என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊழியர் தாக்குதல்"

    • ஆவடி, பூந்தமல்லி சாலையில் பெட்ரோல் பங்க் உள்ளது.
    • மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் திடீரென கார்த்திக்கை வழிமறித்து சரமாரியாக தாக்கினர்.

    ஆவடி:

    ஆவடி, பூந்தமல்லி சாலையில் பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு ஊழியராக கார்த்திக் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இன்று மதியம் அவர் ரூ.1 1/2 லட்சத்தை ஆவடி வீட்டு வசதிவாரிய குடியிருப்பு அருகே உள்ள வங்கியில் செலுத்த மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் திடீரென கார்த்திக்கை வழிமறித்து சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரிடம் இருந்த ரூ.1 1/2 லட்சத்தை பறித்து தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து உதவி கமிஷனர் புருஷோத்தமன், இன்ஸ்பெக்டர் டில்லிபாபு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நிதி நிறுவனத்தில் என்னை திட்டுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
    • தலையில் காயம் அடைந்த கணேசன் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    காஞ்சிபுரம்:

    ஆரணி கண்ணப்பன் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 25). இவர் காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணம் வசூலிக்கும் வேலை செய்து வருகிறார். இவர் வங்கியில் கடன் வாங்கி, வார தவணையில் செலுத்தி வரும் காஞ்சிபுரம் உப்பேரிகுளத்தை சேர்ந்த அபிபுல்லா என்பவரிடம் பணம் வசூலிக்க சென்றார். அப்போது அபிபுல்லா தான் செலுத்தவேண்டிய ரூ.1,340-க்கு பதிலாக ரூ.600 மட்டும் கொடுத்தார்.

    இதற்கு கணேசன் முழு பணமும் கொடுத்தால்தான் செல்வேன். இல்லையென்றால் நிதி நிறுவனத்தில் என்னை திட்டுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து அபிபுல்லா வீட்டுக்குள் சென்று தனது மகன் இலியாஸிடம் தெரிவித்தார். வீட்டில் இருந்து வெளியே வந்த இலியாஸ், நிதி நிறுவன ஊழியரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளார். இதனால் தலையில் காயம் அடைந்த கணேசன் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து கணேசன் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த விஷ்ணுகாஞ்சி போலீசார் இலியாசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×