என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வடகொரியா ஏவுகணை சோதனை"
- வடகொரியா இன்று மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியது.
- கொரியா தீபகற்பத்தில் ஜப்பான் கடல் பகுதியில் அணு ஆயுதம் தாங்கிய போர் கப்பலை நிறுத்த அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது.
பியாங்யாங்:
வடகொரியா அடிக்கடி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை நடத்தி வருகிறது. தென் கொரியாவுடனான மோதல் காரணமாகவும், அமெரிக்கா-தென்கொரியா இணைந்து போர் பயிற்சியில் ஈடுபடுவதற்கு எதிராகவும் இது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த ஆண்டு தொடக்கம் முதலே வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தியது. அமெரிக்கா-தென்கொரியாவின் எச்சரிக்கையை மீறி வடகொரியா சோதனையை நடத்தி வருகிறது.
இந்தநிலையில் வடகொரியா இன்று மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியது. வட கொரியாவின் கிழக்கு கடல் பகுதியில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா ஏவி சோதனை நடத்தியதாக தென் கொரியா தெரிவித்தது.
இந்த ஏவுகணை, ஜப்பான் கடல் பரப்பில் விழுந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தென்கொரியாவின் கூட்டு படைத்தலைவர்கள், இன்று காலை வடகொரியா தனது ஏவுகணையை ஏவியதை உறுதிப்படுத்தினர்.
ஆனால் ஏவுகணை எவ்வளவு தூரம் பறந்தது உள்ளிட்ட கூடுதல் விவரங்களை தெரிவிக்கவில்லை. ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் கூறும்போது, வடகொரியா ஏவுகணையை ஏவியதை கண்டறிந்து உள்ளதாக தெரிவித்தது.
கொரியா தீபகற்பத்தில் ஜப்பான் கடல் பகுதியில் அணு ஆயுதம் தாங்கிய போர் கப்பலை நிறுத்த அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது. இதற்கு வடகொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் தங்களது வான் வெளியில் அமெரிக்க உளவு விமானம் அத்துமீறி நுழைந்ததாக வடகொரியா குற்றம் சாட்டியது. வட கொரியா வான்வெளியில் நுழையும் அமெரிக்கா உளவு விமானங்களை சுட்டு வீழ்த்துவோம் என்றும் எச்சரிக்கை விடுத்தது.
இந்த நிலையில் தான் வடகொரியா இன்று மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தி உள்ளது. இதனால் கொரியா தீப கற்பத்தில் பதற்றம் நிலவுகிறது.
- வடகொரியாவின் கிழக்கு வான்வெளியில் அமெரிக்க உளவு விமானம் இரண்டு முறை அத்துமீறி நுழைந்தது.
- கடந்த காலங்களில் அமெரிக்க விமானங்களை சுட்டு வீழ்த்திய சம்பவங்களை நினைவுப்படுத்துகிறோம்.
பியாங்யாங்:
அமெரிக்கா-வடகொரியா இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. தென்கொரியா-அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதையடுத்து அமெரிக்கா-தென்கொரியா இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
இந்த நிலையில் தங்களது வான்வெளிக்குள் அமெரிக்க உளவு விமானம் அத்து மீறி நுழைந்ததாக வடகொரியா குற்றம் சாட்டியது.
இதுதொடர்பாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் கூறும்போது, வடகொரியாவின் கிழக்கு வான்வெளியில் அமெரிக்க உளவு விமானம் இரண்டு முறை அத்துமீறி நுழைந்தது.
நாட்டின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே அமெரிக்க உளவு நடவடிக்கைகளுக்கு வடகொரியா நேரடியாக பதிலளிக்காது. ஆனால் அமெரிக்க ராணுவம் அதன் கடல்சார் ராணுவ எல்லை கோட்டை தாண்டினால் தீர்மானமான நடவடிக்கை எடுக்கப்படும். மீண்டும் அமெரிக்க உளவு விமானம் ஊடுருவினால் கடும் விளைவை சந்திக்கும் என்றார்.
இதுதொடர்பாக வடகொரிய தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, எங்களது வான்வெளியில் அத்துமீறி நுழையும் அமெரிக்க உளவு விமானத்தை சுட்டு வீழ்த்துவோம்.
இதுபோன்ற சம்பவம் கிழக்கு கடலில் நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. கடந்த காலங்களில் அமெரிக்க விமானங்களை சுட்டு வீழ்த்திய சம்பவங்களை நினைவுப்படுத்துகிறோம்.
அமெரிக்காவால் வெறித்தனமாக அரங்கேற்றப்பட்ட வான் உளவு செயல்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றார்.
- வடகொரியா கடலுக்கு அடியில் அணுஆயுத சோதனை நடத்த தொடங்கி உள்ளது.
- வடகொரியா அடுத்தடுத்து சோதனை நடத்தி வருவதால் கொரியா தீபகற்ப பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
சியோல்:
வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே நீண்ட காலமாக பகை இருந்து வருகிறது. தென்கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வருகிறது. இருநாட்டு படைகளும் தீபகற்பம் பகுதியில் கூட்டு போர் ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா உலக நாடுகள் எதிர்ப்பை மீறி தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. அவ்வப்போது கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தி அச்சுறுத்துகிறது.
இந்த நிலையில் தற்போது வடகொரியா கடலுக்கு அடியில் அணுஆயுத சோதனை நடத்த தொடங்கி உள்ளது. இதன் மூலம் செயற்கையாக கடலில் சுனாமியை ஏற்படுத்தி எதிரிகளின் கடற்படை கப்பல்கள் மற்றும் துறைமுகங்களை அழிக்கும் வகையில் இந்த சோதனை நடத்தப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக கடலுக்கு அடியில் டிரோன் மூலம் அணு ஆயுத சோதனையை இன்று மீண்டும் வடகொரியா நடத்தி உள்ளதாக தென் கொரியா குற்றம் சாட்டி உள்ளது.
ஹயில்-2 என்ற பெயரிலான இந்த அணு ஆயுத சோதனை கடலுக்கு அடியில் சுமார் 1000 கிலோ மீட்டர் தூரம் பயணித்து குறிப்பிட்ட இலக்கை தாக்கியதாக தெரிகிறது. கிழக்கு துறைமுக நகரான டன்கான் பகுதியில் இந்த சோதனை நடத்தப் பட்டது. இந்த வாரத்தில் நடந்த 2-வது சோதனை இதுவாகும். இப்படி தொடர்ந்து வடகொரியா அடுத்தடுத்து சோதனை நடத்தி வருவதால் கொரியா தீபகற்ப பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
- ஏவுகணைகளில் வைத்து செலுத்தக்கூடிய ஹவாசன்-31எஸ் என்று அழைக்கப்படும் சிறிய ரக அணு குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
- அமெரிக்காவைத் தாக்கும் திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளில் பொருத்தும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டிருக்காலம் என்று அணு ஆயுத நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பியாங்யாங்:
அமெரிக்க-தென்கொரிய படைகளின் கூட்டுப்போர் பயிற்சி மற்றும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகொரியா நடத்தி வரும் தொடர் ஏவுகணை சோதனைகளால் கொரியா தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த பரபரப்புக்கு மத்தியில் வடகொரியா புதிய அணு ஆயுதங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் புதிய அணு ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை ஆய்வு செய்தபோது, ஏவுகணைகளில் வைத்து செலுத்தக்கூடிய ஹவாசன்-31எஸ் என்று அழைக்கப்படும் சிறிய ரக அணு குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த அணு குண்டுகள் அளவில் சிறியதாக இருந்தாலும் அமெரிக்காவைத் தாக்கும் திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளில் பொருத்தும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டிருக்காலம் என்று அணு ஆயுத நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
- தென் கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து உள்ளது.
- அடுத்தடுத்து வடகொரியா சோதனைகள் நடத்தி வருவது எல்லைப் பகுதியில் போர் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
சியோல்:
வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. தென் கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து உள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த வடகொரியா உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை நடத்தி மிரட்டல் விடுத்து வருகிறது. 2 நாட்களுக்கு முன்பு குறுகிய தொலைவு சென்று தாக்கக்கூடிய 2 ஏவுகணை சோதனை நடத்தியது.
இதன் தொடர்ச்சியாக நேற்று வடகொரியா கிழக்கு கடற்கரை நகரமான சின்போவில் இருந்து நீர் மூழ்கி கப்பல் மூலம் 2 ஏவுகணைகளை வீசியதாக அந்நாட்டின் மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. இந்த ஏவுகணைகள் வடகொரியா தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் குறிப்பிட்ட இலக்கினை வெற்றிகரமாக தாக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சோதனையின் போது சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது தொடர்பாக எந்த தகவலும் இல்லை.
வடகொரியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் கடந்த 5 ஆண்டுகளாக தென்கொரியாவும், அமெரிக்க ராணுவ கூட்டுப் படையினரும் இணைந்து பயிற்சி எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக இன்று காலை அவர்கள் மிகப்பெரிய அளவிலான கூட்டு பயிற்சி மேற்கொள்ள இருந்தனர்.
இந்த பயிற்சி தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு வடகொரியா நீர் மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து வடகொரியா சோதனைகள் நடத்தி வருவது எல்லைப் பகுதியில் போர் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
- தென்கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவாக இருந்து வருகிறது.
- ஏவுகணை எவ்வளவு தூரம் சென்றது என்ற தகவலை ராணுவம் தெரிவிக்கவில்லை.
வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப்பிரச்சினை காரணமாக மோதல் இருந்து வருகிறது. தென்கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவாக இருந்து வருகிறது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா தொடர்ச்சியாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தி அச்சுறுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்றும் வடகொரியாவின் மேற்கு கடற்கரையோரம் உள்ள நாம்போநகர் என்ற பகுதியில் கடலை நோக்கி குறுகிய தொலைவு செல்லும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக தென்கொரியா ராணுவம் தெரிவித்து உள்ளது. ஆனால் இந்த ஏவுகணை எவ்வளவு தூரம் சென்றது என்ற தகவலை ராணுவம் தெரிவிக்கவில்லை.
- தென் கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளதால் ஆத்திரம் அடைந்த வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி அச்சுறுத்தி வருகிறது.
- கடந்த ஆண்டில் மட்டும் 70-க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தி உள்ளது.
சியோல்:
வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே எல்லை பிரசனை தொடர்பாக மோதல் இருந்து வருகிறது.
தென் கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளதால் ஆத்திரம் அடைந்த வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி அச்சுறுத்தி வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் 70-க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தி உள்ளது.
உலக நாடுகள் எதிர்ப்பை மீறி வடகொரியா இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் அந்நாட்டுக்கு பொருளாதார தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் வடகொரியாவில் தற்போது கடும் உணவு பஞ்சம் நிலவி வருவதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்து உள்ளன. சிலர் பசி, பட்டினியால் இறந்து விட்டதாகவும் செய்திகள் வெளியானது.
ஆனால் இதனை அந்த நாட்டு அரசு மறுத்து உள்ளது. சீனாவில் கொரோனா தொற்று காரணமாக அங்கிருந்து வடகொரியாவுக்கு அரிசி உள்ளிட்ட உணவு தானியங்கள் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,உணவு உற்பத்தி 20 சதவீதம் குறைந்துள்ளதாகவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
வடகொரியா அணு ஆயுதத்திற்கு அதிகம் செலவிட்டு வருவதாவும் பாலிஸ்டிக் உள்ளிட்ட ஏவுகணை சோதனைகளால் சர்வதேச அளவில் பொருளாதார தடை விதிக்கப்பட்டு உள்ளதால் இந்த நிலை ஏற்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து உணவு பற்றாக்குறையை போக்க அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் ஆளும் தொழிலாளர் கட்சியின் உயர்மட்ட குழுவை கூட்டினார். இதில் உணவு உற்பத்தியை அதிகரிப்பது குறித்தும், விவசாய முன்னேற்றம் குறித்தும் விரிவாக ஆலோசிக்கபட்டது. விவசாயம் குறித்து விவாதிக்க மட்டுமே கட்சியின் கூட்டம் கூட்டப்பட்டது இதுவே முதல் முறையாகும். இதில் பேசிய அதிபர் கிம் ஜாங் நாட்டில் உணவு உற்பத்தி இலக்கை அடைவதே முதன்மையானது என்றும் மார்க்கெட்டில் உணவு பொருட்கள் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் கூறினார்.
- வடகொரியா- தென் கொரியா இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்சினை தொடர்பாக மோதல் இருந்து வருகிறது.
- தென்கொரியா மற்றும் அமெரிக்கா கூட்டு படையினர் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
சியோல்:
வடகொரியா- தென் கொரியா இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்சினை தொடர்பாக மோதல் இருந்து வருகிறது.
தன் எதிரி நாடாக கருதும் தென்கொரியா மற்றும் அதற்கு ஆதரவு அளித்து வரும் அமெரிக்காவை மிரட்டும் வகையில் சமீப காலமாக வடகொரியா அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
உலக நாடுகள் எதிர்ப்புகளை மீறி வடகொரியா இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று அந்த நாடு அடுத்தடுத்து 4 ஏவுகணை சோதனைகளை நடத்தி உலக நாடுகளை அச்சுறுத்தி உள்ளது.வடகொரியா ஹம்யாங் மாகாணத்தில் உள்ள கிம் சாக் நகரத்தில் இருந்து கிழக்கு கடற்கரையை நோக்கி இந்த ஏவுகணைகள் சீறிபாய்ந்து சென்றதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஏவுகணைகள் சுமார் 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து சென்று இலக்கினை தாக்கியது. இதனால் ஏற்பட்ட சேத விவரம் எதுவும் தெரிய வில்லை.
தென்கொரியா மற்றும் அமெரிக்கா கூட்டு படையினர் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா இந்த ஏவுகணை சோதனையை நடத்தி உள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாக கொரியா தீபகற்பம் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
- தென்கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியினை மேற்கொண்டு வருகிறது.
- வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
சியோல்:
உலக நாடுகள் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி தென்கொரியாவை அச்சுறுத்தி வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை வடகொரியா அதிபர் கிம் ஜோங் உத்தரவின் பேரில் ஐ.சி.பி.எம். வகையை சேர்ந்த ஹவாகாய்-15 என்ற ஏவுகணையை எந்தவித முன் அறிவிப்பும் இன்றி விண்ணில் ஏவி சோதனை நடத்தியது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த ஏவுகணை 5,770 கிலோமீட்டர் உயரத்தில் 990 கி.மீட்டர் தொலைவில் பறந்து சென்று ஜப்பான் கடல் பகுதியில் திட்டமிட்ட இலக்கினை துல்லியமாக தாக்கியது. தனது அணு ஆயுத சோதனைக்கு இது மேலும் வலு சேர்ப்பதாக அமைந்ததாக வடகொரியா தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில் 2 நாட்கள் கழித்து மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியதாக தென் கொரியா கூறி உள்ளது. இந்த ஏவுகணை கிழக்கு கடற்கரை பகுதியில் விழுந்தது. இதில் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
தென்கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியினை மேற்கொண்டு வருகிறது. இதற்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் கூட்டு பயிற்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 48 மணி நேரங்களில் அடுத்தடுத்து வடகொரியா 2 ஏவுகணை சோதனை நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
- வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது.
- கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையானது வலிமையான எதிர் தாக்குதலுக்கு தயாராக இருக்கும் வடகொரியாவின் உண்மையான போர் திறனை காட்டுகிறது.
பியாங்யாங்:
வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கம் முதலே அதிகளவில் ஏவுகணை சோதனையை நடத்தியது.
இதற்கிடையே அமெரிக்காவும் தென் கொரியாவும் இணைந்து கூட்டுப்போர் பயிற்சியை அடுத்த வாரம் தொடங்க இருப்பதாக அறிவித்தன. இதற்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. போர் பயிற்சியை தொடங்கினால் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என்று வடகொரியா எச்சரிக்கை விடுத்தது.
இந்த நிலையில் அமெரிக்கா, தென் கொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் வட கொரியா, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்தி உள்ளது.
அந்த ஏவுகணையை கடலை நோக்கி வடகொரியா ஏவியது. இதுதொடர்பாக தென் கொரியா ராணுவம் கூறும்போது, அதிகாலையில் ஏவப்பட்ட ஏவுகணை 66 நிமிடங்கள் வானில் பறந்து கடலில் விழுந்தது என்றும் சுமார் 200 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்றது என்றும் தெரிவித்தது.
இதற்கிடையே வடகொரியா ஏவிய ஏவுகணை ஜப்பான் கடல் பகுதியில் விழுந்துள்ளது. அந்த ஏவுகணை கிழக்கு கடற்கரையில் இருந்து ஹொக் கைடா மாகாணத்தின் மேற்கு ஓஷிமா தீவு அருகே விழுந்ததாக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா தெரிவித்தார்.
இந்த ஏவுகணை சோதனை குறித்து வடகொரியா கூறும்போது, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையானது வலிமையான எதிர் தாக்குதலுக்கு தயாராக இருக்கும் வடகொரியாவின் உண்மையான போர் திறனை காட்டுகிறது.
இந்த சோதனை, எதிரி படைகள் மீது அபாயகரமான அணு சக்தி எதிர்த்தாக்குதல் திறனுக்கு உண்மையான ஆதாரம் என்று தெரிவித்தது.
- உலக நாடுகள் எதிர்ப்பை மீறி வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி அச்சுறுத்தி வருகிறது.
- கடந்த ஆண்டு மட்டும் 70-க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனை நடத்தியது.
சியோல்:
அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து ஆண்டுதோறும் மேற் கொண்டு வரும் கூட்டு ராணுவ பயிற்சி தங்கள் மீது படையெடுப்பதற்கான ஒத்திகை என்று வடகொரியா கூறி வருகிறது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உலக நாடுகள் எதிர்ப்பை மீறி வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி அச்சுறுத்தி வருகிறது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளை வட கொரியா சோதனை செய்ய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்துள்ள போதிலும் அந்த சோதனைகளை அந்நாடு தொடர்ந்து செய்து வருகிறது.
கடந்த ஆண்டு மட்டும் 70-க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக அந்நாடு நேற்று வடகொரியா தலைநகர் பியோங்கி யாங்குக்கு தெற்கே உள்ள தீவில் இருந்து 3 ஏவுகணைகளை கிழக்குநோக்கி வீசியது.
இந்த ஏவுகணைகள் கொரியா தீவகற்பத்துக்கும். ஜப்பானுக்கும் இடையே உள்ள கடல் பகுதியில் விழுந்தது. இந்த சூழ்நிலையில் புத்தாண்டு தினமான இன்றும் வடகொரியா மேலும் ஒரு ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டி உள்ளது.
இன்று அதிகாலை உள்ளூர் நேரப்படி 2. 50 மணி அளவில் பியோங்கி யாங்கில் இருந்து கிழக்கு கடல் பகுதியை நோக்கி குறுகிய தூர பாலிடிக்ஸ் ஏவுகணையை வீசி சோதனை நடத்தியதாக தென்கொரியா கூட்டு படையினர் தெரிவித்து உள்ளனர். இந்த ஏவுகணை 400 கிலோமீட்டர் தூரத்துக்கு சீறிப்பாய்ந்து சென்று கடலில் விழுந்ததாக தென் கொரியா கூறி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் வடகொரியா 4 ஏவுகணை சோதனை நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சோதனைக்கு பின் நடைபெற்ற முக்கிய ஆலோசனை கூட்டத்தில் வட கொரியா அதிபர் கிம் ஜாங்அன் கலந்து கொண்டார். இந்த கூட்டத்துக்கு பிறகு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அணு ஆயுத உற்பத்தியை வேகமாக வடகொரியா அதிகரிக்க உள்ளது. அமெரிக்கா மற்றும் பிற பகைமை நாடுகளின் ஆபத்தான போக்குக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியாவின் நலனை பாதுகாக்கும் நோக்கிலும் நாட்டில் ராணுவ பலம் இரு மடங்கு ஆக்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்