என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பனை தொழிலாளர்கள்"

    • பனைத் தொழிலாளா்கள் கருத்தரங்கு கூட்டம் அசோகன் தலைமையில் நடைபெற்றது.
    • வங்கியின் உதவியை எப்படி பயன்படுத்திக்கொள்வது என்று ராயப்பன் விளக்கி பேசினார்.

    தூத்துக்குடி:

    பனைத் தொழிலாளா்கள் கருத்தரங்கு கூட்டம் தருவைக்குளம் காமராஜா் நற்பணி மன்ற தலைவா் அசோகன் தலைமையில் நடைபெற்றது. நற்பணி மன்ற பொருளாளா் தேவதிரவியம் முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு பனைத்தொழிலாளா் சங்க பொதுச்செயலாளா் ராயப்பன் கலந்து கொண்டு பேசுகையில், தற்போது பனை தொழிலாளர்கள் வங்கியின் உதவியையும் தமிழக அரசின் உதவியையும், எப்படி பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று விளக்கி பேசினார்.

    தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு பனைத் தொழிலாளா்கள் சங்க தலைவா் குளத்தூா் சுப்பிரமணியபுரம் அாிபாகரன், பனைவாாிய உறுப்பினா் எடிசன், ராஜபாளையம் பனை தொழிலாளர் ஜெயராஜ், தருவை குளம் பனை தொழிலாளர் பிச்சையா ஆகியோர் பனையின் வரலாறு பற்றியும் அதன் பயன்பாடு பற்றியும் பேசினர். மேலும் தமிழக அரசு அறிவித்துள்ள ரேசன் கடையில் சா்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது. ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட காமராஜா் நற்பணி மன்ற தலைவா் லாரன்ஸ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • விவசாயிகள், பனை தொழிலாளர்கள் பயன்பெறலாம்.
    • tnhorticulture.gov.in இணையதளத்தில் முன்பதிவு செய்தோ பயன்பெறலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் பனைமரங்கள் வளர்ப்ப தற்கு ஏற்ற மண் வளமும், காலநிலையும் உள்ளது. பனைமரத்தின் பரப்பினை அதிகரிக்கும் வகையில் விவசாயிகள் தங்கள் வயலின் வரப்புகளிலும், வயல் ஓரங்களிலும் நடவு செய்து பயன்பெறலாம். இதற்காக தமிழ்நாடு பனை மேம்பாட்டு இயக்க திட்டத்தின் கீழ் தோட்டக் கலை துறை மூலம் 48 ஆயிரம் பனை விதைகளும், 250 பனை கன்றுகளும் முழு மானிய விலையில் வழங்கப்பட உள்ளது.

    பனைமரம் வைத்தி ருக்கும் விவசாயிகளில் தொடக்க பனை வெல்ல கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக உள்ள விவசாயிகளுக்கு பனை பொருட்கள் தயாரிக்கும் கூடாரம் அமைப்பதற்காக 50 சதவீதம் மானியத்தில் ஒரு அலகிற்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

    பனைமரம் ஏறுவதற்கான உரிமம் வைத்துள்ள பனை தொழிலாளர்களுக்கு பனைமரம் ஏறுவதற்கும், அறுவடை செய்வதற்கும் உகந்த உபகரணங்கள் 75 சதவீதம் மானியத்தில் ஒரு அலகிற்கு ரூ.4 ஆயிரத்து 500-ம் வழங்கப்பட உள்ளது.

    எனவே விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பனை சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் மற்றும் பனை சார்ந்த தொழிலாளர்கள், இத்திட்டத்தில் பயன்பெற அருகில் உள்ள தோட்டக் கலை உதவி இயக்குநர் அலுவலகத்தையோ, உழவன் செயலி, tnhorticulture.gov.in இணையதளத்தில் முன்பதிவு செய்தோ பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×