என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமரச தீர்வு"

    தாராபுரம் :

    மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள் சிறப்பு நீதிமன்ற முகாம் நடைபெற்றது.

    தாராபுரம் வட்ட சட்ட பணிக்குழு தலைவர் நீதிபதி எம்.தர்மபிரபு தலைமை தாங்கினார்.ஓய்வுபெற்ற நீதிபதி நாகராஜ், குற்றவியல் நீதிமன்றநீதிபதி எஸ்.பாபு, நீதிபதி மதிவதனி வணங்காமுடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் வழக்குகள் சமரச தீர்வு மூலம் 2 மோட்டார் வாகன விபத்து வழக்குகள், 30 உரிமையியல் வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள்-2, குடும்ப வன்முறை வழக்கு-1, குடும்ப வழக்கு-2, செக் மோசடி வழக்குகள்-3 என மொத்தம் 39 வழக்குகள் மக்கள் நீதிமன்றத்தின் மூலம் சமரச தீர்வு காணப்பட்டது.

    இதில் ரூ.41 லட்சத்திற்கான குடும்ப வழக்கை நீதிபதிகள் சுமூகமாக முடித்து வைத்தனர். மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 39 பயனாளிகள் பலன் பெற்றனர்.தீர்வு காணப்பட்ட வழக்குக்காக சான்றிதழ்களை வட்ட சட்ட பணிக்குழு நீதிபதி எம்.தர்மபிரபு பயனாளிகளுக்கு வழங்கினார். குடும்ப வழக்கை வக்கீல் எஸ்.டி.சேகர் வாதாடி வந்ததை நீதிபதிகள் முடித்து வைத்தனர். முகாமில் வக்கீல்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • இவற்றில் 1200 வழக்குகளுக்கு ரூ.3 கோடியே 9 லட்சத்து 3 ஆயிரத்து 626 தொகைக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
    • 245 வங்கி வாரா கடன் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

    தருமபுரி, 

    தருமரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

    தேசிய மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள் பங்கேற்று சமரச தீர்வு காணும் வழக்குகள் குறித்து விசாரணை நடத்தினார்கள்.

    வழக்குதாரர்கள், வக்கீல்கள் விசாரணையில் கலந்து கொண்டனர். 1327 வழக்குகளுக்கு சமரச தீர்வு இந்த மக்கள் நீதிமன்றத்தில், தருமபுரி மாவட்டத்தில் நீதிமன்றங்களில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள சமரசம் செய்து கொள்ளக்கூடிய 2693 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

    இவற்றில் 1200 வழக்குகளுக்கு ரூ.3 கோடியே 9 லட்சத்து 3 ஆயிரத்து 626 தொகைக்கு சமரச தீர்வு காணப்பட்டது. இதேபோல் 245 வங்கி வாரா கடன் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

    இவற்றில் 127 வழக்குகளுக்கு ரூ.3 கோடியே 95 லட்சத்து 22 ஆயிரத்து 122 தொகைக்கு சமரச தீர்வு காணப்பட்டது.

    விசாரணையின் முடிவில் மொத்தம் 1327 வழக்குகளுக்கு சமரசம் பேசி தீர்வு காணப்பட்டது. அதற்கான சமரச தொகை ரூ.7 கோடியே 4 லட்சத்து 25 ஆயிரத்து 748-க்கு சமரசம் பேசி முடிக்கப்பட்டது.

    • மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
    • 722 வழக்குகளுக்கு ரூ.8 கோடியே 29 லட்சம் தொகைக்கு சமரச தீர்வு காணப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட அளவில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்கு களுக்கு விரைவாகவும், சமரச முறையிலும் தீர்வு காண்பதற்காக தேசிய மக்கள் நீதிமன்றம் தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

    இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    இந்த மக்கள் நீதிமன்றம் தருமபுரி மாவட்ட நீதிமன்ற வளாகத்திலும் தாலுகா நீதிமன்றங்களிலும் நடைபெற்றது.

    இதில் நிலுவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள், நிலம் தொடர்பான வழக்குகள், குற்றவியல் வழக்குகள் என அனைத்து வழக்குகளும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

    இந்த மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 1,273 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இவற்றில் 722 வழக்குகளுக்கு ரூ.8 கோடியே 29 லட்சம் தொகைக்கு சமரச தீர்வு காணப்பட்டது.

    இதில் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி ராஜா, விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி சையத் பர்க்கத்துல்லா, கூடுதல் மாவட்ட நீதிபதி மோனிகா, குடும்ப நல நீதிபதி விஜயகுமாரி, தலைமை குற்றவியல் நீதிபதி சுரேஷ், மாவட்ட உரிமையியல் நீதிபதி சுந்தர்ராஜன், குற்றவியல் நடுவர் பிரபு, கூடுதல் மகளிர் நீதிபதி மது வர்ஷினி மற்றும் மூத்த வக்கீல்கள், நீதிமன்ற பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • 24 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
    • தீர்வுத் தொகையாக ரூ.76 லட்சத்து 28 ஆயிரத்து 645 அறிவிக்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, இரு தரப்பினரின் ஒப்புதலுடன் தேசிய மக்கள் நீதிமன்றம் லோக் அதாலத் மூலமாக தீா்வு காணப்பட்டு வருகிறது.

    அதன்படி ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ராமநாதபுரத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் லோக் அதாலத் மாவட்ட நீதிபதி (பொறுப்பு) கோபிநாத் தலைமையில் நடந்தது.

    முதன்மை குற்றவியல் நீதிபதி கவிதா, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பரணிதரன், மாவட்ட உரிமையியல் நீதிபதி நிலவேஷ்வரன், நீதித்துறை நடுவர் நீதிபதி வெர்ஜின் வெஸ்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் கதிரவன் வரவேற்று பேசினார். ராமநாதபுரம், ராமேசுவரம், திருவாடானை, பரமக்குடி, முதுகுளத்தூா், கமுதி பகுதிகளில் 8 அமா்வுகளில் 251 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு 24 வழக்குகளில் தீா்வு காணப்பட்டது.

    தீர்வுத் தொகையாக ரூ.76 லட்சத்து 28 ஆயிரத்து 645 அறிவிக்கப்பட்டது.

    • குடும்ப நல வழக்குகள், சமரசம் செய்து கொள்ளக் கூடிய குற்ற வழக்குகள் என மொத்தம் 1036 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
    • விசாரணையின் முடிவில் 873 வழக்குகளுக்கு ரூ.8 கோடியே 73 லட்சம் தொகைக்கு சமரச தீர்வு காணப்பட்டது.

    தருமபுரி, 

    மாவட்ட அளவில் நீதி மன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தர வின்படியும், சென்னை ஐகோர்ட்டு வழிகாட்டு தலின்படியும், சிறப்பு மக்கள் நீதிமன்றம் தருமபுரி மாவட்டத்தில் நேற்று நடைபெற்றது.

    தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி ராஜா, மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி மோனிகா, தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு சுரேஷ், மாவட்ட உரிமையியல் நீதிபதி சுந்தர்ராஜன், கூடுதல் மகளிர் நீதிபதி மதுவர்ஷினி மற்றும் நீதிபதிகள் சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்தினார்கள்.

    இதேபோல் அரூர், பாலக்கோடு, காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம் ஆகிய பகுதிகளில் உள்ள தாலுகா நீதிமன்றங்களிலும் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

    இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள நில ஆர்ஜிதம் தொடர்பான இழப்பீடு வழக்குகள், சமரசம் செய்து கொள்ளக்கூடிய மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், சமரசம் செய்து கொள்ளக் கூடிய குற்ற வழக்குகள் என மொத்தம் 1036 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

    விசாரணையின் முடிவில் 873 வழக்குகளுக்கு ரூ.8 கோடியே 73 லட்சம் தொகைக்கு சமரச தீர்வு காணப்பட்டது. இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் வழக்குதாரர்கள், வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

    • மக்கள் நீதிமன்றத்தில் 11 வழக்குகளில் சமரச தீர்வு காணப்பட்டது.
    • ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு பணியாளர்கள் செய்தி ருந்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் உத்தரவுப் படியும் மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் வழிகாட்டு தலின் படியும், சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்க ளிலும் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகளும், சமரச குற்றவியல் வழக்குகளும், மோட்டார் வாகன விபத்து வழக்குகளும், வருவாய் துறை வழக்குகளும், விசா ரிக்கப்பட்டது.

    தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி குருமூர்த்தி, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பக்த வச்சலு, ஊழல் மற்றும் தடுப்பு சிறப்பு நீதிபதி செந்தில் முரளி, மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி பரமேஸ்வரி ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர்.

    இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றங்களில் 15 வங்கி கடன் வழக்குகளும், 91 மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகளும், 31 சிவில் சம்பந்தப்பட்ட வழக்குகளும், 27 காசோ லைகள் வழக்குகளும், 90 குடும்ப நல வழக்குகளும் இதர குற்ற வழக்குகள் 220 என மொத்தம் 474 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 11 வழக்குகள் சமரசமாக தீர்க்கப்பட்டது.

    இதன்மூலம் ரூ.62 லட்சத்து 35ஆயிரம் வரையில் வழக்காடிகளுக்கு கிடைத்தது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு பணியாளர்கள் செய்தி ருந்தனர்.

    ×