search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூபேஷ் பாகேல்"

    • ஆடம்பரமாக ரூ.250 கோடி செலவில் சவுரப் திருமணம் நடைபெற்றது
    • மாநிலத்தை ஏடிஎம்மாக பயன்படுத்தி கொண்டது காங்கிரஸ் என்கிறார் ஷெஹ்சத்

    இணையதளத்தில் மகாதேவ் சட்டா செயலி (Mahadev Satta App)  எனும் பெயரில் சூதாட்ட செயலி ஒன்று பிரபலமாக உள்ளது.

    பெரும்பாலானோர்கள் தங்கள் பணத்தை செலுத்தி சூதாடி வந்ததால், தினந்தோறும் இச்செயலியை நிறுவியவர்கள் ரூ.200 கோடிக்கும் அதிகமாக சம்பாதித்தாக கூறப்பட்டது.

    சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாய் பகுதியை சேர்ந்த சவுரப் சந்த்ரகர் மற்றும் ரவி உப்பல் ஆகியோருக்கு சொந்தமானது மகாதேவ் இணையவழி சூதாட்ட செயலி.

    ரூ.250 கோடி செலவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் சவுரப் ஆடம்பரமாக செய்து கொண்ட திருமணத்திற்கு பிறகு அவர் இந்திய அமலாக்க துறையின் விசாரணை வளையத்தில் வந்தார். அத்துறை நடத்திய தொடர் விசாரணையில் சட்டவிரோத பண பரிமாற்ற மோசடியில் இந்நிறுவனம் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இந்நிலையில், கடந்த 2023 நவம்பர் மாதம் ராய்பூரில், சத்தீஸ்கர் சட்டசபைக்கான தேர்தல்கள் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு கோடிக்கணக்கில் பணத்துடன் சென்ற அசிம் தாஸ் (Asim Das) என்பவரை அமலாக்க துறை விசாரித்த போது சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலுக்காக அதனை கொண்டு செல்வதாக ஒப்பு கொண்டார். இதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

    இதன் தொடர்ச்சியாக இந்த வழக்கு விசாரணையில் இரண்டாவது குற்றப்பத்திரிகையில் பூபேஷின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

    இது குறித்து பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் ஷெஹ்சத் பூனாவாலா கருத்து தெரிவித்தார்.

    அதில் ஷெஹ்சத் கூறியதாவது:

    சி எம் என்றால் காங்கிரஸ் கட்சிக்கு சீஃப் மினிஸ்டர் (முதல் அமைச்சர்) அல்ல; கரப்ஷன் மினிஸ்டர் (கரப்ஷன் மினிஸ்டர்). பிரதமர் மோடி "ரூபே" கார்டு கொடுத்தார்; காங்கிரஸ் "பூபே" கார்டு வழங்கியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தை வெறும் ஏடிஎம்மாக காங்கிரஸ் கருதியது. இரு கைகளாலும் கொள்ளை அடிக்க பயன்படுத்தி கொண்டது. கையும் களவுமாக ரூ.500 கோடி லஞ்சம் கொடுக்க சென்ற ஒருவர் பிடிக்கப்பட்ட நிலையில் அதை உறுதிபடுத்தும் ஆதாரங்களும் தற்போது வெளியாகி உள்ளன. ஊழலை ஆதரிக்கிறதா என இப்போது காங்கிரஸ் கட்சிதான் பதில் சொல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக 5-மாநில தேர்தல்கள் கருதப்படுகிறது
    • ரூ.500 கோடிக்கு மேல் பூபேஷ் பாகேல் பெற்றதாக அமலாக்க துறை கண்டுபிடித்தது

    இம்மாத இறுதிக்குள் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளது. இத்தேர்தல்களுக்கான முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியிடப்படும்.

    அடுத்த வருடம் நடைபெறவுள்ள இந்திய பாராளுமன்றத்திற்கான தேர்தலுக்கு இந்த 5 மாநில தேர்தல்களை அரசியல் கட்சிகள் முன்னோட்டமாக கருதுவதால் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் ஒரு புறமும், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் மறுபுறமும் இந்த 5 மாநிலங்களிலும் வெல்வதற்கு தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளனர்.

    இந்நிலையில், சில தினங்களுக்கு முன், சத்தீஸ்கரில், "மகாதேவ் இணையதள சூதாட்ட செயலி" எனும் மென்பொருள் செயலியை உருவாக்கி, அதன் மூலம் மக்களை பெருமளவு பணம் இழக்க செய்து லாபம் சம்பாதித்த அந்நிறுவனர்கள், சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேலுக்கு ரூ.500 கோடிக்கும் மேல் பணம் கொடுத்திருப்பதாகவும், இதை அமலாக்க துறை கண்டுபிடித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன.

    சத்தீஸ்கரில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பூபேஷ் பாகேலின் ஆட்சி நடைபெறுகிறது.

    இக்குற்றச்சாட்டை காங்கிரஸ் மறுத்து, அரசியல் ஆதாயத்திற்காக பா.ஜ.க. இவ்வாறு பிரச்சாரம் செய்வதாக கூறியது.

    இது குறித்து கருத்து தெரிவித்த சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், "எங்கெல்லாம் தேர்தல் நடக்கிறதோ அங்கெல்லாம் உடனடியாக ஊழல் குற்றச்சாட்டை வைப்பது பா.ஜ.க.விற்கு வழக்கமாகி வருகிறது. எதிர்கட்சிகளை அமலாக்க துறையும், சி.பி.ஐ.யும் துன்புறுத்துவதும் வழக்கம். மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க.வை பதவியில் இருந்து அகற்ற மக்கள் தயாராகி விட்டனர்" என தெரிவித்தார்.

    • இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றிக்கு சத்தீஸ்கரின் பங்களிப்பும் உள்ளது.
    • காங்கிரஸ் தற்போது 3 மாநிலங்களில் ஆட்சி அமைத்துள்ளது.

    ராய்பூர்:

    இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்ததையடுத்து முதலமைச்சராக சுக்விந்தர் சிங் நேற்று பதவியேற்றார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் ராய்பூர் திரும்பிய சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் முதலமைச்சர் பூபேஷ் பாகேலுக்கு விமான நிலையத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 


    பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், இமாச்சல் பிரதேச தேர்தலில் காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகளில் சத்தீஸ்கர் மாநில திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனால் இமாச்சலப் பிரதேசத்தின் வெற்றிக்கு சத்தீஸ்கரின் பங்களிப்பும் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். காங்கிரஸ் கட்சி தற்போது 3 மாநிலங்களில் ஆட்சி அமைத்துள்ளதாகவும், அடுத்ததாக கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை அமைப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×