search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலூட்டும் அறை"

    • பச்சிளம் குழந்தைகளை கொண்டு வரும் தாய்மார்கள் பயன் பெறும் வகையில் பாலூட்டும் அறை கடந்த 2015 - ல் கட்டப்பட்டது.
    • அறை கட்டப்பட்டதற்கான நோக்கமும் மக்களின் வரிப்பணமும் வீணாகி வருகிறது.

    உடுமலை:

    உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.அதன் மூலமாக பல்வேறு பணிகளுக்காக நாள்தோறும் பொதுமக்கள் உடுமலைக்கு வந்து செல்கின்றனர்.இந்த சூழலில் பச்சிளம் குழந்தைகளுக்கு பெண்கள் பாலூட்டுவதற்கு ஏதுவாக பஸ் நிலைய வளாகத்தில் தனியாக அறை கட்டப்பட்டது.சிறிது காலம் செயல்பட்டு வந்த அந்த அறை பயன்பாட்டில் இல்லாமல் பூட்டி வைக்கப்பட்டு உள்ளது.இதனால் பெண்கள் குழந்தைகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.அதுமட்டுமின்றி பஸ்நிலைய வளாகத்தில் பெண்களுக்கு தனியாக சுகாதார வளாக வசதியும் ஏற்படுத்தி தரவில்லை.இதனால் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்,

    கிராமத்தில் இருந்து உடுமலை நகருக்கு வருகை வருகின்ற பெண்கள் பல்வேறு பணிகளை முடித்து கொண்டு திரும்பவும் வீட்டுக்கு செல்வதற்கு மத்திய பஸ் நிலையத்தில் காத்திருக்க வேண்டி உள்ளது. இதில் கர்ப்பிணி மற்றும் கை குழந்தையுடன் உள்ள பெண்களும் அடங்குவர். பிரசவத்துக்கு பின்பு சிகிச்சைக்காக பச்சிளம் குழந்தைகளை கொண்டு வரும் தாய்மார்கள் பயன் பெறும் வகையில் பாலூட்டும் அறை கடந்த 2015 - ல் கட்டப்பட்டது. சிறிது காலம் செயல்பாட்டில் இருந்த அந்த அறை போதிய பராமரிப்பு இல்லாமல் நகராட்சி நிர்வாகத்தால் நீண்ட காலமாக பூட்டியே வைக்கப்பட்டு உள்ளது. இதனால் கைக்குழந்தை மற்றும் பச்சிளம் குழந்தைகளுடன் உடுமலைக்கு வருகை தருகின்ற கிராமத்து பெண்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

    இது குறித்து நிர்வாகத்தில் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக அந்த அறை கட்டப்பட்டதற்கான நோக்கமும் மக்களின் வரிப்பணமும் வீணாகி வருகிறது. மேலும் ஆண்களுக்காக கட்டப்பட்ட சுகாதார வளாகமும் பராமரிப்பில்லாமல் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது.இதனால் பஸ்சுக்காக காத்து கொண்டுள்ள கர்ப்பிணி பெண்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே நகராட்சி நிர்வாகத்தினர் உடுமலை பஸ் நிலையத்தில் செயல்படாமல் உள்ள பாலூட்டும் அறையை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

    அதுமட்டுமின்றி பெண்களுக்கு தனியாக சுகாதார வளாகம் அமைத்து கொடுப்பதுடன் பராமரிப்பில்லாமல் உள்ள ஆண்களுக்கான சுகாதார வளாகத்தை சீரமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    • தினமும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.
    • பாலூட்டும் அறையின் பக்கவாட்டு பகுதியில் சேதமடைந்து பெரிய அளவில் ஓட்டை ஏற்பட்டுள்ளது.

    பல்லடம்:

    பல்லடம் பஸ் நிலையத்தில் கோவை, திருச்சி, உடுமலை, பொள்ளாச்சி, மதுரை,போன்ற ஊர்களுக்கு செல்ல தினமும் சுமார் 500க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்லும். தினமும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வேலை, கல்வி, உள்ளிட்ட பணிகளுக்காக பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் பல்லடம் பஸ் நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தாய்மார்கள் பாலூட்டும் அறை அமைக்கப்பட்டது. இதனால் பாலூட்டும் தாய்மார்கள் பயனடைந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தாய்மார்கள் பாலூட்டும் அறையின் பக்கவாட்டு பகுதியில் சேதமடைந்து பெரிய அளவில் ஓட்டை ஏற்பட்டுள்ளது.

    இதனால் அந்த அறையில் சென்று பாலூட்டுவதற்கு தாய்மார்கள் தயங்கி வருகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தாய்மார்கள் பாலூட்டும் அறையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கட்டணமில்லா கழிவறை கடந்த இரண்டு மாதகாலமாக பராமரிக்கப்பட்டு புது பொலிவுடன் காணப்பட்டது.
    • கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

    தாராபுரம்:

    தாராபுரம் புதிய பஸ் நிலையத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் பயன்படுத்த கூடிய கட்டணமில்லா கழிப்பறை சிதலமடைந்து மோசமான நிலையில் இருந்து வந்தது. பஸ் பயணிகள் பயன்படுத்த அச்சம் தெரிவித்து வந்தனர். இதனை பராமரிக்க கோரி நகராட்சி நிர்வாகத்துக்கு மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் கட்டணமில்லா கழிவறை கடந்த இரண்டு மாதகாலமாக பராமரிக்கப்பட்டு புது பொலிவுடன் காணப்பட்டது. இந்த வளாகத்தை நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் திறந்து வைத்தார்.

    இதனைத்தொடர்ந்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி துறையின் சார்பாக உலகத் தாய்பால் தினத்தை முன்னிட்டு தாராபுரம் பஸ் நிலையத்தில் தாய்மார்களுக்கு பாலூட்டும் அறையை திறந்து வைத்து கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் நகராட்சி துணைத் தலைவர் ரவிசந்திரன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கிரிஜா, நகர செயலாளர் முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.    

    • கர்ப்பிணி பெண்கள் ஓய்வெடுக்கும் அறையும் ஏற்பாடு
    • உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று.

    கன்னியாகுமரி:

    உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். இதில் பெண் பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள்.

    இந்த கோவில் நடை தினமும் அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 12.30 மணிக்கு அடைக்கப்படுகிறது. அதே போல மாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படுகிறது. இந்த கோவிலுக்கு வரும் பெண் பக்தர்களில் சிலர் கர்ப்பிணி தாய்மார்களாகவும், சிலர் கைக்குழந்தையுடனும் வந்து சாமி கும்பிட்டு விட்டு செல்கிறார்கள்.

    இந்த கோவிலுக்கு வரும் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பால் ஊட்டும் இட வசதி இல்லை. திறந்த வெளியில் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் அவல நிலை இருந்து வந்தது. எனவே இந்த கோவிலுக்கு வரும் தாய்மார்கள் குழந்தை களுக்கு பாலூட்டுவதற்கு வசதியாக பாலூட்டும் வரை அமைக்க வேண்டும் என்று பெண் பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதேபோல கர்ப்பிணிகள் தங்கி இளைப்பாறு வதற்கு வசதியாக ஓய்வறை வசதி செய்துதர வேண்டும் என்றும் பெண் பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் பேரில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகம் சார்பில் கோவிலுக்கு வரும் தாய் மார்கள் தங்களது குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்கு வசதியாக கோவிலின் மேற்கு பக்கம் உள்ள வெளிப்பிரகாரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும் வாசலுக்கு அருகில் தாய்மார்கள் பாலூட்டும் அறையும், கர்ப்பிணிகள் ஓய்வெடுக்கும் அறையும் அமைக்கப்பட்டுள்ளன. இதனை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சாமிகும்பிட வரும் பெண் பக்தர்கள் வெகுவாக வரவேற்றுள்ளனர்.

    • பஸ்நிலைய வளாகத்தில் பெண்களுக்கு தனியாக சுகாதார வளாக வசதியும் ஏற்படுத்தித் தரவில்லை.
    • பிரசவத்துக்கு பின்பு சிகிச்சைக்காக பச்சிளம் குழந்தைகளை கொண்டு வரும் தாய்மார்கள் பயன் பெறும் வகையில் பாலூட்டும் அறை கடந்த 2015 - ல் கட்டப்பட்டது.

    உடுமலை:

    உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.அதன் மூலமாக பல்வேறு பணிகளுக்காக நாள்தோறும் பொதுமக்கள் உடுமலைக்கு வந்து செல்கின்றனர்.இந்த சூழலில் பச்சிளம் குழந்தைகளுக்கு பெண்கள் பாலூட்டுவதற்கு ஏதுவாக பஸ் நிலைய வளாகத்தில் தனியாக அறை கட்டப்பட்டது.

    சிறிது காலம் செயல்பட்டு வந்த அந்த அறை பயன்பாட்டில் இல்லாமல் பூட்டி வைக்கப்பட்டு உள்ளது.இதனால் பெண்கள் குழந்தைகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.அதுமட்டுமின்றி பஸ்நிலைய வளாகத்தில் பெண்களுக்கு தனியாக சுகாதார வளாக வசதியும் ஏற்படுத்தித் தரவில்லை.இதனால் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்,

    கிராமத்தில் இருந்து உடுமலை நகருக்கு வருகை தருகின்ற பெண்கள் பல்வேறு பணிகளை முடித்துக் கொண்டு திரும்பவும் வீட்டுக்கு செல்வதற்கு மத்திய பஸ் நிலையத்தில் காத்திருக்க வேண்டி உள்ளது. இதில் கர்ப்பிணி மற்றும் கை குழந்தையுடன் உள்ள பெண்களும் அடங்குவர். பிரசவத்துக்கு பின்பு சிகிச்சைக்காக பச்சிளம் குழந்தைகளை கொண்டு வரும் தாய்மார்கள் பயன் பெறும் வகையில் பாலூட்டும் அறை கடந்த 2015 - ல் கட்டப்பட்டது.

    சிறிது காலம் செயல்பாட்டில் இருந்த அந்த அறை போதிய பராமரிப்பு இல்லாமல் நகராட்சி நிர்வாகத்தால் நீண்ட காலமாக பூட்டியே வைக்கப்பட்டு உள்ளது.இதனால் கைக்குழந்தை மற்றும் பச்சிளம் குழந்தைகளுடன் உடுமலைக்கு வருகை தருகின்ற கிராமத்து பெண்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.இதுகுறித்து நிர்வாகத்தில் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக அந்த அறை கட்டப்பட்டதற்கான நோக்கமும் மக்களின் வரிப்பணமும் வீணாகி வருகிறது.

    மேலும் ஆண்களுக்காக கட்டப்பட்ட சுகாதார வளாகமும் பராமரிப்பில்லாமல் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது.இதனால் பஸ்சுக்காக காத்து கொண்டுள்ள கர்ப்பிணி பெண்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே நகராட்சி நிர்வாகத்தினர் உடுமலை பஸ் நிலையத்தில் செயல்படாமல் உள்ள பாலூட்டும் அறையை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். அதுமட்டுமின்றி பெண்களுக்கு தனியாக சுகாதார வளாகம் அமைத்து கொடுப்பதுடன் பராமரிப்பில்லாமல் உள்ள ஆண்களுக்கான சுகாதார வளாகத்தை சீரமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    • செட்டிகுளம் பஸ் நிலையத்தில் பாலூட்டும் அறை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • தாய்மார்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள், தாய்மார்கள், முதியவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என பலர் செட்டிகுளம் பஸ் நிலையத்திற்கு வந்து அங்கிருந்து பஸ் ஏறி வெளியூர் சென்று வருகின்றனர். இந்த நிலையில் செட்டிகுளம் பஸ் நிலையத்தில் பாலூட்டும் தாய்மார்கள் அறை அமைக்கப்படாமல் உள்ளதால் தாய்மார்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×