என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பஸ் மோதல்"
- தனியார் பள்ளி பஸ் மோதி 1½ குழந்தை நசுங்கி பலியானது.
- தனியார் பள்ளி பஸ் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரையை அடுத்துள்ள பெருங்குடியை சேர்ந்தவர் உத்தமநாதன். இவர் அதே பகுதியில் விறகு கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் வீரசக்தி என்ற 1½ வயதில் ஆண் குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில் ஆதார் கார்டு விண்ணப்பிப்பது தொடர்பாக உத்தமநாதன், தனது மனைவி, குழந்தை களுடன் மதுரை ரேஸ்கோர்சில் உள்ள மண்டல அலுவலகத்திற்கு நேற்று காலை எலக்டரிக் மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்கு ஆதார் பணிகளை முடித்துவிட்டு மாைலயில் 3 பேரும் வீட்டுக்கு புறப்பட்டனர்.
வில்லாபுரம் தியேட்டர் அருகே வந்து கொண்டிருந்த போது வேகமாக வந்த தனியார் பள்ளி பஸ் மோட்டார் சைக்கிளின் பக்கவாட்டில் உரசி சென்றது.
இதில் மோட்டார் சைக்கிள் நிலைகுலைந்து கீழே சரிந்தது. அதில் பயணம் செய்த உத்தமநாதன் தனது மனைவி, குழந்தை யுடன் ரோட்டில் விழுந்தார். அப்போது பஸ்சின் பின்பக்க டயர் குழந்தை வீரசக்தி மீது ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கி பச்சிளங் குழந்தை பரிதாபமாக இறந்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தை பார்த்து பெற்றோர் துடித்து கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. விபத்துகுறித்து தகவலறிந்த போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக தனியார் பள்ளி பஸ் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நீலமங்கலம் ஆற்று பாலத்தில் வந்தபோது டிரைவரின் கட்டுபாட்டை இழந்த சொகுசு பஸ் சாலையோர தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்து.
- இந்த விபத்தால் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 போக்குவரத்து பாதிக்கபட்டது.
கள்ளக்குறிச்சி:
சென்னையில் இருந்து தனியார் சொகுசு பஸ் 29 பயணிகளை ஏற்ற க்கொண்டு கோயம்புத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்சை தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் (வயது 26) டிரைவர் ஓட்டிவந்தார். அப்போது கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் நீலமங்கலம் ஆற்று பாலத்தில் வந்தபோது டிரைவரின் கட்டுபாட்டை இழந்த சொகுசு பஸ் சாலையோர தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்து.
இதில்பஸ்சில் பயணம் செய்த 5 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர். தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கள்ள க்குறிச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 போக்குவரத்து பாதிக்கபட்டது. இதனால் மாற்று வழியில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டது. தொ டர்ந்து புறவழிச்சாலையில் கவிழ்ந்து கிடந்த தனியார் சொகுசு பஸ்சை பொக்லின் உதவியுடன் போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதி பழக்கடை உரிமையாளர் பலியானார்.
- பின்னால் சென்ற தனியார் பஸ் திடீரென்று எதிர்பாராமல் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
கடலூர்:
கடலூர் சாவடி சேர்ந்த சரவணன் (வயது 50). பழக்கடை கடை நடத்தி வந்தார். இன்று காலை கடலூர் இருந்து புதுச்சேரிக்கு பழங்கள் வாங்குவதற்கு மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தார். அப்போது கடலூர் அருகே சின்ன கங்கணாங் குப்பம் என்ற பகுதி யில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் சென்ற தனியார் பஸ் திடீரென்று எதிர்பாராமல் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த சரவணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் கொண்டு சென்றனர். இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
- திருவெண்ணைநல்லூர் அருகே தனியார் பள்ளி பஸ் மோதி முதியவர் பலியானார்.
- இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகே மழவராயனூர் ஆற்றுத் தெருவை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 70). இவர் இன்று காலை இயற்கை உபாதை கழிப்பதற்காக தனது வீட்டில் இருந்து சின்ன செவலை- மழவராயனூர் சாலையின் குறுக்கே கடக்க முற்பட்டார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பள்ளி பஸ் எதிர்பாராத விதமாக இவர் மீது மோதியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ரங்கசாமி இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தலைவன்வடலி சேது ராஜா தெருவை சேர்ந்தவர் கார்த்திக் ஒப்பந்த தனியார் தொழிற்சாலையில் தொழிலாளராக வேலை பார்த்து வந்தார்
- நேற்று மதியம் ஆத்தூரில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார்
ஆறுமுகநேரி:
ஆத்தூர் அருகே உள்ள தலைவன்வடலி சேது ராஜா தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் கார்த்திக் (வயது21). தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளராக வேலை பார்த்து வந்தார்.
இவர் நேற்று மதியம் ஆத்தூரில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார். தண்ணீர் பந்தல் அருகே வரும்போது எதிரே திருச்செந்தூரிலிருந்து தூத்துக்குடி நோக்கி வேகமாக வந்த தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.இதில் பஸ்ஸின் அடியில் சிக்கிக் கொண்ட கார்த்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த குரும்பூர் போலீசார் அங்கு விரைந்து சென்று கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் உயிரிழந்த கார்த்திக்கின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்களும், அப்பகுதியை சேர்ந்த பொது மக்களும் தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் தலைவன்வடலி விலக்கு அருகே இன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் இறங்கினர். அப்போது உயிரிழந்த கார்த்திக் குடும்பத்திற்கு அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். மேலும் அசுர வேகத்தில் செல்லும் தனியார் பஸ்களுக்கு வேக கட்டுப்பாடு கருவி பொருத்தப்பட வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
இதனால் அங்கு சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் அவர்க ளுடன் பேச்சு வார்த்தை நடத்தி னர். அதைத்தொடர்ந்து மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.
- காயமின்றி மாணவர்கள் உயிர் தப்பித்தனர்.
- தினமும் காலையில் மேட்டுப்பா–ளையம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள மாணவ, மாணவிகளை பஸ்களில் ஏற்றுக்கொண்டு கோவைக்கு கல்லூரிக்கு செல்வது வழக்கம்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு பல்வேறு தனியார் கல்லூரி பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
தினமும் காலையில் மேட்டுப்பா–ளையம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள மாணவ, மாணவிகளை பஸ்களில் ஏற்றுக்கொண்டு கோவைக்கு கல்லூரிக்கு செல்வது வழக்கம்.
அதேபோல் இன்று கோவை சரவணம்பட்டியில் உள்ள கே.ஜி.ஐ.எஸ்.எல்.கல்லூரி பஸ் மேட்டுப்பாளையத்திற்கு வந்து, மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் கோவை நோக்கி வந்து கொண்டிருந்தது.
மேட்டுப்பாளையம்-கோவை ரோடு வேளாங்கண்ணி அருகே சென்ற போது கல்லூரி பஸ், முன்னால் சென்ற தனியார் பஸ்சின் மீது மோதியது. இதில் கல்லூரி பஸ்சின் முன்பக்கம் முழுவதும் சேதம் அடைந்தது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக கல்லூரி பஸ்சில் பயணம் செய்த மாணவ, மாணவிகள் காயம் இன்றி தப்பித்தனர். கல்லூரி பஸ்சை டிரைவர் அதிவேகமாக இயக்கியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேட்டுப்பாளையம் பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் கல்லூரி பஸ்கள், பள்ளி பஸ்கள், தனியார் பஸ்கள்,அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் வாகனத்தை இயக்குவதால் அடிக்கடி இது போன்ற விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.
எனவே இதைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகமும், வட்டார போக்குவரத்து அலுவலரும், போலீசாரும் தகுந்த நடவடிக்கை எடுத்து மேற்கொண்டு விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மங்கலம்பேட்டை அருகே பஸ் மோதி முதியவர் பலியானார்.
- அங்குள்ள துணை மின் நிலையம் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள கோ.பூவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பராயன். இவரது மகன் சத்திய நாராயணன் (வயது 50). கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. நேற்று இரவு, கோ.பூவனூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து சத்திய நாராயணன் தனது வீட்டிற்கு செல்வதற்காக அங்குள்ள துணை மின் நிலையம் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, சென்னை யில் இருந்து விருத்தாச்ச லம் நோக்கி வந்த அரசுப் பஸ், சத்திய நாராயணன் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்துப்போனார்.
ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மருங்கூர் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் (50) என்பவர் அந்த பஸ்சை ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த மங்கலம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சத்தியநாராயணனின் உடலை மீட்டு, பிரேத பரி சோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்