search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழுவினர் ஆய்வு"

    • கரைப்பாளையத்தில் கடந்த மார்ச் 11-ந் தேதி நித்யா (28) என்ற பட்டதாரி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார்.
    • இது தொடர்பாக வெல்லம் ஆலையில் பணிபுரிந்து வந்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகே கரைப்பாளையத்தில் கடந்த மார்ச் 11-ந் தேதி நித்யா (28) என்ற பட்டதாரி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வெல்லம் ஆலையில் பணிபுரிந்து வந்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார்.

    இதனை தொடர்ந்து, வெளி மாநில தொழிலாளர்கள் பணிபுரியும் வெல்ல ஆலை கொட்டகைகள், டிராக்டர்கள், குடிசைகளுக்கு தீ வைப்பது, வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டகை குடியிருப்பில் தூங்கிக்கொண்டிருந்த வெளி மாநில தொழிலாளர்கள் மீது தீ வைப்பது, வாழைத் தோட்டத்தில் புகுந்து மரங்களை வெட்டி சாய்ப்பது உள்ளிட்ட பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் கடந்த மார்ச் மாதம் முதல் நடந்து வருகிறது.

    இதனால் இப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால், ஜேடர்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனிடையே, நித்யா கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டு, சி.பி.சி.ஐ.டி இன்ஸ்பெக்டர் பிரபா தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி உத்தரவின் பேரில், காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் தலைமையிலான குழுவினர் கொலை செய்யப்பட்ட நித்யாவின் குடும்பத்தினர், தீ வைக்கப்பட்ட வெல்ல ஆலைகள், பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வீடுகள், வாழை மரங்கள் வெட்டப்பட்ட தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

    பின்னர் செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜேடர்பாளையம் பகுதியில் நடைபெற்ற குற்ற சம்பவங்கள் குறித்து உண்மை கண்டறிய தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் குழு அமைத்து விசாரணையை தொடங்கியுள்ளோம். பல கட்டங்களாக ஆய்வு செய்து காங்கிரஸ் கட்சி தலைமையிடம் ஆய்வை சமர்ப்பிப்போம்.

    பாதிக்கப்பட்ட நித்யா குடும்பத்தினருக்கு தமிழக அரசு உரிய நிவாரண நிதி வழங்க வேண்டும். கலவரத்தில் சேதம் அடைந்த விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். வடமாநில தொழிலாளர்கள் இறப்புக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வு குழுவில் நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் செல்வக்குமார், மேற்கு மாவட்ட தலைவர் சித்திக், மாநில பொதுக்குழு உறுப்பினர் நடராஜன், மாவட்டச் செயலாளர் வக்கீல் துரைசாமி, கபிலர்மலை வட்டாரத் தலைவர் பழனிச்சாமி, பரமத்தி வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் சந்திரன், வட்டாரப் பொதுச் செயலாளர் சண்முகம், துணைத் தலைவர் காளியப்பன், பரமத்திவேலூர் நகர தலைவர் பெரியசாமி, பாண்டமங்கலம் நகரத் தலைவர் மணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் அல்லி முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பணிகளை உள் தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர்.
    • ஈரோடு வெளிவட்ட சுற்றுச்சாலை பணிகளை கள ஆய்வு செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை, ஈரோடு கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோ ட்டம் மூலமாக செயல்படுத்தப்படும் பணிகளை உள் தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர்.

    கோவை வட்டம், தேசிய நெடுஞ்சா லைத்து றை அலகு கண்காணிப்பு பொறியாளர் சரவணன் தலைமையிலான இந்த உள் தணிக்கைக்குழு கடந்த வாரம் முதல் ஆய்வு பணி கள் மேற்கொண்டுள்ளது.

    இக்குழுவினர் ஈரோடு மாவட்டத்தில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகில் செயல்படுத்தி வந்த ஈரோடு வெளிவட்ட சுற்றுச்சாலை பணிகளை கள ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வின் போது ஈரோடு நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட ப்பொறியாளர் மாதே ஸ்வரன், உதவிக்கோட்டப் பொறியாளர் சரவணன், தரக்கட்டுப்பாடு உதவிக்கோட்டப் பொறியாளர் கண்ணன்,

    பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலை உதவிக்கோட்ட ப்பொறியாளர் ராமுவேல், ஈரோடு கட்டுமானம் பராமரிப்பு உதவிப்பொறியாளர் சுரேஷ் மற்றும் தரக்கட்டுப்பாடு உதவிப்பொறியாளர் ஞானசேகரன்,

    கோவை தேசிய நெடுஞ்சாலை உதவி ப்பொறியாளர் கவுதம் மற்றும் சத்தியபிரபா, தேசியநெடுஞ்சாலை உதவிப்பொறியாளர் ராஜ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • இளம்பெண் நித்யா கடந்த மார்ச் 11-ந் தேதி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டும், உடலில் 34 இடங்களில் கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்டார்.
    • சுற்று வட்டார பகுதிகளில் அடுத்தடுத்து தீவைப்பு மற்றும் பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் நடந்து வருகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே கரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளம்பெண் நித்யா கடந்த மார்ச் 11-ந் தேதி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டும், உடலில் 34 இடங்களில் கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்டார்.

    இதைத் தொடர்ந்து ஜேடர்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் அடுத்த டுத்து தீவைப்பு மற்றும் பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் நடந்து வருகிறது.

    இதற்கிடையே, கடந்த 13-ந் தேதி ஜேடர்பாளையம் பகுதியில் வெல்லம் தயாரிக்கும் ஆலையில் அறையில் தூங்கிக் கொண்டி ருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் வீசி தீ வைத்தனர். இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்ற வர்கள் கரூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணா மலையின் உத்தரவின் பேரில், மாவட்டத் தலைவர் ராஜேஷ்குமார் தலைமை யில் கபிலர்மலை வடக்கு ஒன்றிய தலைவர் பூபதி, மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் காந்தி, மாவட்ட பொதுச்செயலாளர் சுபாஷ், பிரசார பிரிவு மூர்த்தி, மாவட்டத் துணைத் தலைவர்கள் பழனியப்பன், வடிவேலு, திருச்செங்கோடு தெற்கு ஒன்றிய தலைவர் சசிதேவி, பரமத்தி ஒன்றிய தலைவர் அருண், மாவட்ட செயலாளர் சவுமியா, உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு சண்முகம், பிரசார பிரிவு காந்தி, இளைஞர் அணி பூபதி, ரமேஷ் ஆகியோர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவினர் இளம்பெண் நித்யா கொலை செய்யப்பட்ட பகுதிகளை முழுமையாக ஆய்வு செய்து, அப்பகுதி குடியிருப்பு வாசிகளிடம் விசாரணை நடத்தினர்.

    அதனைத் தொடர்ந்து வட மாநில தொழிலா ளர்களை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்ட கைக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும், கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெல்ல ஆலை கொட்டைக ளுக்கு தீ வைத்ததில் 3 டிராக்டர்கள் எரிந்து நாச மான பகுதிகளையும் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    இதுகுறித்து அந்த குழுவினர் கூறும்போது, அனைத்து சம்பவங்களையும் ஆய்வு செய்து ஒரு அறிக்கை யாக தயார் செய்து, அதனை பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையிடம் ஒப்படைக்க உள்ளோம்.

    அவர் இந்த சம்பவங்கள் குறித்து விரிவான அறிக்கையை வெளியிடு வார். மேலும் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட நித்யாவின் குடும்பத்திற்கு தமிழக அரசு உடனடியாக வாழ்வாதார நிதி வழங்க வேண்டும் என்றனர்.

    • சிங்கம்புணரி அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தர மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு நடத்தினர்.
    • பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் நபீஷா பானு மற்றும் அனைத்து பிரிவு மருத்துவர்கள், செவிலியர்கள் உடனிருந்தனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள மு.சூரக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தரவுறுதி தரநிலைகள் குழுவினர் டெல்லியில் இருந்து வருகை தந்து ஆய்வு செய்தனர்.இந்த சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெறுவதற்காக தினந்தோறும் வெளி நோயாளிகள் அதிகம் வருகின்றனர். இங்கு 24 மணி நேரமும் பிரசவம் நடக்கிறது. இந்த குழுவை சேர்ந்த டாக்டர்கள் சசிகலா, கிர்திமன் மஹர்தா ஆகியோர் கட்டிட வசதி, வெளி நோயாளிகள் வருகை, மருத்துவ பரிசோதனை கருவிகளின் செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டனர்.

    நோயாளிகளின் விபரங்கள், அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், பிரசவமான குழந்தைகளின் எண்ணிக்கை, நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட சேவைகள் குறித்து தனித்தனியாக ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு மாலை வரை நீடித்தது. பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் நபீஷா பானு மற்றும் அனைத்து பிரிவு மருத்துவர்கள், செவிலியர்கள் உடனிருந்தனர்.

    • சிவகங்கை மாவட்டத்தில் சட்டமன்ற பொதுக் கணக்கு குழுவினர் ஆய்வு செய்தனர்.
    • 64 பயனாளிகளுக்கு ரூ.25.47 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    சிவகங்கை

    தமிழக சட்டமன்ற பொதுக்கணக்கு குழுவின் தலைவர் செல்வப்பெருந்தகை, குழு உறுப்பினர்களான சட்டமன்ற உறுப்பினர்கள் சிந்தனைச்செல்வன் (காட்டுமன்னார்கோவில்), சுதர்சனம் (மாதவரம்), ஒய்.பிரகாஷ் (ஓசூர்), மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி) ஆகியோருடன், கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் துறைகள் ரீதியாக களஆய்வுகள் மேற்கொண்டனர்.

    பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆய்வின்போது சட்டமன்ற பேரவை செயலாளர் சீனிவாசன்,எம்.எல்.ஏ.க்கள் மாங்குடி (காரைக்குடி), தமிழரசி (மானாமதுரை), சட்டமன்ற பேரவை இணைச் செயலாளர் தேன்மொழி,துணைச் செயலாளர் ரேவதி ஆகியோர் உடனிருந்தனர்.

    காரைக்குடி வட்டத்தி ற்குட்பட்ட அழகப்பா பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் குறித்தும், காரைக்குடி ஆதிதிராவிடர் நலத்துறையின் அரசினர் மாணவிகள் விடுதியில் மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும், காரைக்குடி அரசு தலைமை மருத்துவ மனையில் இயற்கை மற்றும் யோகா பிரிவில் தேவையான மருத்துவ உபகரணங்கள், பணியமர்த்த வேண்டிய பிரிவின் பணியாளர்கள், மருந்துகளின் இருப்புகள் குறித்தும் சட்டமன்ற பொதுக் கணக்கு குழுவினர் ஆய்வு செய்தனர்.

    கீழடியில் 7-ம் கட்ட அகழாய்வு மையம் மற்றும் அருங்காட்சியகப் பணிகளின் நிலை குறித்தும், பையூர் ஊராட்சியில், பழமலைநகர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் குழந்தைகளுக்கு கற்பித்தல் முறை மற்றும் மேம்படுத்த வேண்டிய வசதிகள் ஆகியன குறித்தும் ஆய்வு செய்தனர்.

    பின்னர் சட்டமன்ற பொதுக் கணக்கு குழுவின் தலைவர் செல்வப்பெ ருந்தகை நிருபர்களிடம் கூறுகையில், சிறப்பான நிர்வாகத்தை வெளிப்ப டைத் தன்மையுடன் அரசு மேற்கொள்ளும் வகையில், இந்த குழு அடிப்படை யாக திகழ்கிறது. எங்களுக்கு அளிக்கப்படும் விவரங்கள் பரிசீலனை க்கு உட்படுத்தப்பட்டு, அரசிற்கு இந்த குழு வாயிலாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

    இந்த நிகழ்வின்போது, பல்வேறு துறைகள் சார்பில் 64 பயனாளிகளுக்கு ரூ.25.47 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற பொதுக் கணக்கு குழுவின் தலைவர் செல்வப்பெருந்தகை வழங்கினார்.

    ஆய்வுக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×