என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உண்டியல் பணம் திருட்டு"

    • கோவில் பூட்டை உடைத்து துணிகரம்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த மாங்காடு பகுதியில் நாகநாத ஈஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலின் உள்ளே அம்மன் சிலை உள்ளது. இந்தக் கோவிலில் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அப்படி தரிசனம் செய்து விட்டு உண்டியலில் காணிக்கை செலுத்துவர்.

    இந்த நிலையில் நேற்று இரவு தரிசனம் முடிந்து கோவில் நடையை சாத்தி விட்டு சென்றனர். இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் நள்ளிரவு கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அம்மன் கழுத்தில் அணிந்திருந்த தாலி செயின், உண்டியலை உடைத்து அதிலிருந்து பணம் மற்றும் கோவிலில் இருந்த பித்தளை பொருட்களை திருடி சென்றுள்ளனர்.

    இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் ஆற்காடு தாலுகா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் வழக்கு பதிவு செய்து கொள்ளையடித்த மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

    • 3 கோவிலின் உண்டியலில் பல லட்சம் ரூபாய் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
    • கொள்ளை சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி பிரதான சாலையான கதிரேசன் கோவில் சாலையில் மேட்டு காளியம்மன் கோவில், முத்து மாரியம்மன் கோவில், ஆயிரத்தெண் விநாயகர் கோவில் ஆகிய 3 கோவில்கள் உள்ளது.

    இந்நிலையில் நேற்றிரவு மர்மநபர்கள் 3 கோவிலில்கள் வெளிப்பூட்டை உடைத்து கோவில் உள்ளே இருந்த உண்டியல் பூட்டையும் உடைத்து உண்டியலில் இருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர்.

    இந்நிலையில் இன்று காலையில் வந்த கோவில் பூசாரிகள் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதையும், உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சிடைந்தனர்.

    உடனடியாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் மேற்கு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    3 கோவிலின் உண்டியலில் பல லட்சம் ரூபாய் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உண்டியல் எண்ணும் பணி முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும்.
    • ரூ.17,710 திருடியதும் தெரியவந்தது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஒவ்வொரு மாதமும் 20-ந் தேதிக்கு மேல் கோவிலில் உள்ள உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பணம் எண்ணப்படுவது வழக்கம். உண்டியல் எண்ணும் பணி முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும்.

    இந்நிலையில் நேற்று சங்கரநாராயண சுவாமி கோவிலில் துணை ஆணையர் கோமதி முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த பெண்கள் 4 பேர் பணத்தை திருடியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தொடர்ந்து புறக்காவல் நிலைய போலீசார், சந்தேகத்திற்கு இடமான 4 பெண்களை பிடித்து மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    மகளிர் காவலர்கள் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அதில் ஒருவர் தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் மகேஸ்வரி (வயது 42) என்பது போலீசாரை மட்டுமல்லாது பொதுமக்களையும் அதிர்ச்சி அடைய செய்தது.

    அவருடன் சிக்கியவர்கள் சங்கரன்கோவில் அருகே உள்ள கோ. மருதப்பபுரம் கிராமத்தை சேர்ந்த முத்துலட்சுமி (65), மல்லிகா (31), மாரியம்மாள் (40) ஆகியோர் என்பதும், 4 பேரும் ஒன்றாக இணைந்து உண்டியல் பணம் எண்ணும் போது ரூ.17 ஆயிரத்து 710-ஐ திருடியதும் தெரியவந்தது.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சங்கரன்கோவில் டவுன் போலீசார் உண்டியல் பணம் திருட்டில் ஈடுபட்ட தலைமை காவலர் மற்றும் 3 பெண்களை கைது செய்தனர்.

    ×