என் மலர்
நீங்கள் தேடியது "அனுராக் தாக்குர்"
- ஆசிய பசிபிக் ஒளிபரப்புக்கான ஐக்கிய பொது சபைக்கூட்டத்தில் மத்திய மந்திரி அனுராக் தாக்குர் பங்கேற்றார்.
- அப்போது பேசிய அவர், ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் செய்தி வெளியிட வேண்டும் என கூறினார்.
புதுடெல்லி:
ஆசிய பசிபிக் ஒளிபரப்புக்கான ஐக்கிய பொது சபைக்கூட்டத்தில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை மந்திரி அனுராக் தாக்குர் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
நிலநடுக்கம், தீ விபத்து மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் போன்றவற்றுடன் தொடர்புடைய செய்திகளை ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் வெளியிட வேண்டும்.
பயங்கரவாத தாக்குதல் தொடர்புடைய செய்திகளை லைவாக வெளியிடும்போது, தாக்குதல் நடத்துபவர்களுக்கு வழிகாட்டும் வகையிலான தடயங்களை அளிப்பதோ, அவர்களின் தவறான நோக்கங்களுக்கு இடமளித்து விடக்கூடாது என்பது உறுதி செய்து கொள்ளப்பட வேண்டும்.
உலகம் முழுவதும் கொரோனா நெருக்கடியானது நம் அனைவருக்கும் சோதனையான காலகட்டமாக உள்ளது.
ஊரடங்கின்போது வெளியுலகுடன் மக்களை இணைக்கும் பணியை ஊடகங்கள் செய்தன. அதுபோன்ற தருணங்களில் சரியான மற்றும் தக்க தருணத்தில் தகவல்களை வழங்குவது என்பதும் ஊடகங்களின் கடமையாகும் என தெரிவித்துள்ளார்.
- நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில் இந்தியா, லெபனான் அணிகள் மோதின.
- இதில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என இந்தியா வென்றது.
பெங்களூரு:
14-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரையிறுதியில் இந்தியா, லெபனான் அணிகள் மோதின.
போட்டியின் ஆரம்பம் முதல் இரு அணிகளும் ஆதிக்கம் செலுத்தின. முதல் பாதியில் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. இரண்டாவது பாதியிலும் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது.
கூடுதல் நிமிடத்தில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் வெற்றியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. பெனால்டி ஷூட் அவுட்டில் இந்தியா தனது முதல் 4 வாய்ப்புகளை கோலாக்கியது. ஆனால் லெபனான் அணி 4 வாய்ப்புகளில் 2-ஐ வீணடித்தது. இதன்மூலம் இந்திய அணி 4 - 2 என்ற கணக்கில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
வரும் 4 ம் தேதி நடக்க உள்ள இறுதிப்போட்டியில் இந்தியா - குவைத் அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில், தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய அணிக்கு விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்குர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க 3 இந்திய வீராங்கனைகளுக்கு சீனா அனுமதி மறுத்துள்ளது.
- மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்குர், தனது சீன பயணத்தை ரத்து செய்துள்ளார்.
புதுடெல்லி:
ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் தொடங்குகின்றன. தொடக்க விழா நடைபெறுவதற்கு முன்னதாகவே கால்பந்து, கிரிக்கெட், வாலிபால், பீச் வாலிபால் உள்ளிட்ட சில போட்டிகள் தொடங்கி விட்டது.
இதற்கிடையே, ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த 3 வீராங்கனைகளுக்கு சீனா அனுமதி மறுத்துள்ளது. 3 வீராங்கனைகள் பங்கேற்க அனுமதி மறுத்ததற்காக சீனாவிற்கு இந்தியா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் பங்கேற்கவிருந்த மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்குர், தனது சீன பயணத்தை ரத்து செய்துள்ளார்.
இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தை சீனா உரிமை கொண்டாடி வரும் நிலையில், வீராங்கனைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- தெலுங்கானாவில் வரும் 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.
- வாரங்கல் பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் மத்திய மந்திரி அனுராக் தாக்குர் பங்கேற்றார்.
ஐதராபாத்:
119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.
இந்நிலையில், தெலுங்கானாவின் வாரங்கல் பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் மத்திய மந்திரி அனுராக் தாக்குர் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
மக்கள் மத்தியில் ஆளும் கட்சி மற்றும் கே.சி.ஆர். மீது அதிக கோபம் உள்ளது. வாரிசு அரசியலாலும் ஊழலாலும் மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.
காளேஸ்வரம் திட்ட ஊழல் முதல் டெல்லியின் கலால் கொள்கை ஊழல் வரை கே.சி.ஆர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் வெளிவந்துள்ளன.
கர்நாடகா மற்றும் இமாச்சல பிரதேசத்தில் போலி வாக்குறுதிகளை அளித்து காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது. ஓராண்டுக்குள் அவர்களின் அரசும், உத்தரவாதமும் தோல்வி அடைந்தது.
காங்கிரசும், கே.சி.ஆரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள், இருவரும் ஊழல்வாதிகள் மற்றும் பொய்யான வாக்குறுதிகளை வழங்குகிறார்கள் என தெரிவித்தார்.
- துணை ஜனாதிபதி போல மிமிக்ரி செய்து, கிண்டல் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
- அவர்கள் மன்னிப்பு கேட்பதற்கு பதிலாக குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் என்றார் மத்திய மந்திரி.
சென்னை:
எம்.பி.க்கள் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சியினர், பாராளுமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் போல மிமிக்ரி செய்து, கிண்டல் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில், மத்திய மந்திரி அனுராக் தாக்குர் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ராகுல் காந்தி முதிர்ச்சி அற்றவர், தீவிரம் காட்டாதவர், ஜனநாயகமற்றவர். வீட்டிலோ அல்லது வெளியிலோ எதுவாக இருந்தாலும், இது வெட்கக் கேடான செயல்.
அவரது செயலாலோ, பேச்சாலோ பிரதமரை பலமுறை விமர்சித்துள்ளார். ராகுல் காந்தி செய்த செயலை நாடு மன்னிக்காது.
ஒரு எம்.பி. தவறான செயலில் ஈடுபட்டிருந்தால், அவருடன் இணைவதை விட அவரை நிறுத்தியிருக்க வேண்டும். மன்னிப்பு கேட்பதற்கு பதிலாக, குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் என தெரிவித்தார்.
- மக்களின் நீண்ட நாளைய காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது.
- 140 கோடி மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.
சிம்லா:
மத்திய மந்திரி அனுராக் தாக்குர் இமாசல் பிரதேசத்தின் ஹமீர்புரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
60 ஆண்டுகளாக காங்கிரஸ் செய்ய முடியாத பணியை பிரதமர் நரேந்திர மோடி அரசு 10 ஆண்டுகளில் செய்துள்ளது.
செய்த பணிகளை மக்களிடம் கொண்டு செல்வது கட்சி தொண்டர்களின் தலையாய பொறுப்பு.
நீண்ட நாளைய காத்திருப்பு முடிவுக்கு வந்தது. 140 கோடி மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.
தேசத்தில் பிறந்தது முதல் இன்று வரை சித்தாந்தத்தைக் கடைப்பிடித்து வரும் ஒரே அரசியல் கட்சி பா.ஜ.க. மட்டுமே என்பது நிரூபணமானது என தெரிவித்தார்.
#WATCH | Hamirpur: Union Minister Anurag Thakur said, "...PM Narendra Modi's government has done the work in 10 years which Congress could not do for 60 years...It is the main responsibility of the party workers to convey the work that has been done to the people...
— ANI (@ANI) January 23, 2024
On the Pran… pic.twitter.com/nRbIo5ZGNR
- கேரளாவில்கூட ஓட்டு சதவீதம் எங்களுக்கு உயர்ந்து இருக்கிறது
- நாட்டை விற்கும் காங்கிரசுக்கு ஓட்டு போட மாட்டார்கள்.
புதுடெல்லி:
மத்திய தகவல் ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி அனுராக்சிங் தாக்குர் டெல்லியில் 'தினத்தந்தி' உள்பட பிராந்திய மொழி பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
18-வது மக்களவைக்கான தேர்தல் நடக்கிறது. உலகமே இந்தியாவை உற்றுநோக்கிக்கொண்டிருக்கிறது. ஒரு நாட்டுக்கு தொடர்ச்சியான, நிலையான தலைமை வேண்டும். தொடர்ச்சியான, நிலையான ஆட்சி மிகவும் அவசியம். தலைவராக இருப்பவர் நேர்மையாக இருக்க வேண்டும்.
பிரதமர் மோடி நேர்மையான, மூத்த மற்றும் முதிர்ந்த அனுபவம் மிக்க தலைவர். கடந்த 10 ஆண்டுகளில் சாலைகள், சுரங்கப்பாதைகள், ரெயில்பாதைகள் போன்ற உள்கட்டமைப்புகளை தந்திருக்கிறார். ரபேல், தேஜஸ் போன்ற விமானங்களை நாமே தயார் செய்கிறோம். ராணுவ ஆயுதங்களையும் நாமே தயாரிக்கிறோம். எனவே இந்த ஆட்சியின் தொடர்ச்சி நாட்டுக்கு தேவை.
தமிழ்நாட்டை கடந்த தேர்தலை வைத்து ஏன் பார்க்கிறீர்கள்? இந்த தேர்தலை பாருங்கள். பா.ஜனதாவுக்கு தமிழ்நாட்டில் மிகுந்த எழுச்சி தெரிகிறது. பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் செங்கோலை வைத்தார். காசி தமிழ் சங்கமம், சவுராஷ்டிரா தமிழ் சங்கமங்கள் நடத்தினார். பேசிய இடங்களில் எல்லாம் திருவள்ளுவரின் திருக்குறளை கோடிட்டு காட்டினார். தமிழிலும் பேசுகிறார். ராமர்கோவில் சிலை பிரதிஷ்டை விழாவின்போதும், அதன்பிறகும் பலமுறை தமிழ்நாடு சென்றிருக்கிறார். தமிழ்நாடு மீது அவர் மிகுந்த கவனம் செலுத்துகிறார்.
இந்த காரணங்களால் பா.ஜனதா அங்கு வெற்றி பெறும். தமிழ்நாட்டின் மீது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. அதிக இடங்கள் கிடைக்கும். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இரட்டை இலக்கத்தில் இடங்கள் கிடைக்கும்.
கேரளாவில்கூட ஓட்டு சதவீதம் எங்களுக்கு உயர்ந்து இருக்கிறது. மக்கள் அங்கு அமைதியான அரசியலை விரும்புகிறார்கள். மத்தியில் நல்ல ஆட்சியால் பா.ஜனதா அங்கு வளர்ந்துள்ளது. எனவே இந்த முறை பெரிய மாற்றம் அங்கு வரும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
இதைப்போல ஒடிசாவிலும் ஆட்சிக்கு வருவோம். ஆந்திராவில் எம்.பி.க்கள் எண்ணிக்கையும் அதிகம் ஆகும். ஆட்சியையும் பா.ஜனதா கூட்டணியே பிடிக்கும். ஜெகன்மோகன் ரெட்டிக்கு மாற்றாக மக்கள் பா.ஜனதா கூட்டணியை விரும்புகிறார்கள். தெலுங்கானாவில் முன்பு 4 இடங்களை வென்றோம். இந்த முறை 9 இடங்களை வெல்வோம்.
நாட்டை விற்கும் காங்கிரசுக்கு ஓட்டு போட மாட்டார்கள். டீ விற்ற மோடிக்குத்தான் ஓட்டு போடுவார்கள். 2019-ல் 303 இடங்கள் தந்தனர். 2024-ல் 405 இடங்களைத் தருவார்கள்.
பிரதமர் மோடி 4 கோடி மக்களுக்கு வீடு தந்து இருக்கிறார். 12 கோடி வீடுகளுக்கு கழிவறை தந்துள்ளார். சமையல் கியாஸ் இணைப்பு கொடுத்துள்ளார். 13 கோடி மக்களுக்கு வீட்டுக்குழாய் நீர் இணைப்பு கொடுத்துள்ளார். அதிக மருத்துவ கல்லூரிகள், ஐ.ஐ.டி.கள் தந்திருக்கிறார். அடுத்த 5 ஆண்டுகளில் இன்னும் அதிகமாக செய்வார். 'சோஷியல், டிஜிட்டல், பிசிக்கல்' என இந்த 3 நிலைகளிலும் முன்னேற்றத்தை தந்திருக்கிறார். விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்காவுக்கு சமமாக நாட்டை உயர்த்தி இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் தமிழ்நாட்டில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் பா.ஜனதாவுக்கு பாதகமாக இருக்கிறதே? என்று கேட்டதற்கு, ஜூன் 4-ந் தேதி வரை காத்திருங்கள். பா.ஜனதா 400 இடங்களுக்கு மேல் வெல்லும். அதில் தமிழகத்தின் பங்கு பெரியதாக இருக்கும் என்று கூறினார்.