search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்கிக் கணக்கு"

    • LGBTQ சமூகத்தினர் கூட்டு வங்கிக்கணக்கு [JOINT ACCOUNT] தொடங்க எந்த தடையும் இல்லை என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது
    • இதுதொடர்பாக அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

    இந்தியாவில் LGBTQ சமூகத்தினர் கூட்டு வங்கிக்கணக்கு [JOINT ACCOUNT] தொடங்க எந்த தடையும் இல்லை என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தன்பாலின, இருபாலின மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களை உள்ளடக்கிய LGBTQ சமூகத்தைச் சேர்ந்தவர்கள், நாட்டில் உள்ள வங்கிகளில் கூட்டு வங்கிக் கணக்குகளைத் தொடங்கவோ, ஒருவர் தொடங்கிய வங்கிக் கணக்கில், Nominee-ஆக அச்சமூகத்தைச் சேர்ந்தவரை குறிப்பிடவோ எந்தத் தடையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தன்பாலின திருமணங்களை அங்கீகரிப்பது தொடர்பாகக் கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கில் கூறப்பட்ட கருத்துகளின்படி, LGBTQ சமூகத்தினர் பொது சேவைகளைப் பெறுவதில் பாகுபாடு காட்டப்படாது என்பதை மீண்டும் உறுதிப்படுத்த இந்த அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.  

    • வருமான வரித்துறை சட்டவிரோதமாக தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 65 கோடி பணத்தை எடுத்துள்ளதாக காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்துள்ளது.
    • பிப்ரவரி 16-ல் காங்கிரஸின் முக்கிய வங்கிக் கணக்குகளிலிருந்த ₹ 210 கோடி ரூபாய் பணம் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டது

    வருமான வரித்துறை சட்டவிரோதமாக தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 65 கோடி பணத்தை எடுத்துள்ளதாக காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் நேரத்தில் இத்தகைய செயல் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

    பல்வேறு வங்கிகளில் உள்ள காங்கிரஸ் கட்சியின் கணக்குகளிலிருந்து வருமான வரித்துறை ஜனநாயக விரோதமாக ₹ 65 கோடியை எடுத்துள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அஜய் மாக்கன் கூறியுள்ளார்.

    பிப்ரவரி 16-ல் காங்கிரஸின் முக்கிய வங்கிக் கணக்குகளிலிருந்த ₹ 210 கோடி ரூபாய் பணம், வருமான வரித்துறையால் முடக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • சேலம் மாவட்டத்தில் 2022-2023-ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கல்வி உதவித்தொகை பெற ஏதுவாக, ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாத மாணாக்கர்களுக்கு, அஞ்சல் துறையின் கீழ் செயல்படும்.
    • இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் மூலம், பள்ளிகளிலேயே ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு துவங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் 2022-2023-ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கல்வி உதவித்தொகை பெற ஏதுவாக, ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாத மாணாக்கர்களுக்கு, அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் மூலம், பள்ளிகளிலேயே ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு துவங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    தற்போது, பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாத மாணாக்கர்கள் அருகிலுள்ள அஞ்சலகம் மற்றும் தபால்காரருக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம் மாணவ, மாணவியர்கள் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை பயன்படுத்தி ஈ.கே.ஒய்.சி. (விரல் ரேகை) மூலம் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்குமாறு மாவட்ட கலெக்டர் கார்மேகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
    • மாவட்ட காவல்துறை சார்பில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் குறித்து தவறாக சித்தரித்து வெளியிட்டு பிரச்சினை ஏற்படுத்துவதை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் கூறியதாவது:-

    வடமாநில தொழிலாளர்கள் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியவர்கள் மீது திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. டுவிட்டர், முகநூல், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டவர்கள் மீது இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 3 சமூக வலைதளங்களின் சட்டக்குழுவினருடன் ஆலோசனை நடத்தி, 3 பதிவுகளை அதில் இருந்து அகற்றுவதற்கு கோரிக்கை வைத்துள்ளோம்.

    டுவிட்டரில் ஏற்கனவே அந்த பதிவு நீக்கப்பட்டுள்ளது. மற்ற 2 பதிவுகளை அகற்றுவதற்கு அதிகாரிகளுடன் பேசி வருகிறோம். பணம் சம்பாதிக்கும் நோக்கில் சிலர் சமூக வலைதளங்களில் அதிகமானோர் பார்ப்பதற்காக சில வதந்திகளை பரப்பி வருகின்றனர். அவர்களுடைய வங்கி கணக்குகளை முடக்குவதற்கும் நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம். இந்த பிரச்சினை தொடர்பாக 2 போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் 2 தனிப்படை அமைத்துள்ளோம். வடமாநில தொழிலாளர்களுக்காக மாவட்ட காவல்துறை சார்பில் ஏற்படுத்தப்பட்ட காவல் கட்டுப்பாட்டு எண்ணிற்கு 600-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன.

    அதில் யாரும், யாரையும் தாக்கியது போன்ற அழைப்புகள் எதுவும் வரவில்லை. 70 சதவீத அழைப்புகள் பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் இருந்து வடமாநில தொழிலாளர்களின் உறவினர்களும், குடும்பத்தினரும் தொடர்பு கொண்டு திருப்பூரில் இதுபோன்று நடக்கிறதா என்று விளக்கம் கேட்கின்றனர்.

    அவர்களுக்கு இந்தி தெரிந்த போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் 24 மணி நேரமும் தகவல்களை வழங்கி வருகிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • 14.86 லட்சம் ரேசன் அட்டைதாரர்களுக்கு வங்கிக் கணக்கு எதுவும் இல்லை.
    • வங்கிகளில் ’ஜீரோ பாலன்ஸ்’ வங்கிக் கணக்கை தொடங்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.

    சென்னை :

    தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.சண்முக சுந்தரம், அனைத்து மண்டல இணைப் பதிவாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழகம் முழுவதும் உள்ள ரேசன் அட்டைதாரர்களில் 14.86 லட்சம் ரேசன் அட்டைதாரர்களுக்கு வங்கிக் கணக்கு எதுவும் இல்லை. இவர்களில் பலர் வங்கிக் கணக்கு வைத்திருந்தாலும், ஆதார் நம்பரை இணைக்காததால், வங்கிக் கணக்கு இல்லை என்றே தரவுகள் தெரிவிக்கின்றன.

    இவர்களில் யாராவது ஏற்கனவே வங்கிக் கணக்கு வைத்திருந்தால் அதன் விவரங்களை பெறவும், கணக்கு இல்லாதவர்களுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் 'ஜீரோ பாலன்ஸ்' (பணமில்லாத) வங்கிக் கணக்கை தொடங்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை பின்பற்றுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்படுகின்றன. வங்கிக் கணக்கு எண் இல்லாத ரேசன் அட்டைதாரர்களுக்கு விவரக் குறிப்புகள் அடங்கிய தாளுடன் சேர்த்து, அருகில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளையை நேரில் அணுகி 'ஜீரோ பாலன்ஸ்'கணக்கை தொடங்க வேண்டும்.

    அந்த விபரங்கள் அடங்கிய படிவத்தை பூர்த்தி செய்து 4 நாட்களுக்குள் அந்தந்த ரேசன் கடைகளில் ஒப்படைக்க வேண்டும். ஏற்கனவே வங்கி கணக்கு எண் வைத்திருந்தால், சம்பந்தப்பட்ட ரேசன் கடைப் பணியாளர் அவர்களது பகுதியின் கீழ் வரும் ரேசன் அட்டைதாரர்களின் வீடுகளுக்கு நேரிடையாக சென்று, அவர்களின் வங்கி கணக்கு எண், பாஸ் புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகல் மற்றும் அவற்றுடன் ரேசன் அட்டை நம்பர், குடும்பத் தலைவர் பெயர் ஆகியவற்றை குறிப்பிட்டு வழங்கும்படி அவர்களை அறிவுறுத்தி, அந்தத் தகவல்களை கேட்டுப் பெறவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×