search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போப்பாண்டவர்"

    • கன்னியாஸ்திரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
    • ராஜினாமாவை போப்பாண்டவர் ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயம் முள்ளக்கல்லை சேர்ந்தவர் பிராங்கோ முள்ளக்கல். இவர் ஜலந்தர் ஆயராக இருந்தார். அப்போது கன்னியாஸ்திரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. அப்போது இந்த பிரச்சினை கேரளா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் பிராங்கோ முள்ளக்கல் ஜலந்தர் ஆயர் பதவியை ராஜினாமா செய்து விட்டதாக தகவல் வெளியானது. அவரது ராஜினாமாவை போப்பாண்டவர் ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

    பாலியல் புகார் தொடர்பாக அவர் ராஜினாமா செய்யவில்லை என்றும், மறைமாவட்ட நன்மைக்காக ராஜினாமா செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    • கிறிஸ்தவ மத தலைவர்களில் முதன்மையானவர் போப்பாண்டவர்.
    • போப் பிரான்சிஸ் அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு வருகை தருகிறார்.

    வாடிகன்:

    கிறிஸ்தவ மத தலைவர்களில் முதன்மையானவர் போப்பாண்டவர். இந்தியாவுக்கு அடுத்த ஆண்டு சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டருப்பதாக போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, தெற்கு சூடானில் இருந்து ரோம் நகருக்குச் செல்லும் வழியில் போப் பிரான்சிஸ் அடுத்த பயணத்திட்டங்கள் குறித்து பேசினார். அப்போது, வரும் ஆகஸ்ட் மாதம் உலக இளைஞர் தினத்தை முன்னிட்டு போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பன் நகருக்குச் செல்ல உள்ளேன். அதன்பின்னர் மங்கோலியாவுக்கு முதன்முதலாகச் செல்கிறேன். 2024-ம் ஆண்டு இந்தியா வர உள்ளேன் என தெரிவித்தார்.

    பிரதமர் மோடி அழைப்பின் பேரில் 20 ஆண்டுகளுக்கு பிறகு போப்பாண்டவர் இந்தியா வர உள்ளார்.

    ஏற்கனவே 2017-ம் ஆண்டு இந்தியாவுக்கு வரும் போப்பாண்டவரின் திட்டம் கடைசி நேரத்தில் ரத்தானது.

    • ஓய்வுபெற்ற போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட்டின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
    • போப்பாண்டவர் 16ம் பெனடிக் இன்று காலை 9:34 மணிக்கு காலமானார்.

    உலக கத்தோலிக்கர்களின் தலைவராக இருப்பவர் போப் பிரான்சிஸ். இவருக்கு முன்பு போப்பாண்டவராக 16-ம் பெனடிக்ட் இருந்து வந்தார்.உடல் நலக்குறைவு காரணமாக அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

    அதன்பின்பு அவர் வாட்டிகனில் உள்ள குருமடத்தில் தங்கி ஓய்வெடுத்து வந்தார். 95 வயதாகும் அவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    இதற்காக வாடிகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஓய்வுபெற்ற போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட்டின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    இந்நிலையில், போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.

    இதுகுறித்து வாடிகன் செய்தித் தொடர்பாளர் மேட்டியோ புரூனி வெளியிட்டுள்ள அறிக்கையில், "போப்பாண்டவர் 16ம் பெனடிக் இன்று காலை 9:34 மணிக்கு வாட்டிகனில் உள்ள மேட்டர் எக்லேசியா மடாலயத்தில் காலமானார் என்பதை வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தது.

    ×