என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலமேடு"

    • முடுவார்பட்டி ஊராட்சி மயானம் சீரமைப்பு பணி நடந்தது.
    • மயானத்தின் உட்பகுதி முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு தேவையான அடிப்படை வசதிகளை செய்யப்பட்டது.

    அலங்காநல்லூர்

    பாலமேடு அருகே உள்ள முடுவார்பட்டி ஊராட்சி மயானத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டி பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    இதுகுறித்த செய்தி மாலைமலர் நாளிதழில் வெளியானது. அதன் பேரில் உடனடியாக ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ஜே.சி.பி. எந்திரம் மூலம் மயானத்தை தூய்மைப்படுத்தும் பணியை தொடங்கியது. ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமணி அசோகன் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் முன்னிலையில் முடுவார்பட்டி மயானத்தின் முன்பகுதி, புதர் மண்டி காட்சியளித்த நிலையில் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டது.

    மயானத்தின் உட்பகுதி முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு தேவையான அடிப்படை வசதிகளை செய்யப்பட்டது. 

    • பாலமேடு அருகே நாளை மின்தடை ஏற்படும்.
    • மேற்கண்ட தகவலை சமயநல்லூர் மின்னியல் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    சமயநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட மாணிக்கம்ப்பட்டி துணைமின் நிலையத்தில் உள்ள வலையப்பட்டி மற்றும் எர்ரம்பட்டி பீடர்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    இதன் காரணமாக நாளை (29-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மறவர்பட்டி, சத்திரவெள்ளாளப்பட்டி, வலையப்பட்டி, ராமகவுண்டன்பட்டி, தெத்தூர், டி.மேட்டுப்பட்டி, சின்னபாலமேடு, சுக்காம்பட்டி, கோணம்பட்டி, சாத்தையார் அணை, எர்ரம்பட்டி, தேவசேரி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும். மேற்கண்ட தகவலை சமயநல்லூர் மின்னியல் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

    • 14 காளைகளை அடக்கி பொதும்பு பிரபாகரன் முதல் இடம் பிடித்தார்
    • 11 காளைகளை அடக்கி சின்னப்பட்டி தமிழரசன் இரண்டாம் இடம் பிடித்தார்

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.

    இதில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் நடக்கும் போட்டிகள் பிரபலமானவை.

    மாட்டு பொங்கலான இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு காலை 7 மணிக்கு தொடங்கி தற்போது நிறைவடைந்தது.

    முதல் இடம் பிடிக்கும் மாடுபிடி வீரருக்கும், காளைக்கும் கார் பரிசாக வழங்கப்படுகிறது. மேலும், பைக், தங்கக்காசு, ஃப்ரிட்ஜ், தொலைக்காட்சி பெட்டி என ஏராளமான பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

    இதில் பொதும்பு பகுதியை சேர்ந்த பிரபாகரன் 14 காளைகளை அடக்கி முதல் இடம் பிடித்தார். 2020, 2021 மற்றும் 2022 ஆகிய வருடங்களிலும் முதலிடம் பிடித்தவர் பிரபாகரன் என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரபாகரனுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

    11 காளைகளை அடக்கி சின்னப்பட்டி தமிழரசன் 2-ஆம் இடத்தில் உள்ளார். அவருக்கு இரு சக்கர வாகனம் பரிசாக கிடைத்தது.

    கொந்தகை பகுதியை சேர்ந்த பாண்டீஸ்வரன் 8 காளைகளை அடக்கி 3-வதாக இடம் பிடித்தார்.

    சிறந்த காளையாக புதுக்கோட்டை ராயவயல் சின்னகருப்பு காளைக்கு முதல் பரிசை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.

    பாலமேடு ஜல்லிக்கட்டில் 42 பேர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

    ×