என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அம்பேத்கர் நினைவுநாள்"

    • அம்பேத்கர் நினைவுநாளில் பைக்குகளில் வந்து போலீசாரிடம் தகராறு செய்த கும்பல் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • இதையடுத்து 3 மோட்டார் சைக்கிள்களில் வீலிங் செய்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி தலைமறைவான 5-க்கும் மேற்பட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை

    அம்பேத்கரின் 66-வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    இதற்காக மாநகரம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அன்று மதுரை சிந்தாமணி பஸ் நிறுத்த சந்திப்புக்கு, 3 மோட்டார் சைக்கிள்கள் வந்தன. அதில் இருந்த வாலிபர்கள் வீலிங் செய்து அமளியில் ஈடுபட்டனர்.

    அவர்களை போலீசார் எச்சரித்தனர். அந்த கும்பல் போலீசாரை சூழ்ந்து கொண்டு கூச்சலிட்டனர். இதுகுறித்து கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அந்த கும்பல் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 மோட்டார் சைக்கிள்களில் வீலிங் செய்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி தலைமறைவான 5-க்கும் மேற்பட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • அனைத்து மக்களின் நலனுக்குமாகப் பயன்படுத்திய மாமனிதர் அண்ணல் பாபா சாகேப் அம்பேத்கரின் நினைவு தினம் இன்று.
    • ஆதிக்க சக்திகளிடமிருந்து நம்மைக் காத்துக்கொள்வதற்காக அவர் வழங்கிய அரசியல் சாசனத்தை உயர்த்திப் பிடிப்போம்.

    சென்னை:

    சட்டமேதை அம்பேத்கர் நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    சட்டம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் தனக்கிருந்த பேரறிவை, சமூகச் சீர்திருத்தத்துக்கும் அனைத்து மக்களின் நலனுக்குமாகப் பயன்படுத்திய மாமனிதர் அண்ணல் பாபா சாகேப் அம்பேத்கரின் நினைவு தினம் இன்று.

    ஆதிக்க சக்திகளிடமிருந்து நம்மைக் காத்துக்கொள்வதற்காக அவர் வழங்கிய அரசியல் சாசனத்தை உயர்த்திப் பிடிப்போம். அண்ணலின் நினைவை நெஞ்சில் சுமப்போம் என்று கூறியுள்ளார். 

    • சமூக நீதிக்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளை நினைத்துப் பார்த்து அவருக்கு அஞ்சலி செலுத்துவோம்.
    • பாராளுமன்றத்தில் விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை வழங்கியுள்ளார்.

    கன்னியாகுமரி தொகுதி எம்.பி விஜய் வசந்த், இன்று அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில், "இந்திய அரசியலமைப்பின் பிரதான சிற்பி அண்ணல் பி.ஆர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளில் சமூக நீதிக்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளை நினைத்துப் பார்த்து அவருக்கு அஞ்சலி செலுத்துவோம்.

    சமத்துவம் நிறைந்த சமூகத்தை உருவாக்க அவர் கண்ட கனவினை நிறைவேற்ற பாடு படுவதே அவருக்கு நாம் செலுத்தும் மரியாதை" என்றார்.

    இதைதொடர்ந்து, பாராளுமன்றத்தில் விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை வழங்கியுள்ளார். இதுகுறித்து கூறிய அவர், "

    கங்கை இங்கு வரவேண்டும் குமரி கடலை தொட வேண்டும் என்பதற்கேற்ப கங்கை நதியை குமரி கடலில் கொண்டு சேர்க்க மத்திய அரசு திட்டம் ஒன்றினை கொண்டு வர வேண்டும் என்பது குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை வழங்கி உள்ளேன்.

    இந்தத் திட்டம் விவசாயத்திற்கு பெரிதும் உதவும். மேலும் வெள்ளப்பெருக்கினால் ஏற்படும் அழிவுகளை தடுக்கவும் இது வழிவகை செய்யும். நீர்வழிப் போக்குவரத்து மூலம் பெரும் லாபத்தினையும் ஈட்டி தரும். எல்லாவற்றுக்கும் மேலாக இமயமலை குமரிக்கடலை தொடும்" என்றார்.

    ×