என் மலர்
நீங்கள் தேடியது "முள்ளம்பன்றி"
- உசிலம்பட்டி பகுதியில் முள்ளம்பன்றியை பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- பேரையூர் ரோட்டில் கடந்த சில நாட்களாக முள்ளம்பன்றி சுற்றித் திரிந்து வந்தது.
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள பேரையூர் ரோட்டில் கடந்த சில நாட்களாக முள்ளம்பன்றி சுற்றித் திரிந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு குடியிருப்பு பகுதிகளுக்குள் முள்ளம்பன்றி புகுந்தது. இதைப்பார்த்த அந்தப்பகுதி மக்கள் பீதியடைந்தனர்.
உடனே இதுகுறித் து உசிலம்பட்டி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்குள் திருவள்ளுவர் நகரில் முள்ளம்பன்றியை பார்க்க கூட்டம் கூடியது. இதனால் முள்ளம்பன்றி அங்கிருந்து கால்வாய்க்குள் இறங்கி மாயமானது.
சிறிது நேரத்தில் அங்கு வந்த வனத்துறை அதிகாரி பென்சியோ தலைமை யிலான வன குழுவினர் முள்ளம்பன்றியை தேடி பார்த்தனர். ஆனால் பிடிபடவில்லை. இன்று காலையும் தேடுதல் வேட்டை நடந்தது. ஆனால் இதுவரை சிக்கவில்லை.
முள்ளம்பன்றியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
- முள்ளம்பன்றி வேட்டையாடுவதாக நாகர்கோவிலில் உள்ள மாவட்ட வன அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது.
- கைது செய்யப்பட்ட 5 பேரில் 3 பேர் வழக்கறிஞர்கள் ஆவார்கள்.
நாகர்கோவில் :
ஆரல்வாய்மொழி அருகே தெற்கு கருங்குளம் பகுதியில் முள்ளம்பன்றி வேட்டையாடுவதாக நாகர்கோவிலில் உள்ள மாவட்ட வன அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது.
பூதப்பாண்டி வன அதிகாரிகள் தெற்கு கருங்குளம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டி ருந்த 2 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து நாட்டு துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து மேலும் 3 பேரை வனத்துறை யினர் பிடித்தனர். அவர்களிடம் இருந்து கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பறி முதல் செய்யப்பட்டது. பிடிபட்ட 5 பேர் மீதும் வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்த னர்.
கைது செய்யப்பட்ட 5 பேரில் 3 பேர் வழக்கறிஞர்கள் ஆவார்கள். கைது செய்யப்பட்ட 2 பேர் ஜெயிலில் அடைக்கப்பட்ட நிலையில் வழக்கறிஞர்கள் 3 பேரும் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளனர்.
வக்கீல்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் வக்கீல் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். வக்கீல் சங்க தலைவர் பால ஜனாதிபதி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். அவர்கள் திடீரென கோர்ட் வளாகத்தின் முன்பு சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட் டது.
போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் சிறிது நேரத்தில் அங்கிருந்து கலைந்து சென்றனர். இது குறித்து கோட்டார் சப்-இன்ஸ்பெக்டர் சாமுவேல் கொடுத்த புகாரின் பேரில் வக்கீல் சங்க தலைவர் பால ஜனாதிபதி, வக்கீல்கள் சரவணன், மரிய ஸ்டீபன், சோமசுந்தரம், பாலாஜி உள்பட 60 பேர் மீது கோட்டார் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.