என் மலர்
நீங்கள் தேடியது "பெண்கள் மாயம்"
- தருமபுரி அருகே கல்லூரி மாணவி உட்பட 3 பெண்கள் மாயம் ஆனார்கள்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மல்லுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி.
இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தார். கடந்த 12-ந் தேதி சிறுமியின் தாய் கூலி வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது தனது மகள் காணவில்லை. இதனைய டுத்து அவரை எங்கு தேடியும் கிடைக்கா–ததால் மகேந்திரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாண வியை தேடி வருகின்றனர்.
இதேபோல் தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த சாமி செட்டிபட்டி அருகே உள்ள பங்கு நத்தம் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ., ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 15-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை விடு முறை என்பதால் வீட்டி லேயே இருந்து வந்துள்ளார். சிறுமியின் பெற்றோர் வெளியே வேலைக்கு சென்றவர்கள் மாலை திரும்பி வீட்டில் பார்த்த போது சிறுமியை காண வில்லை. அவரை அக்கம் பக்கம் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து தொப்பூர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.
இதே போன்று தருமபுரி மாவட்டம் மாரவாடி அடுத்த கதிர்நாயக்கன அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் இந்திரா (43). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் நன்னடத்தை அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு திருமணம் முடிந்து 15 வருடங்களுக்கு முன்பு கணவர் இறந்து விட்டதால் தனது தாய் வீட்டில் கதிர்நாயக்கனளி கிராமத்தில் மகள் ரஞ்சனா தேவி (23) என்பவருடன் வசித்து வந்தார். ரஞ்சனா தேவி 12-ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்து நீட் தேர்வுக்கு படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று மாலை தோட்டத்திற்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றவர் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்ப வில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால் இது குறித்து தாய் இந்திரா கிருஷ்ணாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் காணாமல் போன ரஞ்சனா தேவியை தேடி வரு கின்றனர்.
- கிருஷ்ணகிரி அருகே மாணவிகள் உட்பட 3 பெண்கள் மாயமாகினர்.
- போலீசார் விசாரணை
கிருஷ்ணகிரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த வர் 17 வயது சிறுமி. இவர் கல்லூரி ஒன்றில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 25-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து பெண்ணின் பெற்றோர் கிருஷ்ணகிரி டவுன் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதில் திம்மாபுரத்தை சேர்ந்த சுபாஷ் (24) என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சூளகிரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். திருமணம் ஆனவர். கடந்த 26-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது கணவர் சூளகிரி போலீசில் புகார் செய்தார். அதில் காருபாலாவை சேர்ந்த சக்திவேல் என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தளி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. நர்சிங் மாணவி. கடந்த 27-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அது குறித்து பெற்றோர் தளி போலீசில் புகார் செய்தனர். அதில் மஞ்சுநாத் என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மகா கும்பமேளாவில் உலகம் முழுவதிலும் இருந்து நாள்தோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து புனித நீராடி வருகின்றனர்.
- கும்பமேளாவில் நீராடி விட்டு அயோத்திக்கு சென்றபோது ராமலட்சுமி, கஸ்தூரி என்ற பெண்கள் மாயமாகினர்.
உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் 3 நதிகள் சங்கமிக்கும் 'திரிவேணி சங்கமம்' என்ற இடத்தில் ஜனவரி 13-ந்தேதி கோலாகலமாகத் தொடங்கியது. மகா சிவராத்திரி நாளான வருகிற 26-ந்தேதி வரை 45 நாட்களுக்கு இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
மகா கும்பமேளாவில் உலகம் முழுவதிலும் இருந்து நாள்தோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து புனித நீராடி வருகின்றனர். இதுவரை 55 கோடிக்கும் அதிகமான மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.
இந்நிலையில் தென்காசி பகுதியில் இருந்து 40 பேர் கொண்ட குழு உத்தரபிரதேச மாநிலம் மகா கும்பமேளாவுக்கு செல்ல திட்டமிட்டு, காசிக்கு ரெயில் மூலம் யாத்திரை சென்றனர்.
இந்த குழுவினர் கும்பமேளாவில் நீராடி விட்டு அயோத்திக்கு சென்றபோது ராமலட்சுமி, கஸ்தூரி என்ற பெண்கள் மாயமாகினர்.
கும்பமேளா சென்ற 2 தமிழக பெண்கள் மாயமானது தொடர்பாக உத்தரபிரதேச காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக பெண்கள் மாயமானது தொடர்பாக உ.பி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.