என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பிச்சை"
- சொத்தை எழுதி வைக்கக்கோரி தந்தை தாயை பிள்ளைகள் தொடர்ந்து சித்திரவதை செய்துள்ளனர்.
- சாப்பாடு கேட்டால் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு போய் பிச்சையெடுக்க சொல்கினறனர்
பெற்ற பிள்ளைகள் சோறு போடாமல் அடித்து துன்புறுத்தியதால் வயதான தாய்-தந்தை ஒன்றாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர்கள் ஹாசாரிராம் பிஸ்னாய் [70 வயது] மற்றும் அவரது, மனைவி சாவ்லி தேவி [68 வயது]. இவர்களுக்கு இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர்.
தங்கள் பெயரில் சொத்தை எழுதி வைக்கக்கோரி தந்தை தாயை பிள்ளைகள் தொடர்ந்து சித்திரவதை செய்துள்ளனர். இதனால் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் இருவரும் குதித்து தற்கொலை செய்துள்ளனர். அவர்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து பேப்பரில் எழுதி வீட்டின் சுவரில் ஒட்டிவைத்துள்ளனர்.
அதில், 'மகன்கள், மகள்கள் என நால்வரும் சேர்ந்து சொத்துக்காக எங்களைத் துன்புறுத்துகின்றனர். எங்களைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டுகின்றனர். எங்களுக்கு போதுமான உணவு அளிப்பதில்லை. இதுகுறித்து கேட்டதற்கு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு போய் பிச்சையெடுக்க சொல்கினறனர்' என்று எழுதப்பட்டுள்ளது.
மேலும் மகன்கள், தாய் தந்தையை அடித்துத் துன்புறுத்தியதாகவும், அதை யாரிடமாவது சொன்னால் தூக்கத்திலேயே கொன்றுவிடுவோம் என்றும் மிரட்டியதாக அந்த தற்கொலை கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது. வீட்டின் தண்ணீர் தொட்டியிலிருந்து இருவரின் உடல்களையும் மீட்ட போலீசார் தற்கொலை கடிதத்தை கைப்பற்றி விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
#WATCH | Rajasthan: Elderly couple found dead at their house in Nagaur.(Visuals from the spot) pic.twitter.com/yfq0JvYZn8
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) October 11, 2024
இதற்கிடையே கடந்த திங்கள்கிழமை அன்று உயிரிழந்தவர்களின் மகன்களில் ஒருவர் போலீசில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அதில் 'தற்கொலை செய்துகொண்டு பழியை எங்கள் மீது போட்டுவிடுவோம்' என்று தங்களை மிரட்டுவதாகத் தாய் தந்தை மீது புகார் கொடுத்திருக்கிறார்.
தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது. தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபட உதவிக்கு 044 2464 0050 என்ற எண்ணை அழைக்கவும்.
- எப்போது பார்த்தாலும் இன்னொருவர் போடும் பிச்சையில் நாம் வாழத் தேவையில்லை என்று நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்
- நிர்மலா சீதாராமனின் இந்த கருத்திற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்
அரசு வழங்கும் நிவாரணத் தொகையை 'பிச்சை' எனக் குறிப்பிட்டு நிகழ்ச்சி ஒன்றில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
"வெள்ளம் வந்தால், வீடு இடிந்து விழுந்தால் ₹500, ₹1000 எனத் தருகிறார்கள். இத்தகைய நடவடிக்கையால் நாடு முன்னேறாது. எப்போது பார்த்தாலும் இன்னொருவர் போடும் பிச்சையில் நாம் வாழத் தேவையில்லை" என்று நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்.
நிர்மலா சீதாராமனின் இந்த கருத்திற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "பட்டினியை அனுபவித்தவனுக்குதான் பசியின் கொடுமை புரியும். வெயிலின் கொடுமையைப் பார்த்தவனுக்குதான் கூரையின் அருமை தெரியும். மானம் மறைக்க கந்தல் ஆடை இல்லாதவனை இழிவாக பார்ப்பவர்களுக்கு ஏழையின் வறுமை புரியாது. நிர்மலா சீதாராமனின் ஆணவம் ஏழைகளை முன்னேற்றாது. வயிறார உணவு, ஒழுகாத கூரை வீடு, அடிப்படை வசதிகள், கல்வி, சுகாதாரம் போன்றவை அடிப்படை உரிமைகள் என்பதை தத்துவமாக கொண்ட சமதர்ம கொள்கையே திமுகவின் கொள்கை என்று பதிவிட்டுள்ளார்.
- மூலனூரை அடுத்த பொன்னிவாடி கிராமத்தில் நல்லதங்காள் நீர்த்தேக்க அணை உள்ளது.
- 1997-ம் ஆண்டு கையகப்படுத்தி 2000-ம் ஆண்டு அணை கட்டுமான பணிகளை தொடங்கினர்.
தாராபுரம்,செப்.25-
திருப்பூர் மாவட்டம் மூலனூரை அடுத்த பொன்னிவாடி கிராமத்தில் நல்லதங்காள் நீர்த்தேக்க அணை உள்ளது. இந்த அணை கட்டுமான பணிக்காக 150 விவசாயிகளிடமிருந்து 750 ஏக்கர் நிலத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த 1997-ம் ஆண்டு கையகப்படுத்தி 2000-ம் ஆண்டு அணை கட்டுமான பணிகளை தொடங்கினர். அப்போது விவசாயிகளிடம் அணை கட்டுவதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது. நிலம் கொடுத்த விவசாயிகள் உரிய இழப்பீட்டுத் தொகை கேட்டு 2003-ம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். வழக்கில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை மற்றும் அதற்கு உரிய வட்டியை சேர்த்து அவர்களுக்கு வழங்க வேண்டும் என 2019-ம் ஆண்டு நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. இருப்பினும் விவசாயிகளுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய இழப்பீட்டுத்தொகை வழங்கவில்லை.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி சில மாதங்களுக்கு முன்பு தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகங்கள் ஜப்தி செய்யப்பட்டது. ஆனால் அதன் பிறகும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. இதனால் பாதிப்படைந்த விவசாயிகள் நல்லதங்காள் அணைப்பகுதியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு நாளும் நூதன போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இன்று 47-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. இதில் மண்டியிட்டுபிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விரைவில் சென்னை தலைமை செயலகம் முன்பு மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.
போராட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் ஈசன் முருகசாமி ,பொதுச் செயலாளர் முத்து விசுவநாதன் ,திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் ,திருப்பூர் கிழக்கு மாவட்ட அமைப்பு செயலாளர் பாலு ,திண்டுக்கல் மாவட்ட செயலாளர் வடிவேல் மற்றும் விவசாயிகள் 75க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
- கோவில், சிக்னல்களில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த 94 பேர் மீட்கப்பட்டனர்.
- மீட்கப்பட்ட 10 குழந்தைகள் நலக்குழு அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மதுரை
மதுரையில் உள்ள பிர–சித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நாள் தோறும் நூற்றுக்கணக் கா–னோர் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். கோவிலின் 4 நுழைவு வாயில் வழியாக கோவி–லுக்கு வரும் பக்தர்களிடம் அண்மைகாலமாக பிச்சை எடுக்கும் சம்பவங்கள் அதி–கரித்து வருகின்றன.
குறிப்பாக பெண்கள் கைக்குழந்தைகளை வைத் துக்கொண்டு பால், சாப் பாடு வாங்கவேண்டும் என பொதுமக்களிடம் பிச்சை எடுக்கின்றனர். இதில் சிலர் குழந்தையின் பரிதாப நிலையை கருத்தில் கொண்டு பணம் கொடுக் கின்றனர்.
இதேபோல் மதுரையின் முக்கிய சாலை சந்திப்புகள், காளவாசல், கோரிப்பாளை–யம், அண்ணாநகர், பால் பண்ணை உள்ளிட்ட பல் வேறு சிக்னல்களிலும் குழந் தையை வைத்து பிச்சை எடுப்பதை காணமுடிகிறது. பல மணிநேரம் சுட்டெ–ரிக்கும் வெயிலில் குழந் தையை வைத்துக் கொண்டு பிச்சை எடுப்பதால் உடல் நிலையும் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது.
குழந்தையை வைத்து பிச்சை எடுக்கக்கூடாது என அதிகாரிகளும், போலீசாரும் எச்சரித்தும் அந்த கும்பல் அதனை கண்டுகொள்வ–தில்லை. இந்த நிலையில் மதுரை மாநகர காவல் துறை குழந்தைகள் மீட்பு என்ற பெயரில் குழந்தைகள் மற்றும் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், குழந்தை–கள் நலக்குழுவினர் மற்றும் சிறப்பு சிறார் ஆகிய துறை–யைச் சார்ந்த அதிகாரிகள் 6 குழுக்களாக பிரிந்து மாவட்டம் முழுவதும் பல் வேறு இடங்களில் ரோந்து பணி மேற்கொண்டனர்
அதன்படி மதுரை மாந–கர் அண்ணா நகர், திலகர் திடல், திடீர் நகர் பகுதியில் உள்ள சிக்னல்கள், கோவில் கள், முக்கிய சந்திப்பு பகுதிகளில் குழந்தைகளை வைத்து யாசகம் பெற்றதாக 95 பேர் மீட்கபட்டுள்ளனர். அதில் குறிப்பாக யாசகம் பெற்றதாக 50 ஆண்கள், 35 பெண்கள், 10 குழந்தைகள் என 95 பேர் மீட்கபட்டுள் ள்ளதாகவும்,குழந்தைகளை வைத்து யாசகம் செய்யும் தொழில் செய்யும் பெற் றோர்கள் மற்றும் குழந்தைக–ளுக்கு உணவுகள் வழங்கப் பட்டு விழிப்புணர்வு இல்லா பெற்றோர்களுக்கு இனி வரும் காலங்களில் யாசகம் பெறக்கூடாது என அறிவு–றுத்தி அனுப்பி வைத்தனர்.
மேலும் யாசகம் பெறும் தொழிலில் ஈடுபடுத்தியதாக மீட்கப்பட்ட 10 குழந்தைகள் நலக்குழு அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ள–தாகவும் அதிகாரிகள் தெரி–வித்துள்ளனர்.
- போக்குவரத்து சிக்னலில் பிச்சை எடுத்த பெண்கள் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
- குழந்தைகள் நல அதிகாரி அருள்குமார், அண்ணாநகர் போலீசில் புகார் கொடுத்தார்.
மதுரை
மதுரை மாநகர போக்குவரத்து சிக்னல்களில் பெண்கள் உள்பட சிலர் குழந்தைகளுடன் பிச்சை எடுப்பதாக புகார் வந்தது. இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி அருள்குமார், அண்ணாநகர் போலீசில் புகார் கொடுத்தார்.
இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலமடை சிக்னலில் பிச்சை எடுத்ததாக கல்மேடு பரமசிவம் மனைவி வைத்தீஸ்வரி (வயது 22), சக்கிமங்கலம் பாண்டி மனைவி ஜெயா (22) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அதேபோல ஆவின் சிக்னலில் பிச்சை எடுத்ததாக எல்.டி.கே நகர் எல்லப்பன் (40) என்பவர் பிடிபட்டார்.
மாட்டுத்தாவணி போலீசில் மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி மணிமேகலை கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆவின் சிக்னலில் பிச்சை எடுத்ததாக, சக்கி மங்கலம், சட்டையாடி காலனியைச் சேர்ந்த முத்து மனைவி மேரி (20), தென்காசி மாவட்டம் பாம்பு கோவில் சந்தை சையது பட்டாணி, அரியலூர் தெற்கு தெரு கீர்த்திவாசன் மற்றும் அவரது சகோதரர் கண்ணன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
இதேபோல் மாட்டுத் தாவணி பஸ் நிலையத்தில் பிச்சை எடுத்ததாக சக்கிமங்கலம், நரிக்குறவர் காலனி சாய்பா மனைவி மல்லம்மா (20), கல்மேடு மஞ்சுநாதா மனைவி சாரதா (20), சத்தியமங்கலம் அன்னப்பம் மனைவி ராணி (20), கல்மேடு ஜம்பண்ணா மனைவி மஞ்சுளா (வயது 22), சக்கிமங்கலம் திருப்பதி மகள் முத்துமணி (20) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்