search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரத்தன் டாடா"

    • ஓசூர் நகரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
    • பணியாளர்கள் தங்குவதற்கு வீட்டு வசதியும் இதே பகுதியில் வழங்கப்பட இருக்கிறது.

    இந்தியாவின் பிரபலமான தொழில் நகரம் ஜாம்ஷெட்பூர். டாடா குழுமத்தால் உருவாக்கப்பட்ட இந்த நகரில் ஸ்டீல் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே சிறப்பாக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட தொழில் நகரமாக ஜாம்ஷெட்பூர் விளங்கி வருகிறது. இந்த வரிசையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் நகரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.

    பல்வேறு தொழில் நிறுவனங்களின் ஆலைகள், உற்பத்தி கூடங்கள் ஓசூரில் இயங்கி வருகின்றன. 2020 ஆம் ஆண்டு டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தனது ஆலையை ஓசூரில் கட்டமைத்தது. இந்த ஆலை நாட்டின் மிகப்பெரிய ஐபோன் உற்பத்தி செய்யும் ஆலையாக மாற இருக்கிறது.

    உற்பத்தி துறையை விரிவுப்படுத்தும் வகையில் டாடா குழுமம் இதே பகுதியில் இரண்டு புதிய உற்பத்தி மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதோடு பணியாளர்கள் தங்குவதற்கு வீட்டு வசதியும் இதே பகுதியில் வழங்கப்பட இருக்கிறது.

    புதிய ஆலைகளை உருவாக்குவதன் மூலம் ஓசூரில் அதிகம் பேருக்கு பணி வழங்கும் நிறுவனமாக டாடா எலெக்ட்ரானிக்ஸ் உருவெடுக்க இருக்கிறது. தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா இது குறித்து பேசும் போது, வளர்ச்சியில் ஜாம்ஷெட்பூரை முந்தும் அளவுக்கு ஓசூரில் அதிக வசதிகள் உள்ளன என்றார்.

    இந்த நகரில் உற்பத்தி மட்டுமின்றி பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக ஓசூரை தகவல் தொழில்நுட்ப மையமாகவும் மாற்ற முடியும் என்று தெரிவித்தார்.

    • நாய்க்கு அனைத்து வகை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.
    • பதிவை பார்க்கும் பயனர்களும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    இந்திய தொழிலதிபரும், டாட்டா சன்ஸ்ஸின் முன்னாள் தலைவருமானவர் ரத்தன் நவால் டாட்டா. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மும்பை மக்களிடம் உதவி கேட்டு பதிவிட்டுள்ளார்.

    'நீங்கள் உதவினால் நான் மனதார பாராட்டுவேன்' என்னும் தலைப்பில் நாயின் புகைப்படத்துடன் பதிவை தொடங்கும் ரத்தன் டாட்டா, எங்கள் கால்நடை மருத்துவமனையில் உள்ள 7 மாத நாய்க்கு அவசரமாக ரத்தம் தேவைபடுகிறது. அந்த நாய் சந்தேகப்படும்படியான டிக் காய்ச்சல் மற்றும் உயிருக்கு ஆபத்தான ரத்த சோகை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் உடனடியாக மும்பையில் இருந்து நாய் ரத்த தானம் செய்பவர் அவசரமாக தேவை...

    ரத்தம் வழங்கும் நாயானது மருத்துவ ரீதியாக ஆரோக்கியமானதாகவும், 1 முதல் 8 வயது உடையதாகவும், எடை சுமார் 25 கிலோ அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். அந்த நாய்க்கு அனைத்து வகை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். கடந்த 6 மாதங்களில் அந்த நாய் எந்த நோய்க்கும் ஆளாகாமல் இருக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

    இவரது இந்த பதிவு 5 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது. பதிவை பார்க்கும் பயனர்களும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • துரோகி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் சுதா கொங்கரா.
    • சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று படத்தை இயக்கி பலரின் பாராட்டுக்களையும் பெற்றார்.

    2010-ம் ஆண்டு ஸ்ரீகாந்த் மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான துரோகி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் சுதா கொங்கரா. அதன்பின்னர் மாதவன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் வெளியான இறுதி சுற்று படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். இவர் சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று படத்தை இயக்கி பலரின் பாராட்டுக்களையும் பெற்றார்.

     

    சூரரைப் போற்று

    சூரரைப் போற்று

    இப்படம் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் ஏராளமான விருதுகளை குவித்ததோடு, 5 தேசிய விருதுகளையும் தட்டி சென்றது.

     

    சுதா கொங்கரா - சூர்யா

    சுதா கொங்கரா - சூர்யா

    சில தினங்களாக பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாற்றை சுதா கொங்கரா திரைப்படமாக இயக்கவுள்ளதாக இணையத்தில் பேசப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து சுதா கொங்கரா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நான் திரு. ரத்தன் டாடாவின் மிகப்பெரிய ரசிகர். ஆனால், அவரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கும் எண்ணம் எனக்கு இப்போதைக்கு இல்லை. ஆனால் எனது அடுத்த படத்தின் மீதுள்ள உங்கள் ஆர்வத்திற்கு நன்றி! விரைவில்! என்று பதிவிட்டுள்ளார். இதன்மூலமாக சுதா கொங்கராவுக்கு ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாற்றை படக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என தெளிவாகியுள்ளது.

    ×