என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மணக்குடி"
- வீட்டை சகோதரி ராதிகா குடும்பத்தினர் அபகரிக்க முயன்றதாக கூறப்படுகிறது
- ராதிகாவின் கணவர் மற்றும் குடும்பத்தினர் ஆத்திரமடைந்தனர்.
நாகர்கோவில்: குமரி மாவட்டம் கீழமணக்குடி பகுதியைச்சேர்ந்தவர் டீசன் என்ற கென்சலா கிரேசி (வயது 60),மீனவர். இவரது சகோதரியின் மகன் தினேஷ் குமார். இவரது வீட்டை சகோதரி ராதிகா குடும்பத்தினர் அபகரிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதற்கு டீசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் டீசன் மீது ராதிகாவின் கணவர் மற்றும் குடும்பத்தினர் ஆத்திரமடைந்தனர்.
இந்தநிலையில் சம்பவத்தன்று டீசன், வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது ராதிகாவின் கணவர் பிரபு அவரது சகோதரர் ராஜ் என்ற ஸ்டாலின்ராஜ் ஆகியோர் சரமாரியாக தாக்கினார்கள். இதில் டீசன் பரிதாபமாக இறந்தார். இதை தடுக்க வந்த 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தென்தாமரை குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.பிரபு ராஜ் மற்றும் 5 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர் .பின்னர் இவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கு விசாரணை முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு கூறப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பிரபு,ராஜ் உள்பட 5 பேரும் ஆஜரானார்கள். நீதிபதி ஜோசப் ஜாய் இன்று தீர்ப்பு கூறினார். கைது செய்யப்பட்ட பிரபு,ராஜ் இருவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு கூறப்பட்டது. இருவருக்கும் ஆயுள் தண்டனையும் ரூ.5ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.
அரசு தரப்பில் வழக்க றிஞர் மதியழ கன் ஆஜரானார். பிரபு,ராஜ் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து போலீசார் அவர்களை ஜெயிலில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
- 10 பேர் மீது வழக்கு
- போலீசார் விசாரணை
கன்னியாகுமரி:
மணக்குடியில் கிரிக்கெட் விளையாடியது தொடர்பாக இரு தரப்பினருக்கிடையே பிரச்சினை இருந்து வந்தது.இது தொடர்பாக மோதல் ஏற்பட்டது.
இது குறித்து மணக்குடி யைச் சேர்ந்த தோமஸ் (வயது 40) என்பவர் சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் மணக்குடியைச் சேர்ந்த சுபின் (25), ஆன்றனி (32), சுனாமி காலனியைச் சேர்ந்த அகில் (23), ஷியாம் (25), நிகில் (20) ஆகிய 5 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதேபோல் மணக்குடி வின்சென் மேற்கு தெருவை சேர்ந்த ஆண்டனி கொடுத்த புகாரின் பேரில் சர்ச் தெருவை சேர்ந்த தாமஸ் (40), ராபின் (35), அகில் (21), டேவிட் (45), சூசை ஆகிய 5 பேர் மீதும் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரு தரப்பினர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் 147, 148, 294பி, 323, 506 2 ஐ.பி.சி. ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இடம் மணக்குடியில் தேர்வு செய்யப்பட்டு 5 வருடங்களுக்கு முன் வாங்கப்பட்டது.
- மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான பணி தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் ரூ.24 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமையவுள்ள ஒருங்கிணைந்த பஸ் நிலையத்துக்கான பூமி பூஜையில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறையில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்காக தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இடம் மணக்குடியில் தேர்வு செய்யப்பட்டு 5 வருடங்களுக்கு முன் வாங்கப்பட்டது.
இந்நிலையில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் திட்டம் 2021-2022-ன் கீழ்
தமிழக அரசு ரூ.24 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்தது.
புதிய ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைப்பதற்காக டெண்டர் விடப்பட்டு நகராட்சி அலுவலகத்தில் நகராட்சித் தலைவர் செல்வராஜ் தலைமையில் அண்மையில் கூட்டம் நடத்தி ஒப்புதல் பெறப்பட்டது.
இதையடுத்து, புதிய பஸ் நிலையத்துக்கான பூமிபூஜை அடிக்கல் நாட்டு விழா இன்று காலை வாஸ்துபடி 6 லிருந்து 7 மணிக்குள் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜகுமார், நிவேதா முருகன், நகராட்சி நகர மன்ற தலைவர் செல்வராஜ், நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி முன்னிலையில், திருக்கடையூர் மகேஷ் குருக்கள், பாலச்சந்திர சிவாச்சாரியார் ஆகியோர் பூஜை செய்ய தருமபுர ஆதீனம் 27-வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்துகொண்டு ஒருங்கிணைந்த புதிய பஸ் நிலையத்திற்கான பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில் மாவட்ட குழு உறுப்பினரும் மயிலாடுதுறை வடக்கு ஒன்றிய செயலாளர் இளையபெருமாள், தெற்கு ஒன்றிய செயலாளர் ஞான இமயநாதன், ஒன்றிய குழு தலைவர் காமாட்சி மூர்த்தி, தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் விஜய், மணக்குடி ஊராட்சி மன்ற தலைவர் வீரமணி, நகர மன்ற துணைத் தலைவர் சிவக்குமார், மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான பணி தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்