search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூப்பிரண்டு ஆய்வு"

    • போலீஸ் நிலையம் மற்றும் அதன் வளாகம் சுகாதாரமாக இருக்கிறதா என்றும் பார்வையிட்டார்.
    • நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை கேட்டறிந்து வழக்குகளை விரைந்து முடிக்கும்படி அறிவுறுத்தினார்

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த வடபொன்பரப்பி போலீஸ் நிலையத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அலுவலக கோப்புகள் மற்றும் பதிவேடுகள் சரியாக பராமரிக்கப்பட்டு வருகிறதா என்றும் போலீஸ் நிலையம் மற்றும் அதன் வளாகம் சுகாதாரமாக இருக்கிறதா என்றும் பார்வையிட்டார். மேலும் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை கேட்டறிந்து வழக்குகளை விரைந்து முடிக்கும்படி அறிவுறுத்தினார். ஆய்வின்போது சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

    • வழக்கு குறித்த பதிவேடுகளை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் ஆய்வு செய்தார்.
    • கொள்ளையடித்த சம்பவம் குறித்தும் போலீசாரிடம் கேட்டறிந்தார்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக சென்னிமலை போலீஸ் நிலையத்திற்கு வந்தார்.

    அவரை பெருந்துறை டி.எஸ்.பி. ஜெயபால், சென்னி மலை போலீஸ் இன்ஸ்பெ க்டர் சரவணன் மற்றும் சப்-இன்ஸ்பெ க்டர்கள், போலீ சார்கள் வரவே ற்றனர்.

    இதனை யடுத்து போலீஸ் நிலையத்தில் உள்ள வழக்கு குறித்த பதிவேடுகளை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் ஆய்வு செய்தார்.

    அப்போது கடந்த 3 தினங்க ளுக்கு முன்பு ஈங்கூரில் தனியார் நிறுவன ஊழியரை கடத்தி சென்று ரூ.23 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்தும் போலீசாரிடம் கேட்டறி ந்தார்.

    அதேபோல் சென்னி மலை அருகே உப்பிலி பாளையம் பகுதியில் உள்ள தோட்டத்தில் வீட்டு வாசலில் தூங்கி கொண்டி ருந்த விவசாயி மற்றும் அவரது மனைவி ஆகி யோரை மர்ம நபர்கள் தாக்கி நகைகளை கொ ள்ளை யடித்து சென்றனர்.

    இதில் விவசாயி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இந்த கொலை யாளிகள் குறித்து ஒரு வருடம் ஆகியும் போலீசா ருக்கு இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    அதனால் சம்பவம் நடந்த இடத்திற்கும் போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் நேரில் சென்று பார்வை யிட்டார்.

    • பதிவேடுகள் சோதனை
    • போலீசார் துடிப்புடன் செயல்பட வலியுறுத்தல்

    நெமிலி:

    அரக்கோணம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு யாதவ்கிரிஷ் அசோக் நெமிலி போலீஸ் நிலையத்துக்கு திடீரென வருகை தந்தார். அப்போது அங்குள்ள பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும், போலீசார் துடிப்புடன் செயல்பட வேண்டும், எனக் கேட்டுக்கொண்டார்.

    ஆய்வின்போது இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ் பெக்டர்கள் சிரஞ்சீவிலு, ஜெயராஜ் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

    • ஜல்லிக்கட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு நடத்தினார்.
    • உலகப்புகழ்பெற்ற பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வருகிற 16 மற்றும் 17-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.

    அலங்காநல்லூர்

    உலகப்புகழ்பெற்ற பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வருகிற 16 மற்றும் 17-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.ஜல்லிக்கட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் இன்று அலங்காநல்லூர் வாடிவாசலை பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது டி.எஸ்.பி பாலசுந்தரம், அலங்காநல்லூர் காவல் ஆய்வாளர் சங்கர் கண்ணன் மற்றும் விழா குழுவினர், போலீசார் கலந்து கொண்டனர்.

    ஜல்லிக்கட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள், பார்வையாளர் கேலரி அமைப்பது, காளைகள் நிறுத்தப்படும் இடம், காளைகள் வந்து சேரும் இடம், வாடி வாசல் உள்ளிட்ட இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து போலீஸ் சூப்பிரண்டு பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைதொடர்ந்து பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதிகளையும் போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    • அதிகாரிகளிடம் அளித்த மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மனுதாரர்களை நேரில் அழைத்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
    • 21 நபர்களின் மனுக்களை மீண்டும் மறு விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மந்தவெளி அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பொதுமக்கள் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் அளித்த மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மனுதாரர்களை நேரில் அழைத்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 19 சட்டம் ஒழுங்கு போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே மனு அளித்து விசாரணை நடத்தி முடிக்கப்பட்ட சுமார் 80 நபர்கள் கலந்து கொண்டனர்.

    அவர்களிடம் சட்டம் ஒழுங்கு, நில அபகரிப்பு மற்றும் பணமோசடி, தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் அளித்த மனு மீது உரிய முறையில் விசாரணை நடத்தப்பட்டதா, மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளதா என்பன போன்ற பல்வேறு விபரங்களை போலீஸ் சூப்பிரண்டு பகலவன் கேட்டறிந்தார். தொடர்ந்து சுமார் 21 நபர்களின் மனுக்களை மீண்டும் மறு விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டார். அப்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஜவஹர்லால், விஜய் கார்த்திக் ராஜா, கள்ளக்குறிச்சி உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்ரமணியன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு திருமேனி, மது விலக்கு அமலாக்க பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.

    ×