என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மாடு திருட்டு"
- கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ வைரல்
- பேட்டரியையும் திருடி சென்றனர்
வேலூர்:
வேலூர் மாநகரம், காட்பாடி, சித்தூர் பஸ் நிலையம், சத்துவாச்சாரி, பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், விருதம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மாடுகள் சுற்றி திரிகின்றன.
சாலைகளை சுற்றி திரியும் மாடுகளை மர்ம கும்பல் வாகனத்தில் வந்து திருடி செல்வது தொடர்கதையாக உள்ளது. இது குறித்து போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
நள்ளிரவு நேரங்களில் லோடு ஆட்டோவுடன் சுற்றி திரியும் கும்பல், ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இருக்கும் மாடுகளை திருடி சென்று வெளிச்சந்தைகளில் விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலை வேலூர் சத்துவாச்சாரி சாலையில் உள்ள காகிதப்பட்டறை எல்.ஐ.சி. அலுவலகம் எதிரே சாலையில் மாடுகள் படுத்திருந்தன கொண்டிருந்தது.
இதனை ஆட்டோவில் வந்த மர்ம கும்பல்கள் நோட்டமிட்டு மாடுகளை திருடி சென்றது.
இந்த காட்சிகள் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
இதேபோல் வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் உள்ள சோளாபுரி அம்மன் கோவில் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் இருந்து பேட்டரியை மர்ம கும்பல் திருடி சென்றனர்.
பேட்டரி திருடி செல்லும் காட்சிகளும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ள காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- தியாகதுருகத்தில் கோவில் மாடு திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் பஸ் நிலையம் அருகே நஞ்சுண்ட ஞான தேசிக ஈஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமாக 10- க்கும் மாடுகள் உள்ளது. இந்நிலையில் நேற்று காலை மர்ம நபர்கள் கோவிலுக்கு சொந்தமான காளை மாட்டை பிடித்து சென்றுள்ளனர். தகவல் அறிந்து கோவிலில் இருந்தவர்கள் விரைந்து சென்று 3 பேரையும் மடக்கிப்பிடித்தனர். தொடர்ந்து தியாகதுருகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் கள்ளக்குறிச்சி அருகே ரங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த லூர்துசாமி மகன் பவுன்ராஜ் (வயது 27), இருதரராஜ் மகன் ஜான் எடிசன் (36), அருள்தாஸ் மகன் டோமிக் சேவியர் (32) என்பதும் இவர்கள் மாட்டை திருடி சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து கோவில் நிர்வாகி வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் பவுன்ராஜ், ஜான் எடிசன், டோமிக் சேவியர் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
- மாடுகளை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்
- மாட்டு சந்தையில் சிக்கிய வாலிபரை சந்தேகத்தின் பேரில் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடி லத்தேரி குடியாத்தம் பணமடங்கியில் உள்ளிட்ட ஆந்திர மாநில எல்லைகளில் உள்ள கிராமங்களில் அடிக்கடி மாடுகள் திருடு போய் வருகிறது.
இது குறித்து அந்தந்த பகுதிக்குட்பட்ட போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
நள்ளிரவு நேரங்களில் லோடு ஆட்டோவுடன் சுற்றி திரியும் கும்பல் கிராமப்புற பகுதிகளில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கட்டி வைக்கப்படும் மாடுகளை அவிழ்த்து சென்று ஆந்திர மாநில சந்தேகங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பனமடங்கி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்த சில விவசாயிகள் ஆந்திர மாநிலம் பலமநேரில் நடைபெற்ற மாட்டு சந்தையில் மாடு வாங்க சென்றனர்.
அப்போது பனமடங்கியில் திருடு போன மாடுகள் அங்கு விற்பனைக்கு நிறுத்தி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து விவசாயிகள் பனமடங்கி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் பலமனேர் மாட்டுச்சந்தைக்கு சென்றனர்.
அங்கு மாடுகளை விற்பனைக்கு வைத்திருந்த கும்பல் மாடுகளை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
ஒரு வாலிபர் மட்டும் போலீசாரிடம் சிக்கினார். திருடு போன 4 மாடுகளில் 3 மாடுகளை போலீசார் மீட்டனர். மாட்டு சந்தையில் சிக்கிய வாலிபரை சந்தேகத்தின் பேரில் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையின் முடிவில் மாடு திருடும் கும்பல் யார் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
- மூன்று மாடுகளையும் போலீசார் மீட்டு காவல் நிலையம் கொண்டு வந்தனர்.
- தலைமறைவான ஒருவரை போரீசார் தேடி வருகின்றனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், வெங்கல் அருகே உள்ள பாஷிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபாலன். விவசாயி. இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு இவரது வீட்டில் இருந்த மூன்று மாடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து இன்று காலை பூபாலன் வெங்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்தனர்.
இதில், சோழவரம் ஒன்றியம், விச்சூர் கிராமம், செம்பியம் பகுதியைச் சேர்ந்தவர்களான சூர்யா(வயது25), மணிகண்டன் என்ற மணி(வயது20) ஆகியோர் தங்களது நண்பருடன் மாடுகளை திருடியதை ஒப்புக்கொண்டனர். அவர்கள் இருவரையும் கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். மேலும், அவர்கள் கொடுத்த தகவலின்படி மூன்று மாடுகளையும் போலீசார் மீட்டு காவல் நிலையம் கொண்டு வந்தனர்.
குற்றவாளிகள் இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து திருவள்ளூர் முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ரேட் முன்னிலையில் ஆஜர் செய்து இன்று இரவு புழல் சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவான ஒருவரை வலை வீசி தேடி வருகின்றனர்.
- மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று மீண்டும் மாட்டுக் கொட்டைகையில் மாடு களை கட்டிவிட்டு இரவு தூங்கச் சென்றார்.
- சதீஷ் உள்பட 3 பேர் இரவோடு இரவாக திருடி சென்றதை ஒப்புக் கொண்டார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர் அருகே நெடு மானூர் பகுதியைச் சேர்ந்த வர் கோவிந்தராஜ். இவரது மனைவி கமலக்கோடி (வயது 48). விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் வீட்டின் பின்புறம் மாட்டு கொட்டகை அமைத்து மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று வழக்கம்போல் மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று மீண்டும் மாட்டுக் கொட்டைகையில் மாடு களை கட்டிவிட்டு இரவு தூங்கச் சென்றார். இன்று காலை கமல கொடி எழுந்து சென்று பார்த்த போது மாட்டு கொட்டையிலிருந்த மாடுகளில் பசுமாடு ஒன்று காணாமல் போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே கமலகொடி பசு மாட்டை பல்வேறு இடங்க ளில் தேடிப் பார்த்தார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து கமலக்கொடி எலவனாசூர் போலீஸ் நிலை யத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் எலவனாசூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் வழக்கு பதிவு செய்து மாட்டை திருடி சென்ற மர்ம கும்பலை தேடிவந்தார். இந்நிலையில் பரிந்தன் பகுதியில் ஏரிக்கரை தெருவில் உள்ள ஒரு வீட்டில் காணாமல் போன மாடு கட்டி வைக்கப்பட்டிருந்தது. உடனே போலீசார் அந்த வீட்டிற்கு சென்று வீட்டிலிருந்த சதீஷ் (27) என்பவரிடம் விசாரித்த போது கமலக்கொடியின் மாட்டை சதீஷ் உள்பட 3 பேர் இரவோடு இரவாக திருடி சென்றதை ஒப்புக் கொண்டார். உடனே மாட்டை பறிமுதல் செய்த போலீசார் சதீஷை கைது செய்தனர். மேலும் இந்த திருட்டில் ஈடுபட்டு தலைமறைவாக இருக்கும் 2 பேரை போலீ சார் வலை வீசி தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்