என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மத்திய சுகாதாரத்துறை"
- துறைகளுக்கிடையே ஒருங்கிணைப்பும், தகவல் தொடர்பும் இல்லாததால், நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
- ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் பல்வேறு இணை நோய்களுடன் இருப்பதால், பல துறைகளின் கவனிப்பு அவசியம் ஆகிறது.
புதுடெல்லி:
ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு சிறப்பு மருத்துவ நிபுணரின் ஆலோசனை தேவைப்பட்டால், அவரிடம் சிகிச்சை பெற நோயாளிக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
அப்போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை முதல்முறையாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நோயாளிகளுக்கு பரிந்துரை செய்வதில், முரண்பாடுகளும், பொறுப்பேற்கும் தன்மையும் இல்லாததால், இந்த நெறிமுறைகள் வெளியிடப்படுகின்றன. தான் அனுமதிக்கப்படும் துறையை தவிர, நோயாளிக்கு சிறப்பு மருத்துவமோ, பகுப்பாய்வோ, மருத்துவ ஆலோசனையோ தேவைப்பட்டால், அவருக்கு உடனடியாக பரிந்துரை செய்யப்பட வேண்டும்.
அந்த பரிந்துரையை சம்பந்தப்பட்ட டாக்டர்களே எழுத வேண்டும். முதுநிலை பயிற்சி மருத்துவர்கள், தங்கள் டாக்டர்களுடன் ஆலோசனை நடத்தாமல் அந்த பரிந்துரையை முடித்துவிடக்கூடாது.
ஒவ்வொரு டாக்டரும் முந்தைய நாள் தங்களது குழுவினர் கவனித்த பரிந்துரை நோயாளிகளின் பட்டியலை ஆய்வு செய்ய வேண்டும். அப்போதுதான், நோயாளிகள் பராமரிப்பையும், பயிற்சி மருத்துவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கவும் முடியும்.
துறைகளுக்கிடையே ஒருங்கிணைப்பும், தகவல் தொடர்பும் இல்லாததால், நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் பல்வேறு இணை நோய்களுடன் இருப்பதால், பல துறைகளின் கவனிப்பு அவசியம் ஆகிறது.
பயிற்சி மருத்துவர்களுக்கும் இது நல்ல பயிற்சி முறையாக அமைய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- புதிதாக தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 609 ஆக உள்ளது
- தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 92 சதவீதம் பேர் வீட்டிலிருந்தே சிகிச்சை பெற்று குணமாகி வருவதாக தகவல்
கொரோனாவின் புதிய வகையான 'ஜேஎன்.1' வகை தொற்று, பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. கடந்த சில வாரங்களாக ஜே.என்.1 வகை உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் புதிதாக தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு இலக்கங்களாக இருந்த நிலையில், தற்போது மூன்று இலக்கங்களாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 609 ஆக உள்ளது.
இதனை தொடர்ந்து, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,368 ஆக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், புதிய வகை கொரொனா தொற்றால் கேரளாவில் இரண்டு பேரும், கர்நாடகாவில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 92 சதவீதம் பேர் வீட்டிலிருந்தே சிகிச்சை பெற்று குணமாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களுக்கு செல்லும் போது முக கவசம் அணியவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4.4 கோடியாக அதிகரித்துள்ளது என்றும் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் விகிதம் 98.81 சதவீதமாக உள்ளது எனவும் மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- காய்ச்சல், சளி, தொண்டை வலி, மூச்சுத்திணறல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
- தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை செய்ய வேண்டும்.
சென்னை:
கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகம், தெலுங்கானா, கேரளத்தை தொடர்ந்து தற்போது தமிழகத்திலும் ஜே.என்.1 வகை கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
கொரோனா பரவல் குறித்து மாநில அரசுகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை மத்திய சுகாதாரத்துறை வழங்கியுள்ளது.
குறிப்பாக, அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் அறிகுறிகள் உள்ளோருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நடத்துமாறு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் உத்தரவிட்டார்.
அதன்படி, தினமும் 350-க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் யாருக்கு எல்லாம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்த அறிவுறுத்தலை சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு செல்வவிநாயகம் வழங்கி உள்ளார். இதுதொடர்பாக அவர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காய்ச்சல், சளி, தொண்டை வலி, மூச்சுத்திணறல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோயாளிகள், உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.
தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை செய்ய வேண்டும். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தீவிர நுரையீரல் தொற்றுக்கு உள்ளானவர்கள், இன்புளூயன்சா போன்ற பாதிப்புக்குள்ளானவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
- புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னதாக ஆர்.டி.-பிசிஆர் பரிசோதனை செய்திருக்க வேண்டும்
- இந்தியா வந்ததும் 2 சதவீத ரேண்டம் பரிசோதனை மேற்கொள்ளப்படும்
புதுடெல்லி:
சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் தொற்று பரவலை தடுப்பதற்காக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை மத்திய சுகாதாரத்துறை விதித்துள்ளது.
சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து இந்தியா வரும் சர்வதேச விமானங்களில் பயணிப்பவர்களுக்கு 100 சதவீதம் கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என்றும், புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னதாக ஆர்.டி.-பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டு கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும், அவர்கள் இந்தியா வந்ததும் 2 சதவீத ரேண்டம் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்