என் மலர்
நீங்கள் தேடியது "சேப்பாக்கம்"
- 2023-ம் ஆண்டின் முதல் 3 மாதங்கள் இந்தியாவில் நடக்கும் சர்வதேச போட்டிகள் அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டது.
- சேப்பாக்கத்தில் மார்ச் 22-ம் தேதி இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் ஒருநாள் போட்டியில் மோதுகின்றன.
மும்பை:
2023-ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச போட்டிகளின் அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
இதில் இந்திய அணி இலங்கை, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளது.
இலங்கைக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டியிலும் விளையாடுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள்போட்டியிலும் இந்திய அணி விளையாடுகிறது. இதில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இலங்கைக்கு எதிரான தொடர்:
முதல் டி20 போட்டி : ஜனவரி 3, மும்பை
2-வது டி20 போட்டி : ஜனவரி 5, புனே
3-வது டி20 போட்டி : ஜனவரி 7, ராஜ்கோட் .
முதல் ஒருநாள் போட்டி: ஜனவரி 10, கவுகாத்தி
2-வது ஒருநாள் போட்டி: ஜனவரி 12, கொல்கத்தா
3-வது ஒருநாள் போட்டி: ஜனவரி 15, திருவனந்தபுரம் .
நியூசிலாந்துக்கு எதிரான தொடர்:
முதல் டி20 போட்டி: ஜனவரி 18 , ஹைதராபாத்
2-வது டி20 போட்டி: ஜனவரி 21, ராய்பூர்
3-வது டி20 போட்டி: ஜனவரி 24, இந்தூர்
முதல் ஒருநாள் போட்டி: ஜனவரி 27, ராஞ்சி
2-வது ஒருநாள் போட்டி: ஜனவரி 29, லக்னோ
3-வது ஒருநாள்: பிப்ரவரி 1, அகமதாபாத்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்:
முதல் டெஸ்ட்: பிப்ரவரி 9-13, நாக்பூர்
2-வது டெஸ்ட்: பிப்ரவரி 17-21,டெல்லி
3-வது டெஸ்ட்: மார்ச் 1-5, தர்மசாலா
4-வது டெஸ்ட்: மார்ச் 9-13, அகமதாபாத்
முதல் ஒருநாள்: மார்ச் 17, மும்பை
2-வது ஒருநாள்: மார்ச் 19, விசாகப்பட்டினம்
3-வது ஒருநாள்: மார்ச் 22, சென்னை .
- நாளை முதல் வருகிற 12-ந்தேதி வரை தமிழ்நாடு- கர்நாடகா போட்டி நடைபெறுகிறது
- தமிழ்நாடு ஐந்து போட்டியில் மூன்றில் வெற்றி பெற்றுள்ளது.
ரஞ்சி கோப்பைக்கான போட்டிகள் நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அணி தனது 6-வது லீக் போட்டியில் கர்நாடகா அணியை எதிர்த்து நாளை விளையாட இருக்கிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
இந்த போட்டியில் ரசிகர்கள் இலவசமாக நேரில் கண்டு ரசிக்கலம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
2023-24 சீசனில் தமிழ்நாடு அணி இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் தமிழ்நாடு மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது. ஒரு போட்டியில் தோல்வியடைந்துள்ளது.
எலைட் குரூப் "ஜி" பிரிவில் இடம் பிடித்துள்ள தமிழக அணி புள்ளிகள் பட்டியில் முதலிடம் வகிக்கிறது. கர்நாடகா 2-வது இடத்திலும் திரிபுரா 3-வது இடத்திலும் குஜராத் 4-வது இடத்திலும் உள்ளன.
- மார்ச் 22-ம் தேதி ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கவுள்ளது
- முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
வரும் 22-ம் தேதி ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.
சிஎஸ்கே அணி சென்னையில் விளையாடும் போட்டிக்கான டிக்கெட் ஆன்லைனில் மட்டுமே வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு டிக்கெட்டுகள் விற்கப்படுவதை தடுக்கவே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், சேப்பாக்கத்தில் நடைபெறும் சென்னை - பெங்களூர் அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 18-ம் தேதி காலை 9:30 மணிக்கு தொடங்குகிறது. குறைந்தபட்ச டிக்கெட் விலை 1700 ரூபாயாகவும் அதிகபட்ச டிக்கெட் விலை 7500 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. PAYTM மற்றும் Insider மூலமாக டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- கடற்கரை-சிந்தாதிரிப்பேட்டை மின்சார ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
- கிரிக்கெட் ரசிகர்கள் வசதிக்காக கூடுதல் ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.
சென்னை:
17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நாளை (22-ந்தேதி) தொடங்குகிறது. இரவு 8 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் போட்டி நடைபெற இருக்கு நிலையில் சிந்தாதிரிப்பேட்டை முதல் வேளச்சேரி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.
கடற்கரை எழும்பூர் வரையிலான 4வது பாதைக்கான பணிகள் நடைபெறுவதால் பறக்கும் ரெயில் வழித்தடத்தில் கடற்கரை-சிந்தாதிரிப்பேட்டை மின்சார ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதால் மின்சார ரெயிலில் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் வசதிக்காக கூடுதல் ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.
அதன்படி ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு 22, 26 ஆகிய தேதிகளில் வேளச்சேரி - சிந்தாதிரிப்பேட்டை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
- லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.
- ராஜஸ்தானை வீழ்த்தி சி.எஸ்.கே. 7-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி சென்னையில் தொடங்கியது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்த போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் உள்ளூர், வெளியூர் என தலா 14 ஆட்டங்களில் மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.
நடப்பு சாம்பியனும், ஐ.பி.எல். கோப்பையை 5 முறை வென்ற அணியுமான சென்னை சூப்பர் கிங்ஸ் 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.
பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க வேண்டு மானால் எஞ்சிய 2 ஆட்டங்களில் சி.எஸ்.கே. கண்டிப்பாக வெல்ல வேண்டும். அதே நேரத்தில் ரன் ரேட்டையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
சி.எஸ்.கே. அணி சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த 6 ஆட்டத்தில் 4-ல் வெற்றி (பெங்களூரு 6 விக்கெட் , குஜராத் 63 ரன், கொல்கத்தா 7 விக்கெட், ஐதராபாத் 78 ரன்) பெற்றது. இரண்டில் (லக்னோ 6 விக்கெட், பஞ்சாப் 7 விக்கெட்) தோற்றது.
வெளியூரில் ஆடிய 5 போட்டியில் இரண்டில் வெற்றி (மும்பை 20 ரன், பஞ்சாப் 28 ரன்) பெற்றது. 4 ஆட்டத்தில் (டெல்லி 20 ரன், ஐதராபாத் 6 விக்கெட், லக்னோ 8 விக்கெட் , குஜராத் 35 ரன்) தோற்றது.

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்சை நாளை (12-ந் தேதி) சந்திக்கிறது. இந்த ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு நடக்கிறது.
சேப்பாக்கத்தில் நடைபெறும் 7-வது லீக் ஆட்டமாகும். இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். அவர்கள் மற்றொரு கோலாகலத்துக்கு தயாராகிவிட்டனர்.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி சென்னை சூப்பர் கிங்சுக்கு உள்ளது. வெற்றி பெற்றால் தான் 'பிளே ஆப்' சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும். ராஜஸ்தானை வீழ்த்தி சி.எஸ்.கே. 7-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் மிகவும் வலுவாக இருக்கிறது. இதனால் அந்த அணியை வீழ்த்துவது சென்னை அணிக்கு சவாலானதே. சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் ஆதரவுடன் ஆடுவது மட்டுமே சி.எஸ்.கே.வுக்கு கூடுதல் பலமாகும்.
குஜராத்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் சென்னை அணி மிகவும் மோசமாக விளையாடியது. பதிரனா, முஸ்டாபிசுர் ரகுமான் இல்லாதது பந்து வீச்சில் பலவீனத்தை காட்டியது.

வீரர்கள் அனைவரும் முழு திறமையை வெளிப் படுத்தினால் மட்டுமே ராஜஸ்தானை வீழ்த்த முடியும்.
டோனி கடைசி கட்ட ஓவர்களில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் சி.எஸ்.கே. ரசிகர்கள் அவரது பேட்டிங்கை காண மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.
சஞ்சு சாம்சன் தலைமை யிலான ராஜஸ்தான் ராயல்ஸ் 8 வெற்றி, 3 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி சி.எஸ்.கே.வை வீழ்த்தி 9-வது வெற்றியுடன் 'பிளே ஆப்' சுற்றுக்கு முன்னேறும் ஆர்வத்தில் உள்ளது.
ராஜஸ்தான் அணியில் கேப்டன் சஞ்சு சாம்சன், பட்லர் ரியான் பராக், யசுவேந்திர சாஹல், அஸ்வின் போல்ட் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
இரு அணிகளும் நாளை மோதுவது 29-வது ஆட்டமாகும். இதுவரை நடந்த 28 போட்டியில் சென்னை 15-ல், ராஜஸ்தான் 13-ல் வெற்ற பெற்றுள்ளன.
- சென்னை சூப்பர் கிங்ஸ் 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.
- பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க வேண்டுமானால் எஞ்சிய 2 ஆட்டங்களில் சி.எஸ்.கே. கண்டிப்பாக வெல்ல வேண்டும்.
சென்னை:
17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி சென்னையில் தொடங்கியது.
நடப்பு சாம்பியனும், ஐ.பி.எல். கோப்பையை 5 முறை வென்ற அணியுமான சென்னை சூப்பர் கிங்ஸ் 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.
பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க வேண்டுமானால் எஞ்சிய 2 ஆட்டங்களில் சி.எஸ்.கே. கண்டிப்பாக வெல்ல வேண்டும். அதே நேரத்தில் ரன் ரேட்டையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
இத்தகைய இக்கட்டான கட்டத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ராஜஸ்தான் அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் தேர்வு செய்தார்.
- போட்டி முடிந்ததும் சென்னை அணி ரசிகர்கள் மைதானத்திலேயே இருக்க வேண்டுமென்று சென்னை அணி நிர்வாகம் கோரிக்கை வைத்துள்ளது.
- சென்னை அணி ரசிகர்களுக்கு ஸ்பெஷலான ஒன்று இருக்கிறது என சிஎஸ்கே அணி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
ஐபிஎல் 2024 தொடரில் நடப்பு சாம்பியனும், ஐ.பி.எல். கோப்பையை 5 முறை வென்ற அணியுமான சென்னை சூப்பர் கிங்ஸ் 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.
பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க வேண்டுமானால் எஞ்சிய 2 ஆட்டங்களில் சி.எஸ்.கே. கண்டிப்பாக வெல்ல வேண்டும். இத்தகைய இக்கட்டான கட்டத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ராஜஸ்தான் அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.
இந்நிலையில், இந்த போட்டி முடிந்ததும் சென்னை அணி ரசிகர்கள் மைதானத்திலேயே இருக்க வேண்டுமென்று சென்னை அணி நிர்வாகம் கோரிக்கை வைத்துள்ளது.
சென்னை அணி ரசிகர்களுக்கு ஸ்பெஷலான ஒன்று இருக்கிறது என சிஎஸ்கே அணி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
?? Requesting the Superfans to Stay back after the game! ??
— Chennai Super Kings (@ChennaiIPL) May 12, 2024
Something special coming your way! ??#CSKvRR #YellorukkumThanks ?? pic.twitter.com/an16toRGvp
- பிறந்த நாள் கொண்டாட்டத்தில் இந்திய அணியினர் கலந்து கொண்டனர்.
- இதைத் தொடர்ந்து அனைவரும் மாறி மாறி கேக்-ஐ முகத்தில் பூசிக் கொண்டனர்.
இந்திய கிரிக்கெட்டில் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ரசிச்சந்திரன் அஷ்வின். அஷ்வின் இன்று 38 ஆவது பிறந்தநாள் கொண்டாடினார். அஷ்வினின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் இந்திய அணியினர் கலந்து கொண்டனர்.
வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி காரணமாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணி பயிற்சி செய்த நிலையில், அஷ்வினின் பிறந்த நாள் கொண்டாட்டம் மைதானத்தின் டிரெசிங் ரூமிலேயே நடைபெற்றது. இதில் இந்திய வீரர்கள் அஷ்வின் முகத்தில் கேக்கை பூசினர். இதைத் தொடர்ந்து அனைவரும் மாறி மாறி கேக்-ஐ முகத்தில் பூசிக் கொண்டனர்.
அதன்பிறகு அஷ்வின் கேக்-ஐ வெட்ட அணியினர் அனைவரும் அவரை வாழ்த்தி பாடினர். அஷ்வின் பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
- இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.
- 2 ஆவது டி20 போட்டி ஜனவரி 25 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து ஆகிய அணிகள் 5 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி நாளை கொல்கத்தாவில் நடைபெறுகிறது.
இதனையடுத்து 2 ஆவது டி20 போட்டி வரும் 25 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் வரும் 25ம் தேதி நடக்கும் இந்தியா - இங்கிலாந்து இடையிலான 2-வது டி20 போட்டியைக் காண வரும் ரசிகர்கள் மெட்ரோ ரெயிலில் இலவசமாக பயணிக்கலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
அன்றைய நாளில் மெட்ரோ ரெயில் நிலையங்களில் போட்டிக்கான டிக்கெட்டை மட்டும் காண்பித்து இலவசமாக பயணிக்கலாம்.
- மூன்று ரெயில்கள் நேரம் மாற்றப்பட்டு இயக்கப்பட இருக்கிறது.
- வேளச்சேரியில் இருந்து புறப்படும் ரெயில் சேப்பாக்கத்தில் 10 நிமிடங்கள் நின்று செல்லும்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் இன்று கொல்கத்தாவில் தொடங்குகிறது. 2-வது போட்டி வருகிற 25-ந்தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.
இந்த போட்டியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்திற்கு வருகை தருவார்கள். அவர்கள் பத்திரமாக திரும்பி செல்லும் வகையில் சென்னை கடற்கரை- வேளச்சேரி, வேளச்சேரி- சென்னை கடற்கரை EMU ரெயில் சேவையில் சில மாற்றம் செய்யப்படுகிறது.
41086 என்ற ரெயில் வேளச்சேரியில் இரவு 10 மணிக்கு புறப்படும். சேப்பாக்கம் நிலையத்திற்கு 10.27 நிமிடத்திற்கு வந்தடையும். 10 நிமிடங்கள் சேப்பாக்கம் நிலையத்தில் ரெயில் நிற்கும். பின்னர் 10.37 மணிக்கு புறப்பட்டு செல்லும் 10.52 மணிக்கு சென்னை கடற்கரை சென்றடையும்.
41083 என்ற ரெயில் சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து வழக்கமாக இரவு 9.50 மணிக்கு புறப்படும். அதற்குப் பதிலாக இரவு 10 மணிக்கு புறப்படும். சேப்பாக்கம் ரெயில் நிலையத்திற்கு இரவு 22.10 மணிக்கு வந்தடையும். வேளச்சேரிக்கு இரவு 10.45 மணிக்கு சென்றடையும்.
41085 என் ரெயில் வழக்கமாக சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 10.20 மணிக்கு புறப்படும். தற்போது இரவு 10.30 மணிக்கு புறப்படும். சென்னை சேப்பாக்கம் ரெயில் நிலையத்திற்கு 22.40 மணிக்கு வந்தடையும். இரவு 11.15 மணிக்கு வேளச்சேரி சென்றடையும்.
- 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்.
- இரவிலும் உண்ணாவிரதத்தை தொடர்ந்து நாளை காலையில் முடிக்க திட்டம்.
சென்னை:
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் இன்று காலை தொடங்கியது. சேப்பாக்கம் சமூக நல ஆணையரகம் அருகில் போடப்பட்ட சாமினா பந்தலில் உண்ணாவிரதம் இருந்தனர்.
சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யவும், 95 அரசாணையை ரத்து செய்தல், ஓய்வு பெறும் போது ஒட்டுமொத்த தொகையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்.
83 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்பிட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடக்கிறது. சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் ஆர்.கலா தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஜெஸி வரவேற்றார்.
மாநில துணை தலைவர்கள் பெரியசாமி, அண்ணாதுரை, தமிழரசன், மஞ்சுளா, வாசுகி, மாநில செயலாளர்கள் கற்பகம், சுமதி, மகேஸ்வரி, பாண்டிச் செல்வி, லதா, நிர்மலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்து பல்வேறு தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர். இரவிலும் உண்ணாவிரதத்தை தொடர்ந்து நாளை காலையில் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.