாம்பாள், முருகேசன், ராஜேஷ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
- தமிழகம் முழுவதும் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் வருவாய் அலகில் காலியாக உள்ள கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு வருகிற 4-ந்தேதி எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது.
- விண்ணப்பதாரர்கள் தங்களது அனுமதி சீட்டினை http://agaram.tn.gov.in/onlineforms/formpage_open.php?id=43-174 என்ற இணையதள முகவரி மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
சேலம்:
தமிழகம் முழுவதும் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் வருவாய் அலகில் காலியாக உள்ள கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு வருகிற 4-ந்தேதி எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது.
சேலம் மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள 119 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பதா ரர்களுக்கும், மாவட்ட வேலைவாய்ப்பகம் மற்றும் முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலம் பெறப்பட்ட பட்டியலில் உள்ள ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும் எழுத்துத் தேர்வு நடத்தப்பட உள்ளது.
இணையவழியில் பதிவு செய்து ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத்தேர்வில் கலந்து கொள்ள விண்ணப்பத்தில் பதிவு செய்த கைபேசி எண், மின்னஞ்சல் முகவ ரிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதன் மூலம் அனுமதிச்
சீட்டினை விண்ணப்ப தாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள
லாம் அல்லது கிராம உதவியா ளர் பணிக்கு இணைய வழியில் விண்ணப்பித்த இணையதள முகவரியான https://agaram.tn.gov.in/onlineforms/formpage_open.php?id=43-174 என்ற இணைய தளத்தினுள் சென்று பதிவு எண்ணினையும், கைப்பேசி எண்ணையும் பதிவு செய்து அனுமதிச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாவட்ட வேலைவாய்ப்பகம் மற்றும் முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலம் பெறப்பட்ட பட்டியலில் உள்ள ஏற்கப்பட்ட விண்ணப்ப
தாரர்களுக்கு தபால் மூலம் தேர்வு அனுமதிச் சீட்டு அனுப்பி வைக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
இதே போல நாமக்கல் மாவட்டத்தில், கிராம உதவி யாளர் பணியிடம் நிரப்புவது தொடர்பாக, இணையதளம் வாயி லாக வரப்பெற்ற விண்ணப்பங்களை பரிசீ லனைசெய்து தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் கைபேசி எண்ணிற்கும், மின்னஞ்சல்
முகவரிக்கும், குறுஞ்செய்தி யாக அனுப்பப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களது அனுமதி சீட்டினை http://agaram.tn.gov.in/onlineforms/formpage_open.php?id=43-174 என்ற இணையதள முகவரி மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இந்த தேர்வுக்காக கொல்லிமலை வட்டாட்சியர் அலுவலகம், நாமக்கல் மோகனூர் சாலை அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, சேந்தமங்கலம் ரெட்டிபட்டி பாரதி மேல்நிலைப்பள்ளி, மோகனூர் அணியாபுரம் எஸ்.ஆர்.ஜி. பொறியியல் கல்லூரி, பரமத்திவேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரி, வேலூர், குமாரபாளையம் ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி, திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி, கே.எஸ்.ஆர். தொழில்நுட்ப கல்லூரி. கே.எஸ்.ஆர். கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி ஆகிய இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
தேர்வு அனுமதி சீட்டு பெற்றுக்கொண்டவர்கள், 4-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்குள் தங்க ளுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்கு அனுமதி சீட்டுடன் வரவேண்டும். தேர்வு எழுத கருப்புமை கொண்ட பால்பாயிண்ட் பேனாவை மட்டுமே விண்ணப்பதாரர்கள் பயன்ப டுத்த வேண்டும். அனுமதி சீட்டு மற்றும் கருப்புமை கொண்ட பால்பாயிண்ட் பேனாவை தவிர வேறு எந்த பொருட்களையும் தேர்வு அறைக்குள் கொண்டு வரக்கூடாது. செல்போன், புத்தகங்கள், கைப்பைகள் மற்றும் வேறு எந்த ஒரு மின்னணு சாதனங்களையும் தேர்வு மையத்திற்குள் கொண்டுவரக் கூடாது என்று மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்து உள்ளார்.
- தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வா ணையம், காவல்துறையில் 2-ம் நிலை காவலர், தீயணைப்பு வீரர், சிறைக்கா வலர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நாளை நடத்துகிறது.
- சேலம் மாவட்டத்தில் 19,532 ஆண்கள், 1430 பெண்கள் என 22 மையங்களில் 20,962 பேர் இத்தேர்வை எழுதுகின்றனர்.
சேலம்:
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வா ணையம், காவல்துறையில் 2-ம் நிலை காவலர், தீயணைப்பு வீரர், சிறைக்கா வலர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நாளை நடத்துகிறது. சேலம் மாவட்டத்தில் 19,532 ஆண்கள், 1430 பெண்கள் என 22 மையங்களில் 20,962 பேர் இத்தேர்வை எழுதுகின்றனர்.
இந்த எழுத்து தேர்வில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோதா கூறியுள்ளதாவது: -
நாளை காலை 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே தேர்வு மையத்திற்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 10 மணிக்கு மேல் வருபவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வுக் கூட அனுமதிச் சீட்டினை கொண்டு வராதவர்கள் மையத்திற்குள் அனும திக்கப்பட மாட்டார்கள். அழைப்பு கடிதம் கிடைக்கப் பெறாத விண்ணப்ப தார்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய இணைய தளத்தில் (www.tnusrb.tn.gov.in) இருந்து அழைப்பு கடித நகலை பதிவிறக்கம் செய்து, தேர்வு மையத்திற்கு கொண்டு வர வேண்டும். தேர்வுக் கூட நுழைவு சீட்டில் விண்ணப்பதாரரின் புகைப்படங்கள் இல்லா மல் இருந்தாலோ அல்லது தெளிவாக இல்லாமல் இருந்தாலோ விண்ணப்பதாரர் தங்களது புகைப்படத்தினை ஒட்டி அல்லது பி பிரிவு அதிகாரியிடம் சான்று
ஒப்பம் பெற்று வரவேண்டும்.
விண்ணப்பதாரர் புகைப்படத்துடன் கூடிய அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டையான ஆதார், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒரு அசலை கொண்டு வர வேண்டும். செல்போன், எலக்ட்ரானிக் வாட்ச், கால்குலேட்டர் மற்றும் எந்தவித எலக்ட்ரானிக் உப கரணங்களும் அறைக்குள் எடுத்து வரக்கூடாது. கருப்பு அல்லது நீலநிற பந்துமுனை பேனாகொண்டு வரவேண்டும். வேறு எந்த வித சொந்த உடமைகளை கொண்டு வர கூடாது. 22 தேர்வு மையங்களிலும் வீடியோ கேமராக்கள் மூலம் ஒளிப்பதிவு செய்து தேர்வு கண்காணிக்கப்படும்.
இவ்வாறு போலீஸ் கமிஷனர் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்