search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வானவில்"

    • சென்னையில் LGBTQ+ மக்களின் 'வானவில் சுயமரியாதை' பேரணி கோலாகலமாக நடைபெற்றது.
    • இப்பேரணியில் வண்ண உடைகள் அணிந்து ஏராளமான LGBTQ+ மக்கள் பங்கேற்றனர்.

    LGBTQ+ மக்களுக்காக ஜூன் மாதத்தில் சர்வதேச Pride Month கொண்டாடப்படுகிறது.

    அதனையொட்டி இன்று சென்னையில் LGBTQ+ மக்களின் 'வானவில் சுயமரியாதை' பேரணி கோலாகலமாக நடைபெற்றது. இப்பேரணியில் கரகாட்டம், தப்பாட்டம் என மேளதாளம் முழங்க வண்ண வண்ண உடைகள் அணிந்து ஏராளமான LGBTQ+ மக்கள், அதன் ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், சர்வதேச Pride Month-ஐ நினைவுகூரவும், பொதுமக்களுக்கு LGBTQ+ பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடம் வானவில் வண்ணங்களில் ஒளிரவிடப்பட்டது.

    • வானவில் மன்ற கருத்தாளர்கள் சுமார் 61 பேர் கலந்து கொண்டனர்.
    • இயற்பியல் வேதியியல், உயிரியல் மற்றும் கணிதம் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலக கூட்ட அரங்கில் வானவில் மன்ற கருத்தாளர்களுக்கான மண்டல அளவிலான ஒருநாள் பயிற்சி நடைபெற்றது.

    இப்பயிற்சியில் தஞ்சாவூர்,திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த வானவில் மன்ற கருத்தாளர்கள் 61 பேர் கலந்து கொண்டனர். பயிற்சியை தஞ்சைமாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்க ல்வித்துறை உதவித்திட்ட இயக்குனர் ரமேஷ்குமார் தொடங்கி வைத்து சிறப்புரை யாற்றினார்.

    தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத்துணைத்தலைவர் பேராசிரியர் சுகுமாரன், மாவட்டச்செயலர் முருகன் வாழ்த்துரை வழங்கினர்.

    மாநிலகருத்தாளர்கள் ராஜபாண்டி, சங்கரலிங்கம், அறிவரசன், பாரதிராஜா மற்றும்அருண்குமார் ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டு, இழுத்தல் மூலம் விசையின் செயல்பாடு, பலூன் செயல் முறை மூலம் அழுத்தம் தொடர்பான பயிற்சி, கூடைப்பந்து விளையாட்டு மூலம் குழந்தைகளின் கவனத்தை ஒருங்கிணைத்தல் மேலும் இயற்பியல் வேதியியல் உயிரியல் மற்றும் கணிதம் தொடர்பான பயிற்சிகள் வழங்கினர்.

    பயிற்சியில் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, மாவட்டங்களை சார்ந்த ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை ஸ்டெம் ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் தஞ்சைமாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி த்துறை ஸ்டெம் ஒருங்கி ணைப்பாளர் சவுமியநா ராயணன் நன்றி கூறினார்.

    • கடாரங்கொண்டான் அரசு பள்ளியில் வானவில் மன்றம் நடைபெற்றது
    • ஜெயங்கொண்டம் வட்டார கல்வி அலுவலர் ராசாத்தி கலந்து கொண்டு அறிவியல் நுட்பங்களை விளக்கி பேசினார்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த கடாரங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவில் மன்ற தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கீதா தலைமை வகித்தார். ஜெயங்கொண்டம் வட்டார கல்வி அலுவலர் ராசாத்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அறிவியல் நுட்பங்களை விளக்கி பேசினார். புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் செங்குட்டுவன் உற்று நோக்கங்களின் முக்கியத்துவத்தை பற்றி மாணவர்களிடையே எடுத்துரைத்தார். கல்வித் துறை சார்பில் அறிவியல் தூதுவராக கலந்து கொண்ட சதீஷ்குமார், அறிவியல் தாக்கத்தை ஏற்படுத்திய பெர்னௌலி தத்துவம், ஸ்பிரேயர் செயல்படும் விதம், நீர் சூழல் மற்றும் அதன் தாக்கம், வாயுக்களில் அழுத்தம் வேறுபாடு, பருமப்பொருள்களில் அழுத்தம் போன்ற செயல்பாடுகளை செய்து காட்டி மாணவர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் புஷ்பவல்லி, சவேரியம்மாள், இளமுருகு ஆகியோர் செய்திருந்தனர்.

    ×