என் மலர்
நீங்கள் தேடியது "சர்க்கரை வியாதி"
- டைப்-2 சர்க்கரை நோயை உருவாக்கும் என்று தெரியவந்துள்ளது.
- மூளையின் செயல்பாடு பாதிக்கப்பட்டு அறிவாற்றல் வளர்ச்சி குறைகிறது.
அமெரிக்காவில் நடத்திய ஒரு ஆய்வில் குழந்தைகளுக்கு இளம் வயதில் அதிக அளவில் இனிப்பு கலந்த உணவுகளை உண்ண தருவது அவர்கள் வாழ்நாள் முழுவதும் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு வழிவகுக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக, குழந்தைகளுக்கும் சிறுவர் சிறுமியர்களுக்கும் இனிப்புகளை தொடர்ந்து தரும்போது அதிக உடல் பருமன், இளம் வயதிலேயே ரத்த அழுத்தம் மற்றும் டைப்-2 சர்க்கரை நோயை உருவாக்கும் என்று தெரியவந்துள்ளது.
அமெரிக்க குழந்தைகள் சராசரியாக 17 தேக்கரண்டி சர்க்கரையை தினமும் உட்கொள்வதாக அந்த நாட்டின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது எதிர்காலத்தில் மிக மோசமான உடல் பாதிப்புகளை கொண்ட சமுதாயத்தை உருவாக்கும் என்று உணவு துறை நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.
அதிகப்படியான சர்க்கரை உணவில் தொடரும்போது சிறுமிகள் முந்தைய பருவம் அடைதல் மற்றும் டைப்-2 நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கிறது. சிறுவயதில் அதிக அளவில் இனிப்புகளை உட்கொள்வதால் கல்லீரல் செயல்பாடு கடுமையாக பாதிக்கப்படுவதுடன், மூளையின் செயல்பாட்டையும் பாதித்து அறிவாற்றல் வளர்ச்சி குறைகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
பொதுவாக, இனிப்பு என்பது சீனி, சர்க்கரை மட்டுமின்றி பதப்படுத்தப்பட்ட தானியங்கள் முதல் பழச்சாறுகள் வரை அனைத்திலும் கலந்திருப்பதால் பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்களை குறைத்துக்கொள்வது உடல் நலனுக்கு நல்லது என்று அமெரிக்கா மட்டுமின்றி உலகின் பல்வேறு ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
- சர்க்கரை வியாதி இருந்துள்ளதால் அவதிப்பட்டு வந்தார் .
- மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம்:
விழுப்புரம் கிழக்கு சண்முகபுரம் இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் ஹரிபாபு(46) விவசாயி, மது அருந்தும் பழக்கமுடைய இவருக்கு கடந்த 10 ஆண்டுகளாக சர்க்கரை வியாதி இருந்துள்ளதால் அவதிப்பட்டு வந்தார் இதனால் விரக்தியில் இருந்த அவர் நேற்று வீட்டில் ஆளில்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி விஜயா கொடுத்த புகாரின் பேரில் விழுப்புரம் டவுன் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- தாய்மை அடையும் பெண்கள் சர்க்கரை வியாதியை எப்படி கையாள வேண்டும்?
- டாக்டர் நிவேதிதா கார்த்திகா விளக்கமளிக்கிறார்.
மதுரை
தாய்மை அடையும் பெண் கள் சர்க்கரை வியா தியை கையாளும் முறைகள் குறித்து மதுரை அன்யா என்டோக்ரின் மற்றும் டையப்பெட்டீஸ் மையத்தைச் சேர்ந்த டாக்டர் டாக்டர் நிவேதிதா கார்த் திகா அளித்துள்ள வழிகாட் டல்கள் வருமாறு:-
வழிகாட்டல்கள்
முழு தானியங்கள், குறை வான கொழுப்பு கொண்ட புரதச்சத்துக்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் குறைவான கிளைசீமிக் இன்டிசஸ் கொண்டிருக்கிறது. ரத்த சர்க்கரை அதிகரிப்பதை தடுப்பதற்கு அளவுகளை கட்டுப்படுத்துவது மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு கள் மற்றும் சர்க்கரை பானங்களை தவிர்ப்பது அவசியம்.
அத்தியாவசிய ஊட்டச் சத்து அளிக்கையில் ரத்த சர்க்கரை அளவுகளை நிலையாக வைக்கும் தனிப் பட்டதாக்கப்பட்ட உணவு திட்டங்களுக்கு டையட்டீஷி யனுடன் ஒருங்கிணைய வேண்டும். நிலையான ரத்த சர்க்கரை அளவுகளுக்காக சமமாக விநியோகிப்பதற்கு கார்போஹைட்ரேட் கணக் கிடுவதை புரிந்து கொள்ள வேண்டும்.
நிலைத்தன்மை மிக்க சக்தி மற்றும் நிலையான ரத்த சர்க்கரை அளவுகளுக்கு முக்கிய உணவுகளுடன் பயிர்கள், கொழுப்பு இல் லாத இறைச்சி மற்றும் பால் பொருட்கள் போன்ற குறை வான ஜி.ஐ. உணவுகளை சேர்ப்பது, அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களுக்காக அவோகாடோஸ், நட்ஸ் மற்றும் ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய் மற் றும் நெய் (மிதமான அள வில்) போன்ற ஆதாரங்களை சேர்ப்பது முக்கியம்.
நிலையான ரத்த சர்க் கரை அளவுகளுக்காக நிறைய தண்ணீர் குடிப்பது மற்றும் முழு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிக ளிலிருந்து உணவில் உள்ள நார்சத்தை சாப்பிடுவது நீர்ச்சத்து, நார்ச்சத்தை அதி கரிக்க உதவும். ரத்த சர்க்கரை அளவுகள் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கி யத்தை நிர்வகிப்பதற்கு சிபா ரிசு செய்யப்பட்ட உடல் ரீதியிலான நடவடிக்கையில் ஈடுபடுவது அவசியம்.
ரத்த சர்க்கரை கட்டுப் பாட்டில் சாதகமான தாக் கத்தை ஏற்படுத்துவதற்கு தியானம், யோகா அல்லது ஆழமாக சுவாசிப்பதன் மூலமாக மன அழுத்தத்தை குறைப்பதற்கு பழகிக் கொள்வது, ரத்த சர்க்கரை அள வுகளில் இடையூறு களைத் தடுப்பதற்கு மற்றும் நலனை ஊக்குவிப்பதற்கு போதியளவு தூக்கத்தை முன்னுரிமைப்படுத்த வேண்டும்.
உரிய நேரத்தில் அட் ஜஸ்ட் செய்வதற்காக வழக்க மாக ரத்த சர்க்கரை அளவு களை கண்காணிப்பது, திறன் வாய்ந்த சிகிச்சைகளுக் காக மருத்துவ தொழில் வல்லுனர்களுக்கு அவ்வப் போதைய தகவலை அளிப் பது, சாத்தியமாக இருந்தால், ரத்த சர்க்கரை ஒழுங்குப டுத்துவது மற்றும் பச்சிளம் குழந்தைக்கான ஊட்டச்சத் திற்காக தாய்ப்பால் ஊட்டு வதை கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு சர்க்கரை வியாதி பயணமும் தனித்தன் மையானது. இந்த வழிகாட் டுதல்கள் அடிப்படையா னவை. ஆனால், தேவைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட ஒரு திட்டத்திற்காக மருத்துவ தொழில் வல்லுனர்களுடன் ஒருங்கிணைவது அவசியமா னது. முன்கூட்டியே செய லாற்றுவது, தகவல் பெற்ற அணுகுமுறைகள் மற்றும் பலம் வாய்ந்த மருத்துவ தொடர்புகள் மூலமாக, தாய்மையின் மகிழ்ச்சியை தழுவிக் கொள்கையில் நீங்கள் மிகச் சரியாக சர்க் கரை வியாதியை நிர்வகிக்க லாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சர்வதேச நீரிழிவு நோய் தடுப்பு கழகம் நடத்திய ஆய்வின் மூலம் 533 மில்லியன் பேர் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது.
- சர்க்கரை வியாதியின் அடுத்த கட்டம் இதய நோய்கள், சிறுநீரக செயலிழப்பு போன்ற ஆபத்தான நோய்களை உருவாக்கும்.
சென்னை:
சர்க்கரை வியாதி என்பது உலகம் முழுக்க பரவிக்கொண்டு இருக்கிறது. இந்தியாவில் 10 கோடிக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதை பொறுத்தவரை சர்க்கரை நோய் வியாதி டைப்-1, டைப்-2 என்று இரண்டு வகை உள்ளன.
சர்க்கரை நோய் வருவதற்கு பல்வேறு காரணிகள் சொல்லப்பட்டாலும் முக்கியமான காரணம் புகைப்பிடிப்பது. புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களின் உடலின் வழக்கமான செயல்பாட்டை புகைப்பிடிப்பது மாற்றி அமைத்துவிடும். அதாவது இன்சுலின் சுரப்பதை கட்டுப்படுத்தும்.
இதனால் டைப்-2 சர்க்கரை வியாதி உடலில் ஏற்கனவே இருந்தால் அது அதிகரிக்கும். இல்லை என்றால் வருவதற்கு ஆயத்தமாகும். சர்க்கரை வியாதி டைப்-2 என்பது பரவலாக இருப்பது தான். இது நாள்பட்ட வியாதி ஆகும். இதை உரிய மருந்துகள் மூலம் கட்டுப் பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். ஆனால் புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால் கட்டுப்பாட்டுக்குள் இருக்காது.
ஏனெனில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்யும். அதேபோல் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு உடலில் சிறு காயங்கள் ஏற்பட்டாலும் சர்க்கரை வியாதி இருப்பவர்களுக்கு எப்படி அது ஆறுவதற்கு நீண்ட நாள் ஆகுமோ அதேபோல் புகைப்பிடிப்பவர்களுக்கும் காயம் ஆறுவதற்கு நீண்ட நாள் ஆகும்.
சர்வதேச நீரிழிவு நோய் தடுப்பு கழகம் நடத்திய ஆய்வின் மூலம் 533 மில்லியன் பேர் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது.
சர்க்கரை வியாதியால் உயிரிழப்புகளும் நேரிடுகிறது. காரணம் சர்க்கரை வியாதியின் அடுத்த கட்டம் இதய நோய்கள், சிறுநீரக செயலிழப்பு போன்ற ஆபத்தான நோய்களை உருவாக்கும். உயிரிழப்புகளுக்கு சர்க்கரை வியாதியும் ஒரு காரணமாகி உள்ளது.
புகை பிடிப்பதை கைவிட்டால் 40 சதவீதம் பேர் நீரிழிவு நோய் வராமல் தடுக்க முடியும். எனவே புகைப்பிடிப்பதை தவிர்க்கும் படி மக்களிடம் விழிப்புணர்வை அதிக அளவு ஏற்படுத்தி வருகிறார்கள்.
புகைப்பிடிப்பதை குறைப்பதற்கு தீவிரமான நடவடிக்கைகள் தேவை என்று இந்த அமைப்பு சுட்டிக்காட்டி உள்ளது. இதற்காக பல்வேறு அமைப்புகளும், அரசும் இணைந்து செயல்பட வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. புகைப்பிடிப்பதை குறைப்பதன் மூலம் இதய நோய், சிறுநீரக செயலிழப்பு மட்டுமின்றி சர்க்கரை வியாதி வருவதையும் தடுக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வில் இந்தியாவில் 10 கோடிக்கும் மேற்பட்டவர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் 13 கோடி பேர் சர்க்கரை நோய் வரும் ஆபத்தான கட்டத்தில் இருப்பவர்களாகவும் கண்டறியப்பட்டு உள்ளார்கள். கேரளா, புதுவை, பஞ்சாப், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிக அளவு இருக்கிறது. பொதுவாகவே இந்தியாவில் தென் மாநிலங்களிலும், வட மாநிலங்களிலும் அதிலும் நகர வாழ்க்கை அதிகமாக இருக்கும் இடங்களில் சர்க்கரை வியாதி அதிக அளவில் காணப்படுகிறது.
- சியா விதைகளில் அதிகளவில் புரதச்சத்து உள்ளது.
- பழங்களையும் பாலையும் கலந்து ஸ்மூதி செய்யும்போது அதில் சிறிதளவு சியா விதைகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.
சியா விதைகள் பார்ப்பதற்குச் சிறியதாக இருக்கும். அவை கறுப்பு, வெள்ளை, பழுப்பு ஆகிய நிறங்களில் இருக்கும். சியா விதைகளைத் தண்ணீரில் ஊற வைக்கும்போது களிமம் அதன் மேல் உருவாகும். சியா விதைகள் பல்வேறு நன்மைகள் கொண்டவை.
பொதுவாக, ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மீன் வகைகள், கொட்டைகள், விதைகள் போன்ற உணவு வகைகளில் அதிகம் இருக்கும். சியா விதைகளிலும் 'ஒமேகா 3' கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளது. மூளைச் செயல்பாடு, இருதய நலம் ஆகியவற்றுக்கு சியா விதைகள் மிகவும் நல்லது.

நம் உடலில் இருக்கும் நார்ச்சத்து அளவை அதிகரிக்க சியா விதைகளை உட்கொள்ளலாம். நார்ச்சத்து அதிகம் கொண்டுள்ள உணவு வகைகளைச் சாப்பிடும்போது புற்றுநோய், இதய நோய், 'டைப் 2' நீரிழிவு, செரிமானக் கோளாறு போன்றவற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியும்.
சியா விதைகளில் அதிகளவில்புரதச்சத்து உள்ளது. நம் உடலுக்குத் தேவையான அனைத்து அமினோ அமிலங்களும் நிறைந்த உணவு வகைகளில் ஒன்று சியா விதை.
இதற்கிடையே சியா விதைகளை உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடிய வழிகளும் உண்டு.
இரண்டு தேக்கரண்டி சியா விதைகளை அரை கப் பாலில் சேர்த்து அதை ஒரு ஜாடியில் நன்றாக மூட வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து ஜாடியை நன்றாகக் குலுக்கி அதைக் குளிர்சாதனப் பெட்டியில் குறைந்தது 15 நிமிடங்களாவது வைத்து விட்டு சாப்பிட்டு வரலாம்.
40 கிராம் சியா விதைகளை ஒரு லிட்டர் தண்ணீரில் சேர்த்து அதை 30 நிமிடத்திற்கு ஊற வைத்துக் குடிக்கலாம்.
பழங்களையும் பாலையும் கலந்து ஸ்மூதி செய்யும்போது அதில் சிறிதளவு சியா விதைகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.

பொதுவாக கேக் வகைகளில் கொழுப்பு மற்றும் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். சிறிதளவு சியா விதைகளைச் சேர்த்துக்கொண்டால் கேக்கில் இருக்கும் நார்ச்சத்து, புரதம், ஒமேகா 3 அளவு ஆகியவை அதிகரிக்கும்.
பொதுவாக பழ ஊறல் செய்யும் போது அதில் அதிகளவில் சர்க்கரை சேர்க்கப்படும். அதற்குப் பதிலாக சியா விதைகளை சேர்த்து சர்க்கரைக்குப் பதிலாக தேனைச் சேர்க்கலாம்.
முட்டை சாப்பிட விரும்பாதவர்கள் அதற்குப் பதிலாக சியா விதைகளைச் சாப்பிடலாம். 15 கிராம் சியா விதைகளை மூன்று தேக்கரண்டி தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவது ஒரு முட்டைக்குச் சமம்.
இருப்பினும், சியா விதைகளை உட்கொள்ளும் ஒருசிலருக்குச் செரிமானப் பிரச்சினைகள் ஏற்படுவதும் உண்டு. அதனால், சிறிதளவு சியா விதைகளை உட்கொண்டு, பக்கவிளைவுகள் ஏற்படுகின்றனவா என்பதை முதலில் பார்ப்பது சிறப்பு.
- பெண்களுக்கும் இன்று சர்க்கரை வியாதியின் பாதிப்பானது அதிகரித்து வருகிறது.
- பாலியல் உணர்வுகள் குறைவாக இருக்கலாம்.
சர்க்கரை வியாதி பொதுவாகவே எல்லோருக்கும் அதிகரித்து வரும் ஒரு முக்கியமான பிரச்சனை ஆகும். குறிப்பாக பெண்களுக்கும் இன்று சர்க்கரை வியாதியின் பாதிப்பானது அதிகரித்து வருகிறது.
பெண்கள் பலருக்கு இன்று சிறு வயதிலேயே சர்க்கரை வியாதி ஏற்படுகிறது. இந்த கால கட்டத்தில் இருக்கக்கூடிய உணவு பழக்க முறைகள், உடற்பயிற்சி இல்லாத நிலை, நவீன வாழ்க்கை முறைகள், கம்ப்யூட்டரில் அமர்ந்து வேலை செய்வதால் ஏற்படும் உடல் பருமன் மற்றும் மனதளவில் ஏற்படுகிற மனஅழுத்தம், தூக்கம் இல்லாத நிலையில் இரவில் தொடர்ந்து கண் விழித்தல் ஆகியவை அனைத்துமே சர்க்கரை வியாதியை அதிகரிக்கிற மிக முக்கியமான விஷயமாகும்.

பெண்களுக்கு சர்க்கரை வியாதியானது அதிகமாக இருக்கும் இந்த காலத்தில், அவர்களுக்கு பாலியல் உறவு சம்பந்தமான விஷயத்தில் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
பொதுவாக பெண்களுக்கு பெண் உறுப்பில் சர்க்கரை வியாதியால் பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது. சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாலியல் பிரச்சனைகள் எவ்வளவு வருகிறது என்று பார்த்தால், பாதிக்கப்பட்ட பெண்களில் 60 முதல் 70 சதவீதம் பேருக்கு ஏதாவது ஒரு காலகட்டத்தில் பாலியல் உறவு முறைகளில் பிரச்சனைகள் வருகிறது என்று ஆய்வுகள் நமக்கு தெரிவிக்கிறது.
முதலில் அது உறவு முறைகளில் ஆர்வம் இல்லாத நிலையாக இருக்கலாம், விருப்பம் குறைவாக இருக்கலாம், பாலியல் உணர்வுகள் குறைவாக இருக்கலாம். இரண்டாவது, பாலியல் உணர்வுகள் நார்மலாக இருந்தால் கூட, பாலியல் உறவுக்கான எழுச்சி குறைவாக இருக்கலாம்.

மூன்றாவதாக, இதனால் ஏற்படுகிற சில உச்ச கட்டங்களுக்கான பிரச்சனைகளை சீரான முறையில் அவர்களால் உணர முடியாமல் இருக்கலாம், நான்காவதாக, முக்கியமான விஷயமாக வலிகளும் ஏற்படலாம். அதனால் பாலியல் விஷயத்துகான இந்த 4 செயல்பாடுகளுமே சர்க்கரை வியாதி உள்ள பெண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
சர்க்கரை வியாதியால் பாதிக்கப்படுகிற பெண்களுக்கு அவர்களது உடலில் பலவிதமான தொற்று கிருமிகள் ஏற்படுகிறது. மேலும் இதனால் ஹார்மோன் மாற்றங்கள், செல்களில் மாற்றங்கள் ஆகியவை உருவாகிறது.
குறிப்பாக ரத்தக்குழாய்களில் பழுது, நரம்பு மண்டலங்களில் பழுது, அதில் உள்ள தோல் பகுதிகள் மற்றும் ஜவ்வு பகுதிகளில் பழுது போன்றவையெல்லாம் சர்க்கரை வியாதி இருப்பவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிற ஒரு முக்கியமான விஷயம் ஆகும்.
எனவே சர்க்கரை நோய் பாதிப்பு இருக்கிற பெண்களுக்கு, பாலியல் உறவு கொள்வதில் ஏன் ஆர்வம் ஏற்படாமல் இருக்கிறது என்று பார்த்தோமென்றால், இதுபற்றி வெளிவந்துள்ள பல்வேறு ஆய்வுகளிலும் சொல்லப்படுகிற ஒரு கருத்து பெண்களுக்கு உறவு கொள்வதில் ஆர்வம் குறைவு என்பதுதான்.
அதாவது அந்த பெண்களுக்கு உறவு கொள்ளலாம் என்கிற எண்ணங்கள் வரலாம், ஆனால் உறவு கொள்வதற்கான ஆர்வம் மிகவும் குறைவாக இருக்கிறது என்று ஆய்வுகள் கூறுகிறது. இது பலராலும் மறுக்கப்பட முடியாத உண்மை.
இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் முதல் முக்கியமான காரணம், பெண் உறுப்புகளில் ஏற்படுகிற சில உலர்வு தன்மைகள் ஆகும்.
குறிப்பாக உடலில் சர்க்கரை அளவு அதிகமாகும் போது, இந்த பெண்களுக்கு பல ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டு, பல நேரங்களில் ஈஸ்ட்ரோஜன் வருவது குறைவாகி, டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகமாகி, அதனால் ஏற்படும் சில பிரச்சினைகளால் பெண்களுக்கான உலர்வுத்தன்மை அதிகரிக்கிறது.

இதன் மூலம் பெண் உறுப்பில் ஏற்படுகிற மாற்றங்கள், தாக்கங்கள் ஆகியவை மூலம் அவர்களின் ஆர்வம் குறைவாகலாம். பல நேரங்களில் இதற்கு சில நவீன சிகிச்சை முறைகளும் தேவைப்படலாம்.
அந்த வகையில் சர்க்கரை வியாதி இருக்கிற பெண்களுக்கு, இந்த ஹார்மோன் குறைபாடுகள் ஏற்படுவது ரொம்ப ரொம்ப பொதுவான விஷயம் ஆகும். அதனால் தான் அவர்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் அளவு மாறுபடும், ஈஸ்ட்ரோஜன் அளவுகள் மாறுபடும்.
ஏனென்றால் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு குறிப்பாக முதலில், நரம்பு மண்டலமும், ரத்தக்குழாய்களும் பழுதாகும். இதன் காரணமாக பெண் உறுப்புக்கு போகும் ரத்த ஓட்டம் பாதிக்கப்படும்.
மேலும் பெண்ணுறுப்பை சீராக வைத்திருக்கிற நரம்பு மண்டலம் பழுதாகும் நிலையில், அவர்கள் பாலியல் உறவு கொள்வதில் பிரச்சனைகள் ஏற்படலாம்.
- முக்கியமான விஷயமே சர்க்கரை கட்டுப்பாடு தான்.
- முதல் அறிவுரை உணவு கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.
சர்க்கரை வியாதி இருக்கும் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் வராமல் கண்டிப்பாக தடுக்க முடியும். அதற்கான வழிமுறைகள் என்னவென்றால், முதல் முக்கியமான விஷயமே அவர்களின் சர்க்கரை கட்டுப்பாடு தான்.
சாப்பிடுவதற்கு முன்பு ரத்த சர்க்கரை அளவு 110-க்குள் இருக்க வேண்டும். சாப்பிட்ட பிறகு 2 மணி நேரம் கழித்து 160-க்குள் இருக்க வேண்டும். 3 மாத கட்டுப்பாடு 6.5-க்குள் இருக்க வேண்டும்.

சர்க்கரையை இதே அளவில் வைத்து அவர்கள் உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடித்தால் கண்டிப்பாக பாலியல் உறவு முறைகளில் பிரச்சனைகள் வராது. ஆனால் இதுவே அதிகமாகும் போது தான் தொற்றுக்கள் ஏற்படும்.
எனவே இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு முக்கியமான முதல் அறிவுரை உணவு கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.
இதுதவிர சில பெண்கள், எனக்கு எல்லாமே கட்டுப்பாட்டில் இருக்கிறது ஆனாலும் பாலியல் உணர்வு குறைவாக இருக்கிறது, ஆர்வம் குறைவாக இருக்கிறது என்று சொல்வார்கள். அதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெண்களுக்கு ரத்த அழுத்தமும் இருக்கும்.

ரத்த அழுத்தத்துக்கு உட்கொள்கிற மாத்திரைகள் நரம்பு மண்டலங்களில் பாதிப்பை உண்டாக்கி அதன் மூலமாக அவர்களுடைய உறவு கொள்ளும் முறைகளையும் பாதிக்கிறது. இது ரத்த அழுத்தத்துக்கான மாத்திரைகளின் பக்க விளைவுகள் ஆகும்.
எனவே ரத்த அழுத்தத்துக்கு மாத்திரை சாப்பிடுபவர்களுக்கு அந்த மாத்திரையின் பக்க விளைவால் இந்த பிரச்சனைகள் வரலாம்.
எனவே உணவு பழக்க வழக்க முறைகளை மாற்றுங்கள், உடற்பயிற்சிகளை அதிகப்படுத்துங்கள், முறையாக சர்க்கரையை கட்டுப்படுத்துவதற்கான மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்கள், தேவைப்படும்போது இதற்கான சில சிகிச்சைகளையும் முறையாக எடுத்துக்கொள்ளுங்கள்.
இதனால் ஏற்படுகிற பின் விளைவுகள், சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லாததால் ஏற்படுகிற பிரச்சனைகளை புரிந்து ஒவ்வொரு காலகட்டத்திலும் அதனை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான வழி முறைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் தகுதியுள்ள மருத்துவரை அணுகி முறையாக உறவு கொள்வதற்கான வழிமுறைகளை சீர் செய்து கொள்ள வேண்டும். முறையாக பார்த்துக்கொண்டால் கண்டிப்பாக பின்விளைவுகள் வராது.

சர்க்கரை நோய் இருக்கிற பெண்களுக்கு சிறுநீர் தொற்று, பெண்ணுறுப்பில் தொற்று ஆகியவை தவிர அவர்களுக்கு அந்த இடத்தில் வேறு பல வகையிலும் தொற்றுக்கள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. இதனால் உறவு கொள்வதில் ரொம்ப பிரச்சனைகள் இருக்கும்.
சிலருக்கு ரத்த அழுத்தம் அதிகமாகும், சில நேரங்களில் காய்ச்சல் கூட வரும். இவை எல்லாமே இந்த பிரச்சனைகளின் வெளிப்பாடுதான்.
ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை:
எனவே சர்க்கரை வியாதி இருக்கின்ற பெண்கள் முறையாக, முழுமையாக, ஆரம்ப நிலையிலேயே அதற்கான சிகிச்சைகளை பெற வேண்டும். அந்த சிகிச்சை முறைகள் பற்றியும் நன்றாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். சர்க்கரை நோய் இருப்பதை கண்டுபிடித்த பின்பு சர்க்கரை நோய் வந்து விட்டதே என்று கவலைப்படாதீர்கள்.
அதை எப்படி கையாண்டு அதில் இருந்து வெளிவருவது என்பதை முறையாக சில பரிசோதனை முறைகள் மூலம் தெரிந்து கொண்டு அதை செயல்படுத்துங்கள். இதன் மூலம் சர்க்கரை வியாதி கட்டுக்குள் இருக்கும். சர்க்கரை வியாதி கட்டுக்குள் இருக்கும் பட்சத்தில், பாலியல் உறவு பிரச்சனைகளும், குழந்தையின்மை பிரச்சனைகளும் கண்டிப்பாக சரியாகும்.