என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "லாட்டரி விற்றவர்"
- ரூ.20 ஆயிரம் பறிமுதல்
- லாட்டரி விற்பனை நடை பெறுவது தெரியவந்தால் பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவிக்குமாறு போலீசார் வேண்டுகோள்
நாகர்கோவில் :
நாகர்கோவில் மாநகர பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை அமோக மாக நடைபெற்று வருகிறது.
இதை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சுந்தரவதனம் நட வடிக்கை மேற்கொண்டுள் ளார். தனிப்படை அமைக் கப்பட்டு கண்காணிக்கப் பட்டு வருகிறது. இருப்பினும் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளும் மாநகர பகுதியில் சப்ளை செய்யப் பட்டு வருகின்றன. இந்த நிலையில் வடசேரி சப்-இன்ஸ்பெக்டர் ஜெசி மேனகா தலைமையிலான போலீசார் கிருஷ்ணன் கோவில் ஜங்ஷன் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட னர். அப்போது அந்த பகுதியில் உள்ள குளிர்பான கடை ஒன்றில் சோதனை செய்தபோது அங்கு ஆன் லைன் லாட்டரி விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து கடை உரிமையாளர் அன்பு குமார் (48) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ரூ.20,030-ஐ பறி முதல் செய்தனர். கைது செய்யப்பட்ட அன்பு குமாரி டம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். குமரி மாவட்டத்தில் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்ப வர்கள் மீது கடும் நடவ டிக்கை எடுக்கப்படும்.
லாட்டரி விற்பனை நடை பெறுவது தெரியவந்தால் பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவிக்குமாறு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- கேரள மாநில லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- வங்கி கணக்கை போலீசார் முடக்கினர்.
பல்லடம் :
வாட்ஸ்அப்' வாயிலாக, லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரை பல்லடம் போலீசார் கைது செய்து சிறையில், அடைத்தனர். பல்லடம் அருகே கணபதிபாளையம் - சென்னிமலைபாளையத்தை சேர்ந்த கங்காதரன் மகன் சரவணன், 55. இவர், கேரள மாநில லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால், விசாரணை மேற்கொண்டனர்.
அதில், 'வாட்ஸ் அப்' மூலம் கேரள மற்றும் மூன்றாம் நெம்பர் லாட்டரி விற்பனையும், 'கூகுள் பே' வாயிலாக, பண பரிவர்த்தனையும் மேற்கொண்டது தெரிந்து, இதனையடுத்து சரவணனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, 2 மொபைல் போன், கேரள லாட்டரி, 20 மற்றும் 1,300 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, வங்கி கணக்கையும் போலீசார் முடக்கினர்.
- லாட்டரி சீட்டு திருட்டுத்தனமாக விற்கப்படுவதாக ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- கேரளா லாட்டரி திருட்டுத்தனமாக விற்பனை செய்த பாரப்பாளையம் மண்ணரையை சேர்ந்த பிரபாகரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஊத்துக்குளி :
ஊத்துக்குளி அருகே உள்ள கூலிபாளையம் நான்கு ரோட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா காருண்யா மூன்று இலக்க லாட்டரி சீட்டு திருட்டுத்தனமாக விற்கப்படுவதாக ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அந்த பகுதியில் சோதனை மேற்கொண்ட ஊத்துக்குளி போலீசார், கேரளா லாட்டரி திருட்டுத்தனமாக விற்பனை செய்த பாரப்பாளையம் மண்ணரையை சேர்ந்த பிரபாகரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்