என் மலர்
நீங்கள் தேடியது "கிறிஸ்துமஸ் விருந்து"
- நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் கிறிஸ்துமஸ் விருந்து வழங்கப்பட்டது.
- விருந்தில் நாலுமாவடி சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
குரும்பூர்:
நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் சுற்று வட்டார கிராமத்திலுள்ள 2 ஆயிரம் பேருக்கு கிறிஸ்துமஸ் விருந்து வழங்கப்பட்டது.
நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் மூலம் தேவனுடைய கூடாரத்தில் ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாலுமாவடி சுற்று வட்டார கிராம மக்களுக்கு கிறிஸ்துமஸ் விருந்து வழங்குவது வழக்கம். அதேபோல் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நேற்றும் கிறிஸ்துமஸ் விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி.லாசரஸ் தலைமை தாங்கி விருந்து வழங்கும் நிகழ்ச்சி யை தொடங்கி வைத்தார்.
இதில் நாலுமாவடி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவன பொது மேலாளர் செல்வகுமார் தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
- மத்திய மந்திரி வீட்டில் நடந்த கிறிஸ்துமஸ் பண்டிகை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
- கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த முக்கிய நபர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினேன் என்றார்.
புதுடெல்லி:
கிறிஸ்தவ மதத்தினரின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் உலகம் முழுவதும் வரும் 25-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இதற்காக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மதத்தினர் தயாராகி வருகின்றனர். இந்தியாவிலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் மத்திய மந்திரி ஜார்ஜ் குரியன் வீட்டில் நேற்று இரவு கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், மத்திய மந்திரி ஜார்ஜ் குரியன் வீட்டில் நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த முக்கிய நபர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினேன் என பதிவிட்டுள்ளார்.