என் மலர்
நீங்கள் தேடியது "பயண குழு"
- மாநாட்டிற்காக நாகை மாவட்டம் கீழ் வெண்மணியில் இருந்து வெண்மணி தியாகிகள் ஜோதி பயண குழு தமிழகம் முழுவதும் பயணம் செல்கிறது.
- பல்லடம் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி மற்றும் பரமசிவம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பல்லடம்:
கேரளாவில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 35 -வது மாநாடு நாளை நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்காக நாகை மாவட்டம் கீழ் வெண்மணியில் இருந்து வெண்மணி தியாகிகள் ஜோதி பயண குழு தமிழகம் முழுவதும் பயணம் செல்கிறது. இந்த நிலையில் பல்லடம் வந்த தியாகிகள் ஜோதி பயண குழுவிற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில்,பல்லடம் கடைவீதியில் வரவேற்பளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய விவசாயிகள் சங்க நிதிச் செயலாளர் கிருஷ்ண பிரசாத், மாநில பொருளாளர் பெருமாள், மாநில துணைத்தலைவர் டில்லி பாபு, திருப்பூர் மாவட்ட செயலாளர் குமார், பல்லடம் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி மற்றும் பரமசிவம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் பிரசார பயண குழுவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
- படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.
மானாமதுரை
படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் பிரசார பயண குழு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டது. மானாமதுரை வந்த இந்த குழுவினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. நகராட்சி அலுவலகம் முன்பு நடந்த வரவேற்பு கூட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் தங்கமணி தலைமை தாங்கினார். ஒன்றியச் செயலாளர் திருச்செல்வம், தலைவர் அய்யனார் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கண்ணகி, ஒன்றியச் செயலாளர் சங்கையா ஆகியோர் பேசினர். முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் நாகராஜன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.