என் மலர்
நீங்கள் தேடியது "எல்.முருகன் புகழாரம்"
- மாணவ-மாணவிகள், பணிக்கு செல்வோர் என பல தரப்பினரும் இந்த ரெயிலை பயன்படுத்தி வருகிறார்கள்.
- கோவை- மேட்டுப்பாளையம் இடையே பயணிகள் ரெயில்வே சேவையை ஞாயிற்றுக்கிழமையும் நீட்டித்து ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் மெமு பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது.
மேட்டுப்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து கோவைக்கு பள்ளி, கல்லூரிக்கு சென்று திரும்பும் மாணவ-மாணவிகள், பணிக்கு செல்வோர் என பல தரப்பினரும் இந்த ரெயிலை பயன்படுத்தி வருகிறார்கள்.
பொதுமக்களுக்கு மிகவும் பயன் அளிக்கும் இந்த ரெயிலை ஞாயிற்றுக்கி ழமையும் இயக்க வேண்டும் என பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து மத்திய இணை மந்திரி எல்.முருகனிடம் மனு அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவுக்கு, எல்.முருகன் கடிதம் எழுதியதோடு அவரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். இதையடுத்து மத்திய ரெயில்வே மந்திரி உத்தரவின் பேரில் கோவை- மேட்டுப்பாளையம் இடையே பயணிகள் ரெயில்வே சேவையை ஞாயிற்றுக்கிழமையும் நீட்டித்து ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
வருகிற 11-ந் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமையும் இனி மெமு ரெயில்கள் கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு இயக்கப்பட உள்ளது. இதற்கான தொடக்க விழா நேற்று மாலை மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் நடந்தது.
நிகழ்ச்சியில் மத்திய மந்திரி எல்.முருகன் பங்கேற்று மெமு ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
மேட்டுப்பாளையம்- கோவை இடையிலான ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்கப்படுவதால் வியாபாரிகள், மாணவர்கள் ஊட்டியில் இருந்து கோவை செல்லும் சுற்றுலாபயணிகள் பயன்பெறுவார்கள்.
இதன் மூலம் ரெயில் பயணிகள் சங்கத்தினர், வியாபாரிகளின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு உள்ளது. மத்திய ரெயில்வே மந்திரி தமிழகத்துக்கு பல திட்டங்களை வழங்க தயாராக இருக்கிறார். பிரதமர் மோடி ரெயில்வே துறையை உலக தரத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார். ரெயில் நிலையங்கள், விமான நிலையங்கள் போல நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன. ரெயில்வே கழிப்பறைகள் பயோ டாய்லெட்டுகளாக மாற்றப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
மேட்டுப்பாளையம் - கோவை இடையிலான ரெயில் பயண கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ.30 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது குறித்து எல்.முருகனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து அவர் கூறிய தாவது:-
மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு பஸ்சில் வந்து சேர இரண்டரை மணி நேரம் ஆகிறது. அதற்கு ரூ.27 வரை கட்டணமாக பெறுகி ன்றனர். போக்குவரத்து நெருக்கடிக்கு மத்தியில் அந்த பயணத்தை மேற்கொள்ள வேண்டும். ஆனால் ரெயிலில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு 40 நிமிடத்தில் சென்று விடலாம். கொேரானா காலத்தில் பயணிகள் ரெயில்கள் சிறப்பு ரெயில்களாக மாற்றப்பட்டு உள்ளன. அதை இங்கு மட்டும் செயல்படுத்த வில்லை. நாடு முழுவதும் செயல்படுத்தி உள்ளனர்.
அது மத்திய அரசின் கொள்கை முடிவு. கோவையில் இருந்து திருச்செந்தூருக்கு ரெயிலை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. அதற்கான சாத்தியக்கூறு இருக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- இரண்டு தேசங்களுக்கும் இடையிலான கலாசார உறவானது வலுப்பெறும்.
- உலக தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
புதுடெல்லி:
இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் உதவியால் கலாசார மையம் கட்டப்பட்டது. இந்த கலாசார மையத்துக்கு பிரதமர் மோடி கடந்த 2015-ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். இந்த கலாசார மையம் 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் யாழ்ப்பாணம் கலாசார மையத்துக்கு நேற்று திருவள்ளுவர் பெயர் சூட்டப்பட்டது. இந்த நிகழ்வு குறித்த புகைப்படங்களை இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தனது எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்து இருந்தது. யாழ்ப்பாணம் கலாசார மையத்துக்கு திருவள்ளுவர் பெயர் சூட்டியதை பிரதமர் மோடி பாராட்டி இருந்தார்.
இந்த நிலையில் யாழ்ப்பாணம் மையத்துக்கு திருவள்ளுவர் பெயர் சூட்டி இருப்பதை மத்திய மந்திரி எல்.முருகன் பாராட்டி உள்ளார். இதுகுறித்து மத்திய மந்திரி எல்.முருகன் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-
நமது அண்டை நாடான இலங்கையில், மத்திய அரசின் நிதியுதவி கொண்டு அமைக்கப்பட்ட 'யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்கு', உலகப் பொதுமறையான திருக்குறள் தந்த 'தெய்வப்புலவர்' அய்யன் திருவள்ளுவரின் பெயர் சூட்டப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது.
நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியால், கடந்த 2015-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 'யாழ்ப்பாணம் கலாசாரம் மையம்' திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டிருந்தேன்.
பல்வேறு விதமான நவீன வசதிகளுடனும், இரண்டு தேசங்களுக்கும் இடையிலான உறவை குறிக்கின்ற வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கல்வெட்டுகள் மற்றும் பழங்கால படிமங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த கலாசார மையத்திற்கு, தற்போது அய்யன் வள்ளுவரின் பெயர் சூட்டப்பட்டிருப்பது மிகுந்த பொருத்தமானதாக அமைந்துள்ளது.
மேலும், இரண்டு தேசங்களுக்கும் இடையிலான கலாசார உறவானது வலுப்பெறும் என்பதும் கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது. உலகின் தொன்மையான, இனிமையான மொழி தமிழ் என்பதை உலகம் முழுவதும் சென்று உரக்கச் சொல்லி வரும் பிரதமர் நரேந்திர மோடி, தமிழுக்காக ஆற்றி வரும் பணிகள் அளப்பரியது. அதுபோலவே திருக்குறளையும், அய்யன் திருவள்ளுவரின் புகழையும் உலகின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்து வருகிறார்.
பிரான்ஸ் நாட்டின் செர்ஜி நகர் உள்ளிட்ட வெளிநாடுகளில் திருவள்ளு வருக்கு சிலை வைத்தும், ஐ.நா. சபை போன்ற உல கின் மாபெரும் அரங்குகளில் திருக்குறளையும், தமிழ் இலக்கிய வரிகளையும் குறிப்பிட்டு பிரதமர் மோடி பெருமைப்படுத்தினார்.
உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்களை, மொழி, கலாசாரம் மற்றும் வரலாற்று ரீதியாக இணைக்கின்ற பாலமாக திருவள்ளுவர் கலாசார மையம் அமைக்கப்படும் என பா.ஜ.க. கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்து தேர்தல் அறிக்கை வெளியிட்டது.
கொடுத்த வாக்குறுதி யின்படி உலகம் முழுவதும் திருவள்ளுவர் கலாசார மையம் அமைக்க நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாசார மையம் அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவித்தார்.
தற்போது இலங்கையின் யாழ்ப்பாணத்திலும் திருவள்ளுவர் கலாசார மையம் அமைக்கப்பட்டுள்ளது உலக தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.