search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லஞ்ச ஒழிப்பு துறை"

    • மழைநீர் வடிகால் வாரியம் தொடர்பக ரூ26.61 கோடி டெண்டர் முறைகேடு செய்தாக புகார் எழுந்துள்ளது.
    • அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாநகராட்சி பொறியாளர்கள் உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    மழைநீர் வடிகால் வாரியம் தொடர்பக ரூ26.61 கோடி டெண்டர் முறைகேடு செய்தாக புகார் எழுந்துள்ளது. அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 2018ம் ஆண்டில், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது, சென்னை மாநகராட்சியில் டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்துள்ளது.

    இதுதொடர்பாக, முதற்கட்ட விசாரணை நடைபெற்ற நிலையில், எஸ்.பி.வேலுமணி மற்றும் அவருக்கு உதவியதாக மாநகராட்சி அதிகாரிகள் 10 பேர் மீதும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • சோதனை நடைபெற்ற நேரத்தில் பத்திரப்பதிவுக்காக சுமார் 40-க்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர்.
    • சம்பந்தப்பட்ட துணை சார்பதிவாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரங்களை பதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிக பணம் வசூலிப்பதாக புகார்கள் சென்றன.

    இதையடுத்து கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு வடிவேல் தலைமையில் இன்ஸ்பெக்டர் பிரபு உள்ளிட்ட 7 போலீசார் நேற்று மாலை சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றனர்.

    பின்னர் அவர்கள் அலுவலகத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சார்பதிவாளர் ரகோத்தமன் விடுமுறையில் இருந்ததால், பொறுப்பில் இருந்த துணை சார்பதிவாளர் ஷகீலா பேகத்திடம் விசாரணை நடத்தினர்.

    மேலும் மற்ற அலுவலர்கள், ஊழியர்களிடமும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மாலை 5.30 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை இரவு 9 மணியை கடந்தும் நீடித்தது.

    சோதனை நடைபெற்ற நேரத்தில் பத்திரப்பதிவுக்காக சுமார் 40-க்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர்.

    அவர்களிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.5 லட்சத்து 4 ஆயிரம் சிக்கியது. மேலும் சம்பந்தப்பட்ட துணை சார்பதிவாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

    • லஞ்சம் கொடுக்க விரும்பாத யுவராஜ் திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் அளித்தார்.
    • இன்ஸ்பெக்டர் மாலதியை ரூ.5 ஆயிரம் லஞ்ச பணத்துடன் கையும், களவுமாக பிடித்தனர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள வாளாடியைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகன் யுவராஜா. இவரது குடும்பத்தாருக்கும், அவரது வீட்டுக்கு அருகில் வசித்து வரும் ஜெகதீசன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இது தொடர்பாக அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்தது.

    இந்த பிரச்சனை தொடர்பாக லால்குடி மகளிர் போலீஸ் நிலையத்தில் யுவராஜ் புகார் மனு அளித்திருந்தார். அதன் பேரில் ஜெகதீசன் மீது கடந்த 2.11.2022 அன்று போக்சோ சட்டத்தின் கீழ் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் மாலதி வழக்கு பதிவு செய்திருந்தார்.

    இந்த வழக்கு விசாரணையில் இருந்து வரும் நிலையில் அதில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றால் ரூ.5 ஆயிரம் லஞ்சமாக தரவேண்டும் என்று இன்ஸ்பெக்டர் மாலதி யுவராஜாவிடம் கேட்டுள்ளார். மேலும் அந்த லஞ்ச பணத்தை 13.12.2022 காலை போலீஸ் நிலையத்திற்கு வந்து தன்னிடம் கொடுக்க வேண்டுமாறும் கூறி உள்ளார்.

    ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத யுவராஜ் திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையிலான போலீசாரின் ஆலோசனைப்படி ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகள் அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று காலை இன்ஸ்பெக்டர் மாலதியிடம் போலீஸ் நிலையத்தில் வைத்து யுவராஜ் ரூ.5 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது அங்கு மாறுவேடத்தில் இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்ஸ்பெக்டர் மாலதியை ரூ.5 ஆயிரம் லஞ்ச பணத்துடன் கையும், களவுமாக பிடித்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

    ×