search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாய்ந்தது"

    • சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா மல்லிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் எடப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணி புரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
    • சிறுமியிடம் சீனிவாசன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா மல்லிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் ( வயது 30). இவர் எடப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணி புரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் சீனிவாசன் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்தார். இது சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் சீனிவாசனை கண்டித்துள்ளனர். இதனையடுத்து சீனிவாசன் மாணவிக்கு செல்போன் வாங்கி கொடுத்து பெற்றோருக்கு தெரியாமல் மீண்டும் பழக ஆரம்பித்தார்.

    இந்த நிலையில் சிறுமியிடம் சீனிவாசன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சீனிவாசன் மீது புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வளர்மதி, சப்-இன்ஸ்பெக்டர் சாரதா ஆகியோர் சீனிவாசன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை, கஞ்சா குட்கா மற்றும் போதை பொருட்கள் விற்பனை, ரேஷன் அரிசி கடத்துவோர், விபசார தொழிலில் ஈடுபடுபவர் மீதும் குண்டர் சட்டம் பாய்கிறது.
    • 175 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

    சேலம்:

    சேலம் மாநகரில் தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    வழிப்பறியில் ஈடுபடு–வோர், தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை, கஞ்சா குட்கா மற்றும் போதை பொருட்கள் விற்பனை, ரேஷன் அரிசி கடத்துவோர், விபசார தொழிலில் ஈடுபடுபவர் மீதும் குண்டர் சட்டம் பாய்கிறது.

    இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் ஓராண்டிற்கு சிறையில் இருந்து வெளியே வர முடியாது.

    தமிழக சிறைகளில் 1000-க்கும் மேற்பட்டோர் குண்டாசில் கைதாகி சிறையில் உள்ளனர்.

    சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோதா உத்தரவின் பேரில் இந்த ஆண்டு 175 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

    இவர்களில் 80 பேர் ரவுடிகள், 16 பேர் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர்கள், 51 பேர் வழிப்பறி மற்றும் குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள்.

    கடந்த ஆண்டில் 129 பேர் குண்டாசில் கைது செய்யப்பட்டு இருந்தனர். கடந்த ஆண்டு காட்டிலும் இந்த ஆண்டு கூடுதலாக 46 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கை வைத்து பக்கெட்டில் இருந்த தண்ணீர் சூடாகி விட்டதா என பார்த்தபோது மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார்.
    • இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள வில்லுக்குறி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் ஏசு ராஜேந்திரன். இவரது மனைவி பிரேமா (வயது 48) நேற்று காலை குளிப்ப தற்காக ஹீட்டரை ஆன் செய்து உள்ளார். சிறிது நேரம் கழித்து வழக்கம் போல கை வைத்து பக்கெட்டில் இருந்த தண்ணீர் சூடாகி விட்டதா என பார்த்ததாக கூறப்படுகிறது.

    அப்போது மின்சாரம் தாக்கியதில் பிரேமா தூக்கி வீசப்பட்டார். அவரை உறவினர்கள் மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப்பின் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே பிரேமா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து அவரது கணவர் ஏசு ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    ×