என் மலர்
நீங்கள் தேடியது "இளம்பெண் தற்கொலை முயற்சி"
- வீட்டிற்கு சென்று மயங்கிய நிலையில் இருந்த மனைவி மற்றும் குழந்தையை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.
- சம்பவம் குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:
கோவை கோவில்பாளையம் அருகே உள்ள கொங்குநகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி லஷிகா (வயது 23). இவர்களுக்கு கேசின்யா என்ற 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.
சம்பவத்தன்று லஷிகா தனது கணவரிடம் குழந்தையை சலூன் கடைக்கு அழைத்து சென்று முடிவெட்டி விட்டு வரும்படி கூறினார். அதற்கு கார்த்திகேயன் குழந்தைக்கு 3-வது மொட்டை பழனி முருகன் கோவிலில் எடுக்க வேண்டியது உள்ளது. எனவே முடி வெட்ட வேண்டாம் என கூறினார்.
இதனையடுத்து லஷிகா தனது குழந்தைக்கு அவரே முடி வெட்டினார். இதனை பார்த்த கார்த்திக்கேயன் தனது மனைவியை கண்டித்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கார்த்திகேயன் வெளியே சென்றார்.
இதில் மனவேதனை அடைந்த லஷிகா தற்கொலை செய்வது என முடிவு செய்தார். அதன்படி பெண் குழந்தை கேசின்யாவுக்கு விஷம் கொடுத்து தானும் குடித்தார். சிறிது நேரத்தில் அவர்கள் வாந்தி எடுத்தனர். இதுகுறித்து லஷிகா, தனது கணவருக்கு தகவல் தெரிவித்தார். இதனை கேட்டு கார்த்திகேயன் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் வீட்டிற்கு சென்று மயங்கிய நிலையில் இருந்த மனைவி மற்றும் குழந்தையை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு 2 பேருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் டாக்டர்கள் லஷிகா, கேசின்யா ஆகியோரை மேல் சிகிச்சைக்காக விமான நிலையம் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கோபால் திருமணம் செய்ய மறுத்து தட்டிக்கழித்து வந்தார்.
- மனம் உடைந்த காதலி விஷ மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றார்.
சேலம்:
சேலம் மாவட்டம் மல்லூர் அருகே அக்கரைபாளையம் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் (வயது 23) தனது கணவரை பிரிந்து தன்னுடைய 3 வயது ஆண் குழந்தையுடன் தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.
இப்பெண்ணுக்கும், பாலம்பட்டி பகுதியை சேர்ந்த தேங்காய் வியாபாரி கோபால் (33) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி அவர்களுக்கு இடையே ரகசிய உறவு ஏற்பட்டது. இதையடுத்து கோபால் திருமணம் செய்ய மறுத்து தட்டிக்கழித்து வந்தார். சம்பவத்தன்று இரவு கோபால் தனது தோட்டத்து வீட்டில் இருந்தார். அங்கு சென்ற காதலி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கோபாலிடம் வற்புறுத்தி உள்ளார். கோபால் மறுக்கவே அவருடன் காதலி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
அப்படி இருந்தும் கோபால் தன்னுடைய நிலையில் பிடிவாதமாக இருந்தார். இதில் மனம் உடைந்த காதலி விஷ மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரியில் அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபாலை கைது செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து போலீசார், அவரை அழைத்துச்சென்று சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
கள்ளக்காதலன் திருமணத்துக்கு மறுத்ததால் பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- தன்னை மேலாளர் ஆசைக்கு இணங்கும்படி அழைத்தது குறித்தது கேட்க சென்ற கணவரிடம் தகாத வார்த்தைகளால் பேசியதால் மிகுந்த மனவேதனை அடைந்தார்.
- வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் வைத்து விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார்.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் 26 வயது இளம்பெண். இவர் பீட்சா கடை ஒன்றில் சமையல் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கணவர் உள்ளார்.
இந்தநிலையில் அதே கடையில் மேலாளராக வேலை பார்க்கும் ஊட்டியை சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க நபர் இளம்பெண்ணை தனது ஆசைக்கு இணங்கும்படி அழைத்து வந்தார். நாளுக்கு நாள் அவரது தொல்லை அதிகரித்து போகவே இளம்பெண் இது குறித்து தனது கணவரிடம் தெரிவித்தார்.
உடனடியாக இளம்பெண்ணின் கணவர் தனது நண்பர்கள் 2 பேருடன் அந்த கடைக்கு சென்றார். அங்கு இருந்த மேலாளரிடம் இளம்பெண்ணை ஆசைக்கு இணங்கும்படி அழைத்தது குறித்து கேட்டனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் மேலாளர் இளம்பெண்ணை தகாத வார்த்தைகளால் பேசினார். இதனை பார்த்த அங்கு இருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
தன்னை மேலாளர் ஆசைக்கு இணங்கும்படி அழைத்தது குறித்தது கேட்க சென்ற கணவரிடம் தகாத வார்த்தைகளால் பேசியதால் மிகுந்த மனவேதனை அடைந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் வைத்து விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த இளம்பெண்ணின் கணவர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.