search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொப்பரை விற்பனை"

    • சேலம் மாவட்டம் ஓமலூரில் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது.
    • கொப்பரை ஏலத்திற்கு மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்துள்ள விற்பனை கூடத்தில் வாரத்திற்கு 2 நாட்கள் கொப்பரை ஏலம் நடத்தப்படுகிறது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூரில் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. குறுகிய காலத்தில் கொப்பரை ஏலத்திற்கு மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்துள்ள விற்பனை கூடத்தில் வாரத்திற்கு 2 நாட்கள் கொப்பரை ஏலம் நடத்தப்படுகிறது. நேற்று 19 விவசாயிகள் உற்பத்தி செய்த 191 மூட்டை கொப்பரை பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் சுமார் 52 வகையான எண்ணெய் பிழிதிறன் கொண்ட 84 குவிண்டால் கொப்பரை பருப்புகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. தேசிய அளவில் நடைபெற்ற மின்னணு ஏலத்தில் 3 வியாபாரிகள் கலந்துகொண்டு 6 லட்சத்து 20 ஆயிரத்து 532 ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தனர். இதில் பருப்பின் தரத்தை பொருத்து, அதிகபட்ச விலையாக ரூ.77.77 காசுக்கும், குறைந்த விலையாக ரூ.60.75 காசுக்கும், சராசரி விலையாக ரூ.76.75 காசுக்கும் விற்பனையானது. இந்த மையத்தில் அனைத்து விளை பொருட்களையும் இருப்பு வைப்பதற்கான வசதிகள் உள்ளது. இருப்பு வைக்கப்படும் விளை பொருட்களுக்கு கடனுதவியும் வழங்கபடுகிறது. அதனால் இந்த வாய்ப்பை விவசாயிகள் அனைவரும் பயன்படுத்தி பயனடையுமாறு ஒழுங்குமுறை விற்பனை கூட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தி தெரிவித்தார்.

    • மொடக்குறிச்சி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.
    • தேங்காய் மற்றும் கொப்பரை சேர்த்து ரூ.5 லட்சத்து 96 ஆயிரத்து 123-க்கு விற்பனையாகின.

    ஈரோடு:

    மொடக்குறிச்சி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 23 ஆயிரத்து 828 எண்ணிக்கையிலான 9 ஆயி ரத்து 479 கிலோ எடையுள்ள தேங்காய்களை விற்பனை க்கு கொண்டுவந்தனர்.

    இவை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.22.00, அதிகபட்ச விலையாக ரூ.23.91 காசுகள், சராசரி விலையாக ரூ.23.19 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.2 லட்சத்து 16 ஆயிரத்து 348-க்கு விற்பனையாகின.

    இதனையடுத்து நடந்த கொப்பரைக்கான விற்பனையில் 181 மூட்டைகள் கொண்ட 5 ஆயிரத்து 100 கிலோ எடைகொண்ட கொப்பரை விற்பனை யானது.

    விற்பனையான கொப்பரையில் முதல் தர கொப்பரை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.72.60 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.77.98 காசுகள், சராசரி விலையாக ரூ.77.45 காசுகள் என்ற விலைகளிலும்,

    2-ம் தர கொப்பரை குறைந்தபட்ச விலையாக ரூ.56.25 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.73.29 காசுகள், சராசரி விலையாக ரூ.65.60 காசுகள் என்ற விலைகளி்ல் மொத்தம் ரூ.3 லட்சத்து 79 ஆயிரத்து 775-க்கு விற்பனையானது.

    மொத்தம் தேங்காய் மற்றும் கொப்பரை சேர்த்து ரூ.5 லட்சத்து 96 ஆயிரத்து 123-க்கு விற்பனையாகின. 

    • 19 மூட்டை சிவப்பு எள் வரத்து இருந்தது. எடை 1,396 கிலோ. சராசரி விலையாக கிலோ ரூ.136க்கு விற்பனையானது.
    • மொத்தம் 77 விவசாயிகள், 12 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனா்.

    வெள்ளகோவில்:

    வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 6.70 டன் எள், தேங்காய், கொப்பரை விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.

    19 மூட்டை சிவப்பு எள் வரத்து இருந்தது. எடை 1,396 கிலோ. சராசரி விலையாக கிலோ ரூ.136க்கு விற்பனையானது. விற்பனைத் தொகை ரூ. 1.89 லட்சம் ஆகும். 9,489 தேங்காய்கள் வரத்து இருந்தன. எடை 4,288 கிலோ. கிலோ ரூ. 16.75 முதல் ரூ. 20.70 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 20.10 ஆகும். 38 மூட்டைகள் கொப்பரை வரத்து இருந்தது. எடை 1,007 கிலோ. கிலோ ரூ. 55.15 முதல் ரூ. 75.15 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 73.70 ஆகும்.

    மொத்தம் 77 விவசாயிகள், 12 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனா். ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 3.43 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா். 

    • ஒரு கிலோ ரூ. 20.65 முதல் ரூ. 26.60 வரை விற்பனையானது
    • ஏலத்தில் மொத்தம் 56 விவசாயிகள், 8 வியாபாரிகள் கலந்து கொண்டனா்.

    வெள்ளகோவில் :

    முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 3.50 டன் தேங்காய், கொப்பரை விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.இந்த வார ஏலத்துக்கு 2,004 கிலோ எடையிலான தேங்காய் வரத்து இருந்தது. ஒரு கிலோ ரூ. 20.65 முதல் ரூ. 26.60 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 23.55.

    கொப்பரை 1,544 கிலோ வரத்து இருந்தது. ஒரு கிலோ ரூ. 60.10 முதல் ரூ. 81.55 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 80.20.ஏலத்தில் மொத்தம் 56 விவசாயிகள், 8 வியாபாரிகள் கலந்து கொண்டனா். ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 1.67 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா். 

    • சின்ன வெங்காயம் கிலோ ரூ.50க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.30க்கு விற்பனை செய்யப்பட்டது.
    • ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் ஆா்.மாரியப்பன் செய்திருந்தாா்.

    காங்கயம் :

    காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.45 ஆயிரத்துக்கு கொப்பரை விற்பனை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு காங்கயம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 13 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 604 கிலோ.இதில், கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.80.79க்கும், குறைந்தபட்சமாக ரூ.59.10க்கும், சராசரியாக ரூ.73.10க்கும் ஏலம்போனது. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.45 ஆயிரம். ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் ஆா்.மாரியப்பன் செய்திருந்தாா்.

    காங்கயம் பேருந்து நிலையம் அருகே வாரந்தோறும் திங்கள்கிழமை கூடும் வாரச் சந்தையில் காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருள்கள், கீரைகள் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களும் விற்பனை செய்யப்படுகின்றன.இந்நிலையில், திங்கள்கிழமை கூடிய சந்தையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.50க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.30க்கும், தக்காளி கிலோ ரூ.20க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

    • காங்கயம், வெள்ளக்கோவில் பகுதிகளை சோ்ந்த 3 வியாபாரிகள் கொப்பரைகளை வாங்க வந்திருந்தனா்.
    • ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் ஆா்.மாரியப்பன் செய்திருந்தாா். 

    காங்கயம்:

    காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.09 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை திங்கட்கிழமை நடைபெற்றது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு காங்கயம் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த 4 விவசாயிகள் 31 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை1,444 கிலோ.

    காங்கயம், வெள்ளக்கோவில் பகுதிகளை சோ்ந்த 3 வியாபாரிகள் கொப்பரைகளை வாங்க வந்திருந்தனா்.இதில் கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.81க்கும், குறைந்தபட்சமாக ரூ.63க்கும், சராசரியாக ரூ.80க்கும் ஏலம்போனது.ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.1.09 லட்சம். ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் ஆா்.மாரியப்பன் செய்திருந்தாா். 

    ×