என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அமைச்சர் மா. சுப்பிரமணியன்"
- 1021 மருத்துவர்கள், 983 மருந்தாளுனர்கள், 1066 சுகாதார ஆய்வாளர்கள் பணியில் அமர்த்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
- பணியிடங்களை பொறுத்தவரை தேர்வு செய்யும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தொண்டராம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் வட்டார பொது சுகாதார ஆய்வகத்தை இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் திறந்து வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-
மக்களை தேடி மருத்துவம் மூலம் தற்போது வரை ஒரு கோடியே 60 ஆயிரம் பேர் பயன் பெற்றிருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் மருத்துவத் துறையில் காலி பணியிடங்கள் உள்ளது. இதில் எம்.ஆர்.பி மூலம் 1021 மருத்துவர்கள், 983 மருந்தாளுனர்கள், 1066 சுகாதார ஆய்வாளர்கள் பணியில் அமர்த்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
பணியிடங்களை பொறுத்தவரை தேர்வு செய்யும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த வாரமே பணியாணை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் 14 மருத்துவர்கள் உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்கள். அந்த மருத்துவர்களின் கோரிக்கையை தமிழக முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று சுமூக முடிவு எடுக்கப்பட்டு விரைந்து மருத்துவ பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆஸ்பத்திரி வேலை முடிந்துவிட்டது என்று மத்திய அரசு கூறுவது சரியானது இல்லை.
- ஆண்டுக்கு 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பேர் வரை புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள்.
சென்னை:
சென்னை சைதாப்பேட்டை திவான் பாஷ்யம் தெருவில் உணவு சமைக்கும் கூடத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த 5 பேர் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து, அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். அப்போது, மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர்.சாந்திமலர், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர். அனிதா ஆகியோர் உடன் இருந்தனர். இதைத்தொடர்ந்து, மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:
சென்னை சைதாப்பேட்டையில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் செயற்கையாக நடைபெற்ற சம்பவம். இதில் 2 பேருக்கு 2 சதவீதம், 2 பேருக்கு 40 சதவீதம், ஒருவருக்கு 32 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 5 பேரையும் காப்பாற்ற டாக்டர்கள் தீவிரமாக போராடி வருகிறார்கள். சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும், 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி மதுரைக்கு நேரடியாக வந்து எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது, அ.தி.மு.க. அரசு கட்டுமானப் பணிக்கு 200 ஏக்கர் நிலத்தை வழங்கியது. மத்திய அரசு கூடுதலாக 22 ஏக்கர் நிலம் கேட்டார்கள். அந்த நிலமும் வழங்கப்பட்டுவிட்டது. ஆனால், நாடாளுமன்றத்தில் நிலம் வழங்க தாமதம் ஏற்பட்டதால் தான் கட்டுமானப் பணிகள் முடிக்கப்படவில்லை என்று மத்திய மந்திரி கூறியுள்ளது ஏற்கக்கூடியது இல்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரியை விரைவில் கட்டி முடிக்கவேண்டும் என்று பிரதமரிடம் நேரிலும், கடிதம் மூலமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இதேபோல, கோயம்புத்தூரிலும் புதிய எய்ம்ஸ் ஆஸ்பத்திரியை கட்டவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.
மதுரையை தவிர்த்து மற்ற மாநிலங்களுக்கு எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைக்க மத்திய அரசு நிதி வழங்கியது. ஆனால், தமிழகத்துக்கு மட்டும் ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனம் நிதி ஆதாரம் வழங்கும் என்று சொன்னார்கள். கடந்த வாரம் நான் ஜப்பான் சென்றபோது ஜைக்கா நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொண்டேன். அப்போது, மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கான நிதியை விரைந்து வழங்க வேண்டும் என்றோம். கூட்டத்தில், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் 2024-ம் ஆண்டு இறுதியில் தொடங்கி 2028-ம் ஆண்டு இறுதியில் தான் முடியும் என்று கூறியுள்ளார்கள். இது தான் உண்மை நிலவரம். ஆஸ்பத்திரி வேலை முடிந்துவிட்டது என்று மத்திய அரசு கூறுவது சரியானது இல்லை.
இதேபோல, ஆண்டுக்கு 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பேர் வரை புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். சுற்றுச்சூழலால் ஏற்படும் புற்றுநோய் பாதிப்புகளை தடுக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
- உடற்பயிற்சியில் தீவிர கவனம் செலுத்தி வரும் இவர் தினமும் ஓட்டம் மற்றும் நடைபயிற்சிகள் செய்ய தவறுவது இல்லை.
- 140-க்கும் மேற்பட்ட மாரத்தான் ஓட்டத்திலும் பங்கேற்று சாதனை படைத்துள்ளார்.
சென்னை:
புத்தாண்டில் ஒவ்வொரு வரும் ஏதாவது ஒரு சபதம் எடுத்துக் கொள்வார்கள்.
அந்த வகையில் இந்த 2023 புத்தாண்டில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வித்தியாசமான உறுதி மொழியை ஏற்றுள்ளாார்.
உடற்பயிற்சியில் தீவிர கவனம் செலுத்தி வரும் இவர் தினமும் ஓட்டம் மற்றும் நடைபயிற்சிகள் செய்ய தவறுவது இல்லை. 140-க்கும் மேற்பட்ட மாரத்தான் ஓட்டத்திலும் பங்கேற்று சாதனை படைத்துள்ளார்.
அந்த வகையில் இந்த ஆண்டை இளைஞர்களிடையே உடற்பயிற்சியை ஊக்கப்படுத்தி விழிப்புணர்வை ஊட்டும் வகையிலும் தனது உடல்நலத்தில் அக்கறை எடுத்து கொள்ளும் வகையிலும் ஆண்டு முழுவதும் குறிப்பிட்ட நேரத்தை ஓட்டம் மற்றும் நடைபயிற்சிக்காக ஒதுக்குகிறார்.
ஆண்டுக்கு 365 நாட்கள். தினமும் 24 மணி வீதம் மொத்தம் 8 ஆயிரத்து 760 மணி நேரம் உள்ளது. இதில் 500 மணி நேரத்தை ஓடுவதற்கும், நடப்பதற்குமாக ஒதுக்க முடிவு செய்த உறுதியேற்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க தேவையான தடுப்பு நடவடிக்கைகளும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
- சென்னை, கோவை , மதுரை, திருச்சி உள்ளிட்ட விமான நிலையங்களிலும் ரேண்டம் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை:
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது:
கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க தேவையான அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களுக்கு சீனா, ஜப்பான், ஹாங்காங், தைவான் போன்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு 100% ஆர் டி பி சி ஆர் பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும் சென்னை, கோவை , மதுரை, திருச்சி உள்ளிட்ட பன்னாட்டு விமான நிலையங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ரேண்டம் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது. என கூறினார்.
- கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பிருந்து தொடங்கிய மினி மாரத்தான் போட்டியை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
- மாரத்தான் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன.
நாகர்கோவில்:
பழையாற்றை பாதுகாக்க வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி இன்று கன்னியாகுமரி முதல் நாகர்கோவில் வரை 21 கிலோமீட்டர் தூரம் நடந்தது.
கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பிருந்து தொடங்கிய மினி மாரத்தான் போட்டியை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மனோ தங்கராஜ், டி.ஜி.பி. சைலேந்திரபாபு, கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து தொடங்கிய மினி மாரத்தானில் பங்கேற்றனர்.
மணக்குடி, புத்தளம், தெங்கம்புதூர், கோட்டார், சந்திப்பு, அண்ணா பஸ் நிலையம் வழியாக நாகர் கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் முடிவடைந்தது. அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், மனோ தங்கராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ஹரிகிரண் பிரசாத், சரவணன் ஆகியோர் 21 கிலோ மீட்டர் தூரத்தையும் ஓடி வந்தனர். 21 கிலோமீட்டர் தூரத்தை கர்நாடகாவைச் சேர்ந்த பரசப்பா கலிடா 1 மணி நேரம் 9 நிமிடம் 26 வினாடிகளில் கடந்து முதல் பரிசை பெற்றார். முதல் பரிசாக இவருக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.
கேரளாவைச் சேர்ந்த ஜெகநாதன் 1 மணி நேரம் 9 நிமிடம் 59 வினாடிகளில் கடந்து இரண்டாவது பரிசை தட்டி சென்றார். இவருக்கு ரூ.15 ஆயிரம் ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. கோவையைச் சேர்ந்த வினோத் 1 மணி நேரம் 13 நிமிடம் 53 வினாடிகளில் கடந்து மூன்றாம் பரிசை பெற்றார்.
இவருக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசும் சான்றிதழ்களும், மெட்டலும் வழங்கப்பட்டது. 21 கிலோ மீட்டர் பெண்களுக்கான பிரிவில் சமீதா முதல் பரிசு பெற்றார். இவர் 2 மணி நேரம் 37 நிமிடம் 42 வினாடிகளில் 21 கிலோ மீட்டரை கடந்தார். இவருக்கு ரூ. 25 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. 2-வது பரிசை அஸ்வினி தட்டி சென்றார். இவர் 2 மணி நேரம் 50 நிமிடம் 43 வினாடிகளில் கடந்தார். இவருக்கு ரூ. 15,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. 3-வது பரிசை தீபா பெற்றார். இவர் 3 மணி நேரம் 7 நிமிடம் 11 வினாடிகளில் கடந்தார். இவருக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப் பணம் வழங்கப்பட்டது. ஆண்களுக்கு 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான பிரிவில் ராமசாமி 1 மணி நேரம் 42 நிமிடம் 42 வினாடிகளில் கடந்து முதல் பரிசு பெற்றார். இவருக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. மாரப்பன் 1 மணி நேரம் 44 நிமிடம் 26 வினாடிகள் கடந்து 2-வது பரிசை தட்டி சென்றார். இவருக்கு ரூ.7 ஆயிரம் வழங்கப்பட்டது. டிக்ஸன் 1மணி நேரம் 47 நிமிடம் 11 வினாடிகள் கடந்து மூன்றாம் பரிசை தட்டி சென்றார். இவருக்கு ரூ.5 ஆயிரம் பரிசு வழங் கப்பட்டது.
10 கிலோமீட்டர் ஆண்களுக்கான மினி மாரத்தான் போட்டியில் தினேஷ் முதல் பரிசும், ஆனந்த அசோக் 2-ம் பரிசும், நிதீஷ்குமார் 3-ம் பரிசும் பெண்களுக்கான 10 கிலோ மீட்டர் போட்டியில் கிரிஸ்டல் முதல் பரிசும், கவுசிகா 2-வது பரிசும், அடினா ஆர்தார் 3-வது பரிசும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசும் சான்றிதழ்களும், மெட்டல்களும் வழங்கப்பட் டது.
இதை தொடர்ந்து மாரத்தான் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை மாரத்தான் ஒருங்கிணைப்புச் செயலாளர் டாக்டர் தேவா பிரசாத் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று பங்கேற்ற மினி மாரத்தான் போட்டி அவரது 138- வது போட்டி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்