என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வெண்ணை"
- நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில், கும்பாபிசேகத்திற்குப் பிறகு, முதல் வெண்ணெய்க் காப்பு அலங்காரம் நடைபெற்றது.
- மகா தீபாராதணை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாமக்கல்:
இந்த ஆண்டு தற்போது குளிர் சீசன் துவங்கியுள்ளதால், நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில், கும்பாபிசேகத்திற்குப் பிறகு, முதல் வெண்ணெய்க் காப்பு அலங்காரம் நடைபெற்றது. மாலை சுமார் 5 மணிக்கு ெதாடங்கி இரவு 8 மணி வரை, சுமார் 120 கிலோ வெண்ணெய் மூலம் சுவாமியின் உடல் முழுவதும் அலங்காரம் செய்து வெண்ணெய்க்காப்பு அலங்காரம் நடைபெற்றது. பின்னர் திரை விலக்கப்பட்டு மகா தீபாராதணை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- பெண் வடிவ கருடாழ்வாருக்கு நெய்தீபம், எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட்டால் திருமண தோஷம் புத்திரதோஷம் விலகிவிடும்.
- கிருஷ்ணனின் தரிசனம் வேண்டிய முனிவர்கள் தவமிருந்த குளம் இது என்பது ஐதீகம்.
கேரளாவில் குருவாயூரிலும், கர்நாடகாவில் உடுப்பியிலும் ஆந்திராவில் ஐதராபாத், விசாகப்பட்டினத்திலும் கிருஷ்ணஜெயந்தி உற்சாகமாக கொண்டாடப்படுவது போல தமிழ்நாட்டில் மன்னார்குடியில் ராஜகோபால சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
ராஜகோபாலர் இக்கோவிலில் இடையன் கோலத்தில் பாலகனாக காட்சி தருகிறார். ஒரு வேட்டி அணிந்து அதையே தலைப்பாகையாகச் சுருட்டி, வலது கையில் வெண்ணெய் மற்றும் சாட்டை வைத்து காட்சி தருகிறார். இடுப்பில் சலங்கை, சாவிக்கொத்து, கையில் வளையல், காலில் தண்டை, கொலுசு ஆகிய குழந்தை அணிகலன்கள் அணிந்திருக்கிறார். உடன் ஒரு பசுவும், இரண்டு கன்றுகளும் உள்ளன. தாயார் சன்னதி அருகே பெருமாள் சன்னதி எதிரே பெண் வடிவ கருடாழ்வார் இருக்கிறார். மதுரை கள்ளழகர் கோவில் போல, தினமும் மாலையில் மட்டும் தோசை நைவேத்யம் படைக்கப்படுகிறது.
இந்த கோவிலில் 16 கோபுரங்கள், 18 விமானங்கள், 7 பிரகாரங்கள், 7 மண்டபங்கள், 9 தீர்த்தங்கள் உள்ளன. பொதுவாக ராஜகோபுரத்தில், எல்லா நிலைகளிலும் சுதை சிற்பங்கள் இருக்கும். ஆனால் இங்குள்ள 11 நிலை ராஜகோபுரத்தில் கீழிருந்து மேலாக முதல் ஆறு நிலைகளில் கதை, சிற்பங்கள் எதுவும் இல்லை.
ஏழாவது நிலையில் இருந்தே சுவாமி சிலைகள் வடிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய வித்தியாசமான அமைப்பில் கோபுரத்தை காண்பது அரிது. திருவாரூர் தேரழகு என்பது போல் மன்னார்குடி மதிலழகு என்பது சொல் வழக்கமாக உள்ளது.
கோவிலில் இருந்து சற்று தூரத்தில் தீர்த்தக்குளம் இருக்கிறது. கிருஷ்ணனின் தரிசனம் வேண்டிய முனிவர்கள் தவமிருந்த குளம் இது என்பது ஐதீகம். இதனை யமுனை நதியாகவே கருதுவதால் ஹித்ரா நதி என்றே அழைக்கிறார்கள். குளமாக இருந்தாலும் நதியின் பெயரில் அழைக்கப்படும் தீர்த்தம் இது. ஆனி பவுர்ணமியில் இந்த தீர்த்தத்தில் தெப்பத்திருவிழா நடக்கிறது.
தாயார் சன்னதி அருகே பெருமாள் சன்னதி எதிரே பெண் வடிவ கருடாழ்வார் இருக்கிறார். ஆனந்த விநாயகர் திருக்கோவில், கைலாசநாதர் கோவில், மீனாட்சி அம்மன் திருக்கோவில், காளாவைக்கரை முருகன் கோவில், நீலகண்டேசுவரர் கோவில் முதலியானவும் தனி சிறப்பு வாய்ந்தவை.
இக்கோவிலில் மூலவர் வாசுதேவர் என்ற பெயரிலும், உற்சவர் ராஜகோபாலசுவாமியாகவும் காட்சி தருகிறார். தினமும் காலையில் வாசுதேவர் சன்னதி திறக்கும்போது பசு, யானைக்கு பூஜை செய்யப்படுகிறது. உற்சவருக்கு ராஜமன்னார் என்றும் பெயர் உண்டு. இப்பெயரே பிரசித்தி பெற்றதால், ஊருக்கும் மன்னார்குடி என்ற பெயர் ஏற்பட்டது.
கிருஷ்ணரை அழிக்க கம்சன் குவலயாபீடம் என்னும் யானையை ஏவிவிட்டான்.
கிருஷ்ணன், யானையின் தந்தத்தை ஒடித்து அதனை அடக்கினார். இதன் அடிப்படையில் இவர் இடது கையில் தந்தமும் இருக்கிறது.
ஒருசமயம் கிருஷ்ணன், யமுனையில் நீராடிக்கொண்டிருந்த கோபியருக்கு இடையே ஒரு போட்டி வைத்தார். கோபியர் நீராடிவிட்டு தங்களது ஆடை, ஆபரணங்களை சரியாக அணிந்து கொள்ள வேண்டும் என்பதே போட்டி அந்த போட்டி தொடங்கியதும், கிருஷ்ணர், ஒரு கோபியின் கம்மலை எடுத்து அணிந்து கொண்டார்.
கோபியர்களோ அதைக் கவனிக்காமல் தேடிக் கொண்டே இருந்தனர். இறுதியில் கண்ணனின் காதில் அது இருக்கும் அழகைப் பார்த்து நகைத்து, ஆனந்தம் கொண்டனர். இதன் அடிப்படையில் இங்கு ராஜகோபாலர் வலது காதில் குண்டலமும், இடது காதில் தாடங்கமும் அணிந்திருக்கிறார்.
இவருக்கு பால் பிரதான நைவேத்யமாக படைக்கப்படுகிறது. இதையே பிரசாதமாகவும் தருகின்றனர்.
பங்குனியில் 18 நாட்கள் பிரம்மோற்சவம் நடக்கிறது. கிருஷ்ணருக்காக அமைந்த கோவில் என்பதால் 18-க்கு முக்கியத்துவம் கொடுத்து இவ்விழா நடத்தப்படுகிறது.
இவ்விழா நடக்கும் நாட்களில் கிருஷ்ணனின் 32 லீலைகளில், சுவாமியை அலங்காரம் செய்வது விசேஷம். பிரம்மோற்சவத்தின் 16&ம் நாளில் வெண்ணை தாழி உற்சவம் நடக்கிறது. அப்போது சுவாமியை தவழ்ந்த கோலத்தில், கையில் வெண்ணைப் பானையுடன் வீதியுலா செல்கிறார். அந்நேரத்தில் சுவாமிக்கு Òவெண்ணையை பிரதான நைவேத்யமாக படைக்கின்றனர். அலங்காரம் முடிந்து இவர், ஊருக்கு உள்ள மண்டபத்திற்கு செல்கிறார். அப்போது வழிநெடுகிலும் பக்தர்கள் இவர் வெண்ணையை வீசுவார்கள்.
இத்தலத்தில் உள்ள பெண் வடிவ கருடாழ்வாருக்கு நெய்தீபம், எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட்டால் திருமண தோஷம் புத்திரதோஷம் விலகிவிடும்.
இங்குள்ள துர்க்கைக்கு ராகு காலத்தில் விசேஷ பூஜை, வழிபாடு நடக்கிறது. புத்திர பாக்கியத்திற்காக இவளிடம் தொட்டில் வளையம் கட்டும் வழக்கமும் உள்ளது.
சென்னையில் கோபாலபுரத்தில் உள்ள கோபால சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பாக நடத்தப்படுகிறது.
நாமக்கல்:
நாமக்கல் நகரில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் சுவாமி சாந்த சொரூபியாக வணங்கி நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக்கி ழமையன்று ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகிறது. இது தவிர கட்டளைதாரர்கள் மூலம் தினசரி ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் தொடங்கி, அடுத்த ஆண்டின் ஜனவரி மாதம் வரை பனிக்காலத்தில் வெண்ணைக்காப்பு அலங்காரம் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டின் (2023) முதல் வெண்ணைக்காப்பு அலங்காரம் நேற்று நடந்தது.
120 கிலோ வெண்ணை கொண்டு, சுவாமியின் உடல் முழுவதும் பூசி, பல வண்ணங்களால் அலங்காரம் செய்தனர். 3 மணி நேரத்துக்கு மேலாக ஆஞ்சநேயருக்கு இந்த அலங்காரம் நடைபெற்றது. அலங்காரம் முடிந்த பின்னர் திரை விலக்கப்பட்டு சுவாமிக்குத் தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த வெண்ணெய் காப்பு அலங்காரம் புதன்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக் கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வரை (ஜனவரி 8-ந்தேதி) தினந்தோறும் இரவு 7 மணிக்கு மேல் கட்டளைத்தாரர்களால் செய்யப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்