என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அரையாண்டு தேர்வு"
- 3 மாவட்டங்களிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் இன்று திறக்கப்பட்டன.
- தூத்துக்குடியில் 1,221 தொடக்கப்பள்ளிகள், 304 நடுநிலைப்பள்ளிகள், 111 உயர்நிலைப்பள்ளிகள், 218 மேல்நிலைப்பள்ளிகள் ஆக மொத்தம் 1, 854 பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த மாதம் 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த கனமழையால் ஏராளமான குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
இதன் காரணமாக தென்மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது. தொடர்ந்து அரையாண்டு தேர்வுகள் மற்ற மாவட்டங்களில் முடிவடைந்ததால் தமிழகம் முழுவதும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டது.
இதனால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் எழுத வேண்டிய மீதமுள்ள தேர்வுகள் நாளை மறுநாள்(வியாழக்கிழமை) முதல் தொடங்கும் என்றும், பள்ளிகள் இன்று முதல் மீண்டும் தொடங்கும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.
இதையடுத்து 3 மாவட்டங்களிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் இன்று திறக்கப்பட்டன. தொடர்ந்து பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு நாளை மறுநாள் முதல் 11-ந்தேதி வரையிலும், 6 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கு நாளை மறுநாள் முதல் 10-ந்தேதி வரையிலும் அரையாண்டு தேர்வுகள் நடைபெறுகிறது.
10-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை மறுநாள் அறிவியல், 6-ந்தேதி கணிதம் தேர்வு, 9-ந்தேதி சமூக அறிவியல், 10-ந்தேதி உடற்கல்வி தேர்வு நடக்கிறது.
இதனையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளிக்கூடங்களை சுத்தப்படுத்தும் பணி கடந்த 3 நாட்களாக தீவிரமாக நடைபெற்றது. மேலும் வகுப்பறைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, பள்ளி வளாகங்களில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டன. வெள்ள நீர் புகுந்த பள்ளிகளில் தேங்கி கிடந்த மழைநீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டிருந்தன. சேறும் சகதியுமாக இருந்த இடங்களில் மண் கொட்டப்பட்டிருந்தன.
தொடர்ந்து இன்று காலை மாணவ-மாணவிகள் உற்சாகமாக பள்ளிகளுக்கு புறப்பட்டு வந்தனர். அவர்களை ஆசிரியர்கள் பூங்கொத்து கொடுத்தும், பூக்கள் கொடுத்தும் வரவேற்றனர். நெல்லை, தூத்துக்குடியில் பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் புத்தகங்கள் உள்ளிட்டவை வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்டன. இதனால் புத்தகங்களை இழந்த மாணவ-மாணவிகளுக்கு புதிய புத்தகங்கள் வழங்கப்பட்டன.
நெல்லை மாநகரில் 46 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் சீரமைப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் கலெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 1,221 தொடக்கப்பள்ளிகள், 304 நடுநிலைப்பள்ளிகள், 111 உயர்நிலைப்பள்ளிகள், 218 மேல்நிலைப்பள்ளிகள் ஆக மொத்தம் 1, 854 பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. மாவட்டத்தில் சில பள்ளிகளில் மழை வெள்ள நீர் வெளியேற்றப்படாமல் இருப்பதாலும், சில பள்ளி கட்டிடங்கள் மழையால் சேதம் அடைந்திருப்பதாலும் அதனை பயன்படுத்த வேண்டாம் என பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கலெக்டர் லட்சுமிபதி உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து அந்த பள்ளிகள் இன்று செயல்படவில்லை. அவர்களுக்கு மாற்று பள்ளி கட்டிடங்களில் படிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தென்காசி மாவட்டத்திலும் விடுமுறைக்கு பின்னர் பள்ளி மாணவ-மாணவிகள் இன்று உற்சாகமாக பள்ளிகளுக்கு புறப்பட்டு சென்றனர். நாளை மறுநாள் தேர்வுக்கு தேவையான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மேற்பார்வையில் பள்ளி நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன.
- தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழையால் மக்கள் வீடு, உடமைகளை இழந்து பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர்.
- மழை வெள்ள பாதிப்பு, அரையாண்டு விடுமுறைக்கு பிறகு தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது.
தூத்துக்குடி:
தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 18-ந்தேதி பெய்த தொடர் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழையால் மக்கள் வீடு, உடமைகளை இழந்து பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
கனமழை பாதிப்பை கருத்தில் கொண்டு அந்த 3 மாவட்டங்களில் மட்டும் விடுபட்ட அரையாண்டு தேர்வுகள் பின்னர் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.
மழை வெள்ள பாதிப்பு, அரையாண்டு விடுமுறைக்கு பிறகு தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை முதல் அரையாண்டு தேர்வுகள் தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- கனமழை, வெள்ளத்தால் நடைபெற்றுக் கொண்டிருந்த தேர்வு ஒத்திவைப்பு.
- ஜனவரி முதல் இரண்டு வாரங்களில் தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு.
வங்கக்கடலில் நிலவிய கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 17 மற்றும் 18-ந்தேதி கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் திருநெல்வேலி மாவட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. குறிப்பாக தாமிரபரணி ஆறு ஓடும் பகுதிகள் மிகப்பெரிய அளவில் பாதிப்படைந்தன.
மழை நின்ற பிறகும் வெள்ளம் வடிய காலதாமதம் ஆனது. இதனால் பள்ளிகளுக்கு ஜனவரி மாதம் 1-ந்தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு ஜனவரி 4-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும் எனவும்,
6 முதல் 10-ம் வகுப்புகளுக்க ஜனவரி 4-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும் எனவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 4-ந்தேதி அறிவியல், 6-ந்தேதி கணக்கு தேர்வு, 9-ந்தேதி சமூக அறிவியல் தேர்வு, 10-ந்தேதி உடற்கல்வி தேர்வு நடத்தப்பட இருக்கிறது.
6 முதல் 12-ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்தல் டிசம்பர் 7-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது. கனமழை, வெள்ளம் காரணமாக தேர்வு நடந்து கொண்டிருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன.
- மீண்டும் ஜனவரி 2-ந்தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று கல்வித்துறை தெரிவித்து உள்ளது.
சென்னை:
தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு கடந்த 12-ந்தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பாதிப்பால் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன.
இந்த நிலையில் தென் மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய மழை வெள்ளத்தால் மாணவர்களுக்கு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் வெள்ளத்தில் வீடுகள் மூழ்கியதால் மாணவர்களின் பாடப் புத்தகங்கள் சேதம் அடைந்தன. தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன.
இதற்கிடையே மற்ற மாவட்டங்களில் நடைபெற்று வந்த தேர்வுகள் இன்று முடிகிறது. நாளை (23-ந்தேதி) முதல் ஜனவரி 1-ந்தேதி வரை மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை விடப்படுகிறது. மீண்டும் ஜனவரி 2-ந்தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று கல்வித்துறை தெரிவித்து உள்ளது.
அரசு, உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி மற்றும் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் இன்று மாலையுடன் தேர்வு முடிந்து விடுகிறது. அரையாண்டு தேர்வு விடுமுறையில் தான் வழக்கமாக கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையும் வருகிறது. அரையாண்டு விடுமுறை 9 நாட்கள் விடப்பட்டுள்ளது.
- கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு நடத்துவது தொடர்பாக முக்கிய முடிவு.
- மாணவர்களின் தேவையைக் கண்டறிந்து 12-ம் தேதி பாடப் புத்தகம் வழங்கவும் உத்தரவு.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிச்சாங் புயலால் கடும் வெள்ள சேதம் ஏற்பட்டது. இந்த மழை வெள்ளத்தால் மக்கள் பெரிய அளவில் சிரமப்பட்டனர். லட்சக்கணக்கானோர் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பொருட்கள் அனைத்தையும் இழந்து தவிக்கின்றனர்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு நடத்துவது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படுவதாகளும், ஆய்வுக்கூட்டம் நடத்திய பிறகு முடிவு அறிவிக்கப்படும் எனவும் கூறினார்.
இதைதொடர்ந்து, தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்," நாளை அரையாண்டு தேர்வுகள் தொடங்க இருந்த நிலையில் புத்தகங்கள் இல்லாமல் மாணவர்கள் தேர்வுக்கு படித்து தயாராக முடியாது என்பதை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் நாளை தொடங்க இருந்த தேர்வுகளை வரும் 13-ம் தேதி தொடங்க வேண்டும்" என கல்வித்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
புதிய கால அட்டவணையை வெளியிடவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மாணவர்களின் தேவையைக் கண்டறிந்து 12-ம் தேதி பாடப் புத்தகம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரையாண்டு தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் 6 முதல் 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு வரும் 13ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
- அரையாண்டு தேர்வு நடத்துவது குறித்து இன்று ஆலோசனை நடத்தப்பட்டது.
- இதில் தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக முதலமைச்சர் அறிவித்தார்.
சென்னை:
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிச்சாங் புயலால் கடும் வெள்ள சேதம் ஏற்பட்டது. இந்த மழை வெள்ளத்தால் மக்கள் பெரிய அளவில் சிரமப்பட்டனர். லட்சக்கணக்கானோர் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பொருட்கள் அனைத்தையும் இழந்து தவிக்கின்றனர்.
இதற்கிடையே, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு நடத்துவது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது. அதிகாரிகளுடன் ஆன்லைனில் ஆய்வுக்கூட்டம் நடத்திய பிறகு முடிவு அறிவிக்கப்படும் என்றார்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நாளை அரையாண்டு தேர்வுகள் தொடங்க இருந்த நிலையில் புத்தகங்கள் இல்லாமல் மாணவர்கள் தேர்வுக்கு படித்து தயாராக முடியாது என்பதை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் நாளை தொடங்க இருந்த தேர்வுகளை வரும் 13-ம் தேதி தொடங்க வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
புதிய கால அட்டவணையை வெளியிடவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மாணவர்களின் தேவையைக் கண்டறிந்து 12-ம் தேதி பாடப் புத்தகம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி வளாகங்களை சீரமைப்புக்காக ரூ. 1 கோடியே 90 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிச்சாங் புயலால் கடும் வெள்ள சேதம் ஏற்பட்டது.
- சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு நடத்துவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.
சென்னை:
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிச்சாங் புயலால் கடும் வெள்ள சேதம் ஏற்பட்டது. இந்த மழை வெள்ளத்தால் மக்கள் பெரிய அளவில் சிரமப்பட்டனர். லட்சக்கணக்கானோர் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பொருட்கள் அனைத்தையும் இழந்து தவிக்கின்றனர்.
இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ப்ட 4 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு நடத்துவது தொடர்பாக இன்று முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.
அதிகாரிகளுடன் இன்று ஆன்லைனில் ஆய்வுக் கூட்டம் நடத்திய பிறகு முடிவு அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
- மேல்நிலை வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு.
- மொழிப்பாட தேர்வுகள் வரும் 14 மற்றும் 20ம் தேதிகளில் நடைபெறும்.
மிச்சாங் புயல் எதிரொலியால் சென்னையில் வரலாறு காணாத கனமழை ஏற்பட்டது. இதனால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை தொடங்க இருந்த அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளையும், நாளை மறுநாளும் நடைபெற இருந்த மொழிப்பாட தேர்வுகள் வரும் 14 மற்றும் 20ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி அளவில் வினாத்தாள் தயாரிப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்படுவதை கருத்தில் கொண்டு மீண்டும் மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
- புயலால் ஏற்பட்ட பாதிப்பினால் நாளையும் (டிசம்பர் 6) சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- நாளை வரை பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் மறு நாளே அரையாண்டு தேர்வு முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
மிச்சாங் புயல் வட தமிழக கடலோரப் பகுதியான சென்னையை ஒட்டிய பகுதிகளில் நேற்று வளைந்து கடந்து சென்றதால், அதன் வேகம் குறைந்து, வெகுநேரம் சென்னைக்கு அருகில் மழை மேகங்களுடன் பயணித்தது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை இடைவிடாமல் மழை கொட்டியது.
சென்னையில் பெய்த மழை காரணமாக மாநகர் முழுவதும் வெள்ளக்காடானது. புயல் உருவாவதற்கு முன்பே சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், கடந்த வியாழக்கிழமை முதலே பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதேபோல், புயலால் ஏற்பட்ட பாதிப்பினால் நாளையும் (டிசம்பர் 6) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் வரும் 7ம் தேதி முதல் 22ம் தேதி வரை 10ம், 11ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடைபெறும் எனவும், 11ம் தேதி முதல் 21ம் தேதி வரை 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடைபெறும் எனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
நாளை வரை பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் மறு நாளே அரையாண்டு தேர்வு முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வரும் 7ம் தேதி முதல் 10ம், 11ம், 12ம் வகுப்புகளுக்கு நடைபெற இருந்த அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் 9, 10, 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இன்று முதல் 23-ம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடக்கிறது.
- 23-ந்தேதி தேர்வுகள் அனைத்தும் முடிகின்றன. அதை தொடர்ந்து பள்ளிகளுக்கு கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை விடப்படுகிறது. மீண்டும், 2-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
சென்னை:
தமிழக பாடத்திட்டத்தில் படிக்கும் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு இன்று தொடங்கியது.
தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், தனியார் மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் இன்று 9, 10, 11, பிளஸ்-2 வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு இன்று தொடங்கி நடந்து வருகிறது.
முதலில் மொழிப் பாடத்துக்கும் பின், அறிவியல், கணிதம், பொருளியல் உள்ளிட்ட மற்ற பாடங்களுக்கும் தேர்வு நடக்கிறது. மாவட்ட அளவில், பொதுவான வினாத்தாள்கள் வழங்கப்பட உள்ளன.
அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் 9, 10, 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இன்று முதல் 23-ம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடக்கிறது.
6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 19-ந் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை தேர்வு நடக்கிறது. இந்த தேர்வுக்கான வினாத்தாள்கள் அந்தந்த மாவட்டத்தில் முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் தயாரிக்கப்பட்டு உள்ளது.
வினாத்தாள்களை ஆசிரியர்கள், பணியாளர்கள் மொபைல் போனில் புகைப்படம் எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. வருகிற 23-ந்தேதி தேர்வுகள் அனைத்தும் முடிகின்றன. அதை தொடர்ந்து பள்ளிகளுக்கு கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை விடப்படுகிறது. மீண்டும் 2-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
- 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 19-ம் தேதி தொடங்குகிறது.
- 24-ம் தேதி முதல் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை விடுமுறையுடன் அரையாண்டுத் தேர்வு விடுமுறையும் விடப்படுகிறது.
சென்னை:
தமிழக பாடத்திட்டத்தில் படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு நேற்று தொடங்கியது.
அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் 9, 10, 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இன்று முதல் 23-ம் தேதி வரை தேர்வு நடக்கிறது.
6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 19-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை தேர்வு நடக்கிறது. இந்த தேர்வுக்கான வினாத்தாள்கள் அந்தந்த மாவட்டத்தில் முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் பள்ளி தலைமை ஆசிரியர் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு தேர்வு நடைபெறும் நேரத்தில் வினியோகிக்கப்படும்.
அரையாண்டுத் தேர்வு 23-ம் தேதி முடிவடைந்தவுடன் 24-ம் தேதி முதல் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை விடுமுறையுடன் அரையாண்டுத் தேர்வு விடுமுறையும் விடப்படுகிறது. ஜனவரி 2-ம் தேதி பள்ளி மீண்டும் திறக்கப்படுகிறது.
மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு நடப்பது போல சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களுக்கும் 3-வது பருவத்தேர்வு தற்போது தொடங்கி உள்ளது. அடுத்த வாரம் வரை அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வு நடைபெறுகிறது.
- 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 19-ந்தேதி தொடங்கி 23-ந்தேதி வரை தேர்வு நடக்கிறது.
- தேர்வுக்கான வினாத்தாள்கள் அந்தந்த மாவட்டத்தில் முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழக பாடத்திட்டத்தில் படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு நாளை (15-ந்தேதி) முதல் தொடங்குகிறது.
அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் 9, 10, 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நாளை முதல் 23-ந்தேதி வரை தேர்வு நடக்கிறது.
6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 19-ந்தேதி தொடங்கி 23-ந்தேதி வரை தேர்வு நடக்கிறது. இந்த தேர்வுக்கான வினாத்தாள்கள் அந்தந்த மாவட்டத்தில் முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
வினாத்தாள் பள்ளி தலைமை ஆசிரியர் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு தேர்வு நடைபெறும் நேரத்தில் வினியோகிக்கப்படும்.
அரையாண்டுத்தேர்வு 23-ந்தேதி முடிவடைந்தவுடன் 24-ந்தேதி முதல் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை விடுமுறையுடன் அரையாண்டுத் தேர்வு விடுமுறையும் விடப்படுகிறது. ஜனவரி 2-ந்தேதி பள்ளி மீண்டும் திறக்கப்படுகிறது.
மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு நடப்பது போல சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களுக்கும் 3-வது பருவத்தேர்வு தற்போது தொடங்கி உள்ளது. அடுத்த வாரம் வரை அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வு நடைபெறுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்