என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஓவியர்"
- ஓவியம் வரைவது அவனுக்கு பிடித்த ஒன்றாக மாறியது. தொடர்ந்து பல ஓவியங்கள் வரைந்தான்.
- சமீபத்தில் ஏஸ் லியாம் வரைந்த ஓவியங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டன.
கானா நாட்டை சேர்ந்த ஏஸ்-லியாம் நானா சாம் அன்க்ரா என்ற சிறுவன் உலகின் இளம் வயது ஓவியராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். 1 வருடமும், 152 நாட்களும் ஆன வயதில் அவர் பல ஓவியங்கள் வரைந்துள்ளார். அவற்றில் 9 ஓவியங்கள் கண்காட்சியில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து சிறுவனின் தாயார் சான் டெல்லி கூறுகையில், ஓவியங்கள் வரைவதில் ஏஸ் லியாமுக்கு இருந்த ஆர்வம் அவர் 6 மாத குழந்தையாக இருந்த போதே வெளிப்பட்டது. அவன் நடக்க கற்றுக்கொண்டிருக்கும் போது நான் வேலையில் பிசியாக இருந்தேன். எனவே குழந்தையையும் பிசியாக வைத்திருக்கும் விதமாக கேன் வாஷ் பேப்பரை தரையில் விரித்து அதில் சிறிது பெயிண்டை ஊற்றினேன். ஏஸ் லியாம் அந்த கேன் வாஷ் பேப்பர் முழுவதும் பெயிண்டை பூசியது மூலம் தனது முதல் ஓவியத்தை வரைந்தான். அதன் பிறகு ஓவியம் வரைவது அவனுக்கு பிடித்த ஒன்றாக மாறியது. தொடர்ந்து பல ஓவியங்கள் வரைந்தான்.
சமீபத்தில் ஏஸ் லியாம் வரைந்த ஓவியங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டன. அதில் 10 ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டதில் 9 ஓவியங்கள் விற்றுத்தீர்ந்தது என்றார்.
- ஓவியர் தனது மனைவியிடம் வரதட்சணையாக பணம், நகை கேட்டு சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
- ஓவியர் மனைவியை காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு வேகமாக தப்பிச் சென்றார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள முதலார் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய வாலிபர் ஓவியராக உள்ளார். இவர் வீடுகளில் அலங்கார ஓவியம் வரையும் வேலை செய்து வருகிறார். இவரும் அணைக்கரையை சேர்ந்த 23 வயதுடைய பட்டதாரி இளம்பெண்ணும் கடந்த 2021-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு 1½ வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் ஓவியர் தனது மனைவியிடம் வரதட்சணையாக பணம், நகை கேட்டு சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த இளம்பெண் கடந்த ஆண்டு தொடக்கத்தில் கணவரை விட்டு பிரிந்து குழந்தையுடன் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். மேலும் அவர் ஆற்றூர் பகுதியில் உள்ள ஒரு கல்வியியல் கல்லூரியில் பி.எட். படித்து வருகிறார். தினமும் கல்லூரிக்கும் ஸ்கூட்டரில் சென்று வருவது வழக்கம்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் அந்த இளம்பெண் கல்லூரியில் இருந்து ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வீட்டின் முன்பு உள்ள சாலையில் ஓவியர் காருடன் நின்று கொண்டிருந்தார். அவர் மனைவி வந்ததும் அவரை வழிமறித்து நிறுத்தி தகராறு செய்தார்.
தகராறு முற்றிய நிலையில் மனைவியின் ஸ்கூட்டர் சாவியை பிடுங்கி கொண்டு காரில் ஏறினார். அவரை இளம்பெண் தடுக்க முயன்றபோது காரில் கிடந்த கம்பியால் அவரை தாக்கிவிட்டு காரில் புறப்பட தயாரானார். உடனே அந்த இளம்பெண் கார் ஜன்னல் வழியாக தனது ஸ்கூட்டர் சாவியை வாங்க முயன்றார்.
அப்போது ஓவியர் காரை இயக்கி மனைவியை தரதரவென இழுத்துச்சென்றார். இதனால் அந்த பெண் அலறினார். இதை பார்த்து அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அத்துடன் சில இளைஞர்கள் காரைத் துரத்தி சென்றனர். உடனே ஓவியர் மனைவியை காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு வேகமாக தப்பிச் சென்றார். இதில் அந்த இளம்பெண் கீழே விழுந்து காயம் அடைந்தார். அவரை பொதுமக்கள் மீட்டு குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து திருவட்டார் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி ஓவியரை தேடி வருகின்றனர். இதற்கிடையே ஓவியர் மனைவியை காரில் தரதரவென இழுத்து சென்ற பதைபதைக்க வைக்கும் காட்சி அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது. அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- இணையத்தில் வைரலாக பரவும் சில வீடியோக்கள் தவறவிட முடியாத அளவுக்கு விலை மதிப்பானதாக மாறி விடும்.
- படத்தை வரைந்த பிறகு சோஹன் அந்த படத்தை ஐஸ்கிரீம் விற்பனையாளருக்கு பரிசாக அளித்தார்.
இணையத்தில் வைரலாக பரவும் சில வீடியோக்கள் தவறவிட முடியாத அளவுக்கு விலை மதிப்பானதாக மாறி விடும். அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் சோஹன் என்பவர் பகிர்ந்துள்ள வீடியோவில் அவர் ஒரு ஐஸ்கிரீம் கடைக்குள் செல்கிறார். அங்கு கவுன்டருக்கு பின்னால் நிற்கும் விற்பனையாளர் ஒருவரை பார்த்து அவரின் உருவப்படத்தை வரைகிறார்.
படத்தை வரைந்த பிறகு சோஹன் அந்த படத்தை ஐஸ்கிரீம் விற்பனையாளருக்கு பரிசாக அளித்தார். தனது படத்தை பார்த்த ஐஸ்கிரீம் விற்பனையாளர் மகிழ்ச்சியில் சிரிக்கிறார். இந்த வீடியோக்கள் தற்போது வைரலாக பரவி 10 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ளது.
- கோவில்பட்டியில் தொழில் முனைவோருக்கான பயிற்சி பட்டறை நடத்தியது.
- ஓவியர்களுக்கு சான்றிதழ்களை மாநிலத் தலைவர் அடைக்கலம் வழங்கினார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் தமிழ்நாடு அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் நல சங்கம் மற்றும் நிப்பான் பெயிண்ட்ஸ் இணைந்து தொழில் முனைவோருக்கான பயிற்சி பட்டறை நடத்தியது. விழாவில் "முன் கற்றலை அங்கீகரிக்கும் " தொழில் முனைவோருக்கான பயிற்சி பட்டறையில் பங்கேற்ற பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்களுக்கு என்.சி.வி.இ.டி.யால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, மத்திய அரசின் 10 லட்சத்திற்கான இன்சூரன்ஸ் அட்டை வழங்கும் நிகழ்ச்சியும், மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை, மார்க்கெட் சாலையில் அமைந்துள்ள தேவர் மகாஜன சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் அடைக்கலம் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் சம்சுகனி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் தங்கமாரியப்பன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அவைத் தலைவர் ஸ்டீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மத்திய அரசின் தொழில் முனைவோருக்கான பயிற்சி பட்டறையில் பங்கேற்ற பெயிண்டர் மற்றும் ஓவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் இன்சூரன்ஸ் அட்டையை மாநிலத் தலைவர் அடைக்கலம் உறுப்பினர்களுக்கு வழங்கினார். மேலும் நிகழ்ச்சியில் கயத்தாறு ஒன்றியத் தலைவர் ஜெயபால், கோவில்பட்டி ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன், அமைப்புச் செயலாளர் பேச்சிமுத்து, ஒன்றிய செயலாளர் மாடசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்