search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாய அணி"

    • எம்.பி. தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
    • விவசாய அணி காமாட்சி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், கேட்டுகடையில் அ.தி.மு.க. சார்பில் 2024 பாராளுமன்ற தேர்தல் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    ஒன்றிய செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். நகர் செயலாளர் அழகுராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம், கருப்பையா, மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் அரியூர் ராதாகிருஷ்ணன், பாசறை மாவட்ட இணை செயலாளர் உமேஷ் சந்தர், மகளிரணி மாவட்ட செயலாளர் லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், வர இருக்கும் 2024 பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். தி.மு.க. பொய் வாக்குறுதிகளை கொடுத்து அதை நிறை வேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது. வருகிற தேர்தலில் தி.மு.க.விற்கு வாக்காளர்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் அவைத்தலைவர் பால கிருஷ்ணன், ஒன்றிய துணைச்செயலாளர் சம்பத், மகளிரணி செயலாளர் லதா, எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட இணை செய லாளர் ஜெயச்சந்திர மணியன், ஒன்றிய கவுன்சிலர் ரேவதி, பேரூ ராட்சி கவுன்சிலர் நாட்டாமை சுந்தர், விவசாய அணி காமாட்சி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

    • இன்று நாகர்கோவிலில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது.
    • முன்னதாக விவசாயிகள் அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட தி.மு.க. விவசாய அணி நிர்வாகிகள் நேர்காணல் இன்று நாகர்கோவிலில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது. விவசாய அணி அமைப்பாளரும், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியுமான விஜயன், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் மேயருமான மகேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் ரெமோன் மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    முன்னதாக நடந்த விவசாயிகள் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் கேட்சன், துணைச் செயலா ளர் பூதலிங்கம், மாநகரச் செயலாளர் ஆனந்த், ஒன்றிய செயலாளர் சுரேந்திர குமார், பிராங்க்ளின், மதியழ கன், லிவிங்ஸ்டன், தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவம், தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் இ. என். சங்கர் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • தருமபுரி கலெக்டர் அலுவலகம் அருகே பா.ஜ.க. விவசாய அணி மாவட்ட தலைவர் வெற்றி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • கண்டன ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    தருமபுரி:

    தமிழக அரசு ரேஷன் கடை அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை மற்றும் ஆயிரம் ரூபாய் சேர்த்து வழங்கப்படும் என அறிவித்திருந்தது.

    இதனை கண்டித்து இன்று தருமபுரி கலெக்டர் அலுவலகம் அருகே பா.ஜ.க. விவசாய அணி மாவட்ட தலைவர் வெற்றி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் வெல்லம், கரும்பு, தேங்காய் உள்ளிட்டவைகளை சேர்த்து பொங்கல் தொகுப்பாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இதே போல் கிருஷ்ணகிரியிலும் பா.ஜ.க. விவசாய அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

    ×