என் மலர்
நீங்கள் தேடியது "நாசம் செய்த ஒற்றை யானை"
- மல்லிகைபாறை, காபி தோட்டம், கவுச்சிகொம்பு உள்ளிட்ட பகுதியில் கடந்த சிலநாட்களாக காட்டு யானை முகாமிட்டுள்ளது.
- காட்டு யானை தொடர் அட்டகாசத்தால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
பெரும்பாறை:
கொடைக்கானல் கீழ்மலைப்பகுதியான பெரும்பாறை அருகே மல்லிகைபாறை, காபி தோட்டம், கவுச்சிகொம்பு உள்ளிட்ட பகுதியில் கடந்த சிலநாட்களாக காட்டு யானை முகாமிட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றது.
இந்த நிலையில் நேற்று இரவு காபி தோட்டத்தை சேர்ந்த விவசாயிகளான கோவிந்தராஜ், பூபதி, காந்தி ஆகியோருக்கு சொந்தமான காபி தோட்டத்துக்குள் புகுந்த ஒற்றை யானை அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை, காபி, ஆரஞ்சு பயிர்களை நாசம் செய்தது. இன்று காலை மல்லிகைபாறை வழியாக தார்சாலைக்கு வந்து சந்தனச்சோலை வனப்பகுதிக்குள் சென்றது.
காட்டு யானை தொடர் அட்டகாசத்தால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே மல்லிகைபாறை, காபி தோட்டம், கவுச்சிகொம்பு உள்ளிட்ட மலைக்கிராமங்களில் முகாமிட்டுள்ள காட்டு யானை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
- ஜவளகிரி வனச்சரக பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.
- இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஜவளகிரி வனச்சரக பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.
கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றை யானை நேற்று அதிகாலை ஓசட்டி கிராமத்திற்குள் புகுந்து விவசாயிகள் பயிரிட்டிருந்த நெல் வயலுக்குள் இறங்கி பயிர்களை தின்றும் காலால் மிதித்தும் நாசம் செய்தன.
இதை அறிந்த கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் டார்ச் லைட் அடித்து சத்தம் போட்டு வனப்பகுதிக்கு யானையை விரட்டினர்.
ஆனால் ஒரு மணி நேரமாக அதே இடத்தில் நின்று பயிர்களை காட்டு யானை தின்று கொண்டிருந்ததால் விவசாயிகளுக்கு பல ஆயிரம் ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கிராம பகுதிகளில் ஒற்றை யானை சுற்றித்திரிவதால் ஒசட்டி, கண்டகானப்பள்ளி, தாவரக்கரை உள்ளிட்ட கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.