என் மலர்
நீங்கள் தேடியது "மானிய உதவி"
- பெண் டிரைவர்களுக்கு ஆட்டோ வாங்க மானியம் வழங்கும் திட்டம் அறிமுகப்படு த்தப்பட்டுஉள்ளது.
- மேற்கண்ட தகவலை மதுரை, தொழிலாளர் உதவி ஆணையர் மலர்விழி தெரிவித்து உள்ளார்.
மதுரை
தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகன பழுதுபார்ப்போர் நல வாரியம் உருவாக்கப்பட்டு உள்ளது.
இதில் 18- 60 வயதுக்கு உட்பட்டோர் பதிவு செய்து கல்வி, திருமணம், மகப்பேறு, இயற்கை- விபத்து மரண உதவித்தொகை மற்றும் மாதாந்திர ஓய்வூதியம் ஆகியவற்றை பெறலாம். இது தவிர பெண் டிரைவர்களுக்கு ஆட்டோ வாங்க மானியம் வழங்கும் திட்டம் அறிமுகப்படு த்தப்பட்டுஉள்ளது.
எனவே 60 வயது பூர்த்தி அடையாத பெண்கள் நலவாரிய உறுப்பினர் பதிவு அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், வருமானவரி சான்றிதழ், விலைப்புள்ளி விபரப் பட்டியல் மற்றும் புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான படிவத்தை https://tnuwwb.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை மதுரை எல்லீஸ் நகர், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய வளாகத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண்ணில் (0452-2601449) தொடர்பு கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை மதுரை, தொழிலாளர் உதவி ஆணையர் மலர்விழி தெரிவித்து உள்ளார்.
- ரூ.62.68 லட்சம் மதிப்பில் மானிய உதவிகளை விருதுநகர் கலெக்டர் வழங்கினார்.
- மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களிடம் நேரில் சென்று கலெக்டர் மனுக்களை பெற்றுக் கொண்டார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.
இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித் தொகை, திருமண உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது. மேலும் மாற்றுத்திறனாளி கள், மூத்த குடிமக்களிடம் நேரில் சென்று கலெக்டர் மனுக்களை பெற்றுக் கொண்டார்.
முன்னதாக கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கொட்டகை அமைத்தல், கறவைப்பசு, ஆடுகள் மற்றும் நாட்டுக் கோழிகள் கொள்முதல் செய்தல், பசுந்தீவன பயிர் சாகுபடி செய்தல், இயந்திர புல் நறுக்கும் கருவி கொள்முதல் செய்தல் உள்ளிட்ட கால்நடை சார்ந்த தொழில் புரிவதற்கும், கருவிகள் கொள்முதல் செய்வதற்கும் 30 பயனா ளிகளுக்கு மொத்தம் ரூ.99.50 லட்சம் திட்ட மதிப்பில் ரூ.62.68 லட்சம் அரசு மானி யத்திற்கான ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், தனித்துணை கலெக்டர் அனிதா, மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) முத்துக்கழுவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.