என் மலர்
நீங்கள் தேடியது "கண்நோய்"
- அடினோ வைரஸ் என்ற வைரஸ் பாதிப்பால் ஏற்படுகிறது.
- தும்மல், இருமல் மூலமாக ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவுகிறது.
சென்னை:
சென்னையில் மெட்ராஸ் - ஐ கண்நோய் பாதிப்பு வேகமாக பரவுகிறது. ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வருபவர்களில் 50 சதவீதம் பேர் மெட்ராஸ் - ஐ பாதிப்புக்கு சிகிச்சை பெற வருவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
கோடை காலம் தொடங்கி இருப்பதால் தற்போது சென்னையில் மெட்ராஸ் - ஐ எனப்படும் கண் தொற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கண் எரிச்சல், வெளிப்பகுதி சிவந்து காணப்படுதல், கண்ணில் இருந்து நீர் வந்து கொண்டே இருப்பது, இமைப்பகுதி ஒட்டிக்கொள்ளுதல் ஆகியவை மெட்ராஸ்-ஐ பாதிப்பின் அறிகுறிகள் ஆகும்.
இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக கண் டாக்டரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். அந்த வகையில், சென்னையில் கண் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வருபவர்களில் 50 சதவீதம் பேர் மெட்ராஸ் - ஐ பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து, கண் சிகிச்சை நிபுணர் டாக்டர் யஷ்வந்த் ஆர்.ராஜகோபால் கூறியதாவது:-
மழை மற்றும் வெயில் காலத்தில் காலநிலை மாறும்போது மெட்ராஸ் - ஐ பாதிப்பு பரவுகிறது. அடினோ வைரஸ் என்ற வைரஸ் பாதிப்பால் இது ஏற்படுகிறது. தும்மல், இருமல் மூலமாக ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவுகிறது.
நோய் பாதிப்பு ஏற்பட்டவரின் கண்களை பார்ப்பதால் இந்த நோய் பரவாது. தொடுதல் மூலமாகவே பரவும். மெட்ராஸ்-ஐ தொண்டை மற்றும் கண் ஆகிய 2 உறுப்புகளையும் பாதிக்கும்.
10 முதல் 14 நாட்களில் இது தானாகவே சரியாகிவிடும். இதை தடுக்க கைகளை கழுவுதல், முகக் கவசம் அணிவது, சத்தான உணவுகளை எடுத்தல் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும்.
மெட்ராஸ் - ஐ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தானாக மருந்து எடுத்துக்கொள்ளக்கூடாது. சிலர் கண்களுக்கு தாய்ப்பால் ஊற்றினால் சரியாகிவிடும் என்று நினைத்து அதை பயன்படுத்துகிறார்கள். அவ்வாறு செய்தால் பாதிப்பு அதிகரித்துவிடும்.
கூட்டம் கூடும் இடங்களுக்கு செல்லுவதை தவிர்க்க வேண்டும். தற்போது பள்ளி மாணவர்கள் மூலம் அதிகமாக பரவுகிறது. எனவே, மாணவர்களை ஆசிரியர்கள் கண்காணிப்பது அவசியம். மெட்ராஸ் - ஐ பாதிப்பு அறிகுறி தெரியும் பட்சத்தில் அவர்களை உடனடியாக வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மெட்ராஸ்-ஐ எனப்படும் கண்நோய் பாதிப்பு தென்காசியில் வேகமாக பரவி வருகிறது.
- தட்ப வெப்பநிலை காரணமாகவே மெட்ராஸ்-ஐ அதிகரித்து வருவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
தென்காசி:
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை தொடர்ந்து தென்காசி மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையே மெட்ராஸ்-ஐ எனப்படும் கண்நோய் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. இதற்குள்ளான மாணவர்களை விடுப்பு எடுத்துக்கொள்ள பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் அறிவுறுத்தி வருகிறது.
தட்ப வெப்பநிலை
இந்த பாதிப்பானது திடீர் மழை மற்றும் வெயில் என தட்ப வெப்பநிலை மாறி மாறி ஏற்பட்டு வருவதன் காரணமாகவே அதிகரித்து வருவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த முறை தென்காசியில் வழக்கத்தைவிட அதிகமானோர் இந்த கண்நோய்க்கு பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்களில் எரிச்சலுடன் அரிப்பும், கண்கள் சிவப்பு நிறமாக மாறுவதும், கண்ணில் வீக்கம், உறுத்தல், கண்களில் நீர் வடிதல் உள்ளிட்டவை இதன் அறிகுறிகளாக கருதப்படுகிறது. இந்த பாதிப்பு பாதிக்கப்பட்டவரின் உடமைகளை நேரடியாக தொடுவதன் மூலம் பரவலாம்.
தடுக்கும் வழிமுறைகள்
இந்த பரவலை தடுக்க கண் வலிக்கும் போது, தான் பயன்படுத்தும் பொருட்களை மற்றவரோடு பகிர்ந்து கொள்ளக் கூடாது. தனியாக சோப்பு, துண்டு போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும். கண்வலி உள்ளவர்களைப் பார்ப்பதாலேயே இது ஒட்டிக் கொள்ளாது.
ஒவ்வொரு முறை உங்கள் கண்களை சுத்தம் செய்த பிறகும், கையை சோப்பு போட்டு கழுவ வேண்டும். வெளியில் சென்று வந்தவுடன் கை, முகம் ஆகியவற்றை சோப்பு போட்டு கழுவுங்கள் என மாணவ-மாணவிகளுக்கு டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.