search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணியாளர் தேர்வு"

    • தேர்வின் மூலம் 6244 பேர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
    • தமிழ்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் எந்த அளவுக்கு தலைவிரித்தாடுகிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

    டிஎன்பிஎஸ்சி மூலம நிரப்பப்படும் பணியிடங்களை 15 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    டி.என்.பி.எஸ்.சி மூலம் நிரப்பப்படும் நான்காம் தொகுதி பணியிடங்களின் எண்ணிக்கையை 15 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.

    தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட நான்காம் தொகுதி (குரூப் - 4) பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு கடந்த ஜூன் 9-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வின் மூலம் 6244 பேர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால், 16 லட்சம் பேர் இந்தத் தேர்வுகளை எழுதிய நிலையில் காலியிடங்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. ஆனால், டி.என்.பி.எஸ்.சி கடந்த 11ம் நாள் வெளியிட்ட அறிவிப்பில் காலியிடங்களின் எண்ணிக்கை 480 மட்டுமே உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது எந்த வகையிலும் போதுமானது அல்ல.

    தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 6 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட 2 லட்சம் பணியிடங்கள் நான்காம் தொகுதியைச் சேர்ந்தவை ஆகும். இவற்றை நிரப்புவதாக கூறி ஆட்சிக்கு வந்த திமுக அதை செய்யவில்லை. டி.என்.பி.எஸ்.சி நான்காம் தொகுதித் தேர்வு இரு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் நடக்கிறது.

    இடைப்பட்ட காலத்தில் 15 ஆயிரத்திற்கும் கூடுதலான நான்காம் தொகுதி பணியாளர்கள் ஓய்வு பெற்று இருப்பார்கள். அவ்வாறு இருக்கும் போது வெறும் 7024 பணியிடங்களை மட்டும் நிரப்புவது நியாயமல்ல. ஒரு தேர்வை 16 லட்சம் பேர் எழுதுகிறார்கள் என்பதிலிருந்தே தமிழ்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் எந்த அளவுக்கு தலைவிரித்தாடுகிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

    எனவே, தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று டி.என்.பி.எஸ்.சி நடத்திய தேர்வின் மூலம் நிரப்பப்படவுள்ள நான்காம் தொகுதி பணியிடங்களின் எண்ணிக்கையை 15 ஆயிரமாக அரசு உயர்த்த வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தென்மாநிலங்களில் இருந்து பெயரளவுக்கு 5 அல்லது 10 சதவிகிதத்தினர் மட்டுமே நியமிக்கப்படுகின்றனர்.
    • மத்திய அரசின் நிர்வாகமும் சிறப்பாக நடைபெறும்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவோம் என வாக்குறுதி வழங்கி 10 ஆண்டு ஆட்சியை பிரதமர் மோடி நிறைவு செய்ய இருக்கிறார். ஆனால், 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் உச்சநீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பை சாக்காக வைத்துக் கொண்டு மண்டல வாரியான தேர்வு முறையை ஒழித்துக்கட்டியுள்ளது.


    இதன் விளைவாக தேர்வுகள் அனைத்தும் தலைநகர் டெல்லியில் நடத்துகிற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தேர்வின் மூலமாக 90 சதவிகிதத்திற்கும் மேலாக இந்தி பேசும் மாநிலங்களிலிருந்தே பணி நியமனங்கள் நடைபெறுகிறது. தென்மாநிலங்களில் இருந்து பெயரளவுக்கு 5 அல்லது 10 சதவிகிதத்தினர் மட்டுமே நியமிக்கப்படுகின்றனர்.

    சமீபத்தில், பணியாளர் தேர்வாணையத்தில் ஜூன் 2024 முதல் ஜூலைக்குள் 41,233 காலிப் பணியிடங்களுக்கு இணையதளத்தின் மூலம் தேர்வு நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தோடு பிற மாநில மொழிகளில் ஒன்றான தமிழிலும் நடத்தப்பட வேண்டுமென்று வலியுறுத்த விரும்புகிறோம். இந்த கோரிக்கையை ஏற்பதன் மூலம், மத்திய அரசு அலுவலகங்களில் அந்தந்த மாநில மொழி தெரிந்தவர்களே பணியில் நியமிக்கப்படக் கூடிய வாய்ப்பு ஏற்படும். மத்திய அரசின் நிர்வாகமும் சிறப்பாக நடைபெறும். இல்லாவிட்டால் கடுமையான போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 1,600 பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.) வெளியிட்டுள்ளது.
    • இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 8-ந் தேதி கடைசி நாள் ஆகும். ஆகஸ்டு 1-ந் தேதியன்று 18 வயது நிரம்பியவர்கள் முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    சேலம்:

    மத்திய அமைச்சக அலுவலகங்கள், தன்னாட்சி அமைப்புகள், தீர்ப்பாயங்கள் உள்பட மத்திய அரசுக்கு பாத்தியப்பட்ட பல்வேறு அலுவலகங்களில் 1,600 பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.) வெளியிட்டுள்ளது. இதன்படி, 12-ம் வகுப்பு படித்தவர்களுக்கான தகுதியில் கீழ்நிலை எழுத்தாளர், இளநிலை செயலக உதவியாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். சில பணிகளுக்கு கூடுதல் தகுதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 8-ந் தேதி கடைசி நாள் ஆகும். ஆகஸ்டு 1-ந் தேதியன்று 18 வயது நிரம்பியவர்கள் முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த பணியிடங்களுக்கு கணினி வழியில் முதல்நிலை தேர்வு ஆகஸ்டு மாதம் நடைபெற உள்ளது. முதன்மை தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்வுக்கு https://ssc.nic.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

    மேற்கண்ட தகவல் மத்திய அரசின் பணியாளர் நலன் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மத்திய அரசு பணியாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடக்கிறது.
    • கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் எஸ்.எஸ்.சி. (ஜி.டி.) மற்றும் எஸ்.எஸ்.சி. (சி.எஸ்.எஸ்.எல்.) ஆகியவற்றிற்கு அறிவிக்கப்பட்டுள்ள சுமார் 45000 பணிக்காலி யிடங்களுக்கான எழுத்து தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வு குறித்து மேலும் www.ssc.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

    இத்தேர்வுக்குரிய இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் வருகிற 5-ந் தேதி அன்று காலை 10.30 மணிக்கு ஆரம்ப வகுப்புகள் நடைபெற உள்ளது.

    மேலும் இப்போட்டி தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவோர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தினை நேரில் அணுகலாம் என கேட்டுக்கொள்ள ப்படுகிறது.

    மேலும் விவரங்களுக்கு 04562 - 293613 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ள ப்படுகிறார்கள்.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

    ×