என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ரோஜாப்பூ"
- பள்ளிக்கு உற்சாகமாக வந்த மாணவ-மாணவிகள்
- ரோஜாப்பூ கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர்
நாகர்கோவில் :
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு 6 முதல் பிளஸ்-2 வரையிலான வகுப்புகள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று 1 முதல் முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் திறக்கப்பட்டது.
குமரி மாவட்டத்திலும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் என 554 பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. கோடை விடு முறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து மாணவ-மாணவிகள் காலையிலேயே பள்ளிகளுக்கு புறப்பட்டு வந்தனர்.
பெரும்பாலான மாணவ-மாணவிகளை, அவர்களது பெற்றோர் இரு சக்கர வாகனங்களில் அழைத்து வந்தனர். அவர்களது கை பிடித்து குழந்தைகள் அழகுற நடந்து வந்தனர். சில மாணவ-மாணவிகள் அரசு பஸ்களில் வந்தனர். முதல் நாளான இன்று மாணவ-மாணவிகள் சீருடை அணிந்து பள்ளிக்கு வந்திருந்தனர். 1-ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளை பெற்றோர் முதல் நாளான இன்று பள்ளிக்கூடத்திற்கு அழைத்து வந்தனர்.
முதல் வகுப்பிற்கு வரும் தங்கையை, அவரது சகோதரிகள் கையைப் பிடித்து பள்ளிக்கூடத்திற்கு அழைத்து வந்தது பரவசம் ஊட்டியது. நாகர்கோவில் கவிமணி பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளை, ஆசிரியர்கள் ரோஜா பூக்கள் கொடுத்து வரவேற்றனர்.
பின்னர் மாணவ-மாணவிகளை அவர்கள் வகுப்பறைக்கு அழைத்துச் சென்றனர். இதே போல் நாகர்கோவில் எஸ்.எல்.பி பள்ளி உள்பட அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவ மாணவிகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆசிரிய- ஆசிரியைகள் மாணவ-மாணவிகளை வரவேற்று வகுப்பறைகளுக்கு அழைத்து சென்றனர்.
கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிக்கு வந்த அவர்கள் உற்சாகமாக வகுப்பறைகளுக்கு சென்றனர். அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு புத்தகங்களை இன்றே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து நாகர்கோவில் நகரப் பகுதியில் காலை நேரத்தில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. அண்ணா பஸ் நிலையம், வடசேரி பஸ் நிலையங்கள் பரபரப்பாக காணப்பட்டது. இரணியல், மார்த்தாண்டம், குளச்சல், களியக்காவிளை உட்பட அனைத்து பகுதிகளிலும் பள்ளிகள் திறக்கப்பட் டது. மாணவ-மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு சீருடையுடன் வந்திருந்தனர்.
- போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவது குறித்தும் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
- போக்குவரத்து போலீசார் லட்சுமி மில்ஸ் சிக்னலில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வந்தனர்.
கோவை,
கோவை மாநகர போக்குவரத்து போலீசார் சார்பில் சாலைகளில் பாதுகாப்பாக வாகனங்கள் ஓட்டுவது குறித்தும், போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவது குறித்தும் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் மாநகரில் உள்ள முக்கிய சிக்னல்களில் ஒலிபெருக்கி மூலமாகவும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவது குறித்து அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு மாநகர உதவி கமிஷனர் சதீஷ்குமார் தலைமையிலான போக்குவரத்து போலீசார் லட்சுமி மில்ஸ் சிக்னலில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வந்தனர்.
அப்போது நள்ளிரவு 12 மணி வரை லட்சுமி மில்ஸ் சிக்னலில் உள்ள சிக்னல் இயக்கப்பட்டது. அப்போது சிக்னலை மதித்து போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றிய வாகன ஓட்டிகளை உதவி கமிஷனர் சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் பாராட்டி ரோசாப்பூ வழங்கினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்