என் மலர்
நீங்கள் தேடியது "தக்காளி விலை வீழ்ச்சி"
- ஒரு கூடை தக்காளி 50 ரூபாய் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- விவசாயிகள் தோட்டங்களில் தக்காளி பழங்களை பறிக்காமல் அப்படியே விட்டு உள்ளனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டத் தில் தேன்கனிக்கோட்டை, தளி, கெலமங்கலம், உத்தனப்பள்ளி, ராயக்கோட்டை, சூளகிரி ஆகிய பகுதிகளில் தக்காளிகள் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இங்கிருந்து தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரா ஆகிய பகுதிகளுக்கு தக்காளிகள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டு வரும் தக்காளி பழங்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. கடந்த காலங்களில் ஒரு கூடை தக்காளி பழங்கள் 1500 முதல் 2000 ரூபாய் வரை விற்பனையான நிலையில் தற்போது ஒரு கூடை தக்காளி 50 ரூபாய் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
தக்காளி அதிக அளவில் விளைச்சல் இருப்பதால் உற்பத்தி அதிகரித்து விலை வீழ்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் வேதனை அடைந்த தக்காளி விவசாயிகள் தோட்டங்களில் தக்காளி பழங்களை பறிக்காமல் அப்படியே விட்டு உள்ளனர். மேலும் பல விவசாயிகள் சாலையோரம் தக்காளி பழங்களை வீசி விட்டு செல்கின்றனர். சாலை ஒரங்களில் கிடக்கும் தக்காளி பழங்களை ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் விட்டு மேய்த்து வருகின்றனர்.
- கடந்த சில நாட்களாக தக்காளி விலை ஏற்ற இறக்கத்துடன் விற்பனையாகி வந்தது.
- தக்காளியை மூட்டை மூட்டையாக சந்தைக்கு வெளியே கொட்டினர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், பட்டி கொண்டாவில் தக்காளி மொத்த விற்பனை சந்தை உள்ளது. விவசாயிகள் அப்பகுதியில் விளைவிக்கும் தக்காளிகளை சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம்.
இந்த நிலையில் ஏராளமான விவசாயிகள் தக்காளியை விற்பனைக்கு கொண்டு வந்தனர். தக்காளியை மொத்தமாக வாங்கும் வியாபாரிகள் ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய் என விலை நிர்ணயம் செய்தனர்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த விவசாயிகள், வியாபாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தரமான தக்காளி குறைந்த விலைக்கு ஏலம் விடுவதாகவும், வியாபாரிகள் உரிய விலை நிர்ணயம் செய்யாமல் ஏமாற்றுவதாக குற்றம் சாட்டினர்.
பின்னர் தாங்கள் விற்பனைக்கு கொண்டு வந்த தக்காளியை மூட்டை மூட்டையாக சந்தைக்கு வெளியே கொட்டினர். அங்கிருந்த சிறு வியாபாரிகள் போட்டி போட்டு தக்காளியை மூட்டைகளில் அள்ளிச்சென்றனர்.
தக்காளிக்கு உரிய விலை வழங்க வேண்டும் என கூறி பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில்:-
கடந்த சில நாட்களாக தக்காளி விலை ஏற்ற இறக்கத்துடன் விற்பனையாகி வந்தது.
தற்போது சிறு வியாபாரிகள் தரம் இல்லாத தக்காளிகளை விரும்பி வாங்கி செல்கின்றனர். இதனால் தரமான தக்காளிக்கும் அதே விலை நிர்ணயிக்க வேண்டி உள்ளதாக தெரிவித்தனர்.
- மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது.
- விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பாலக்கோடு:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, பெல்ரம்பட்டி, பொப்பிடி, சோமனஅள்ளி, மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, பேளாரஅள்ளி, எலங்காலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது.
விவசாயிகள் தக்காளியை அறுவடை செய்து பாலக்கோடு மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
இங்கு இருந்து வியாபாரிகள் தக்காளியை வாங்கி தேனி, திண்டுக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வருகின்றனர். பாலக்கோடு மார்க்கெட்டில் ரகத்திற்கு ஏற்ப தக்காளியை விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் வாங்குகின்றனர்.
இந்தநிலையில் பாலக்கோடு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தக்காளி விளைச்சல் அதிகமாக உள்ளது. இதனால் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது.
நாள் ஒன்றுக்கு 300 டன் அளவுக்கு தக்காளி விற்பனைக்காக வருவதால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
மார்க்கெட்டில் 15 கிலோ எடை கொண்ட ஒரு கூடை தக்காளி ரூ.280- க்கும். சில்லரையாக ஒரு கிலோ ரூ.18-க்கும் விற்பனையாகிறது. தருமபுரி உழவர் சந்தையில் இன்று ரூ.18-க்கு தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மாதம் ஒரு கிலோ ரூ.70-க்கு விற்பனையான தக்காளி தற்போது விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தக்காளி வரத்தும் அதிகரித்துள்ளது, மேலும் பண்டிகை மற்றும் சுபமு கூர்த்த தினங்கள் இல்லாத தாலும் விலை சரிந்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.