search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிதி நிறுவன ஊழியர்"

    • மோகனூரில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணம் வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
    • நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி வந்த கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த தமிழ்செல்வன் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை அருகே உள்ள பெரியசோளிபாளையம் தண்ணீர்பந்தல் பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்துரை. இவரது மகன் தமிழ்செல்வன் (வயது 25). இவருக்கு திருமணம் ஆகவில்லை.

    இவர் மோகனூரில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணம் வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். இவர் நிதி நிறுவனத்திற்கு வசூல் பணிக்காக பரமத்திவேலூர் அருகே உள்ள அனிச்சம் பாளை யத்திற்கு சென்றுள்ளார்.

    கார் மோதியது

    பின்னர் தனது மோட்டார் சைக்கிளில் அனிச்சம்பாளையத்தில் இருந்து பரமத்திவேலூர் செல்ல நாமக்கல்- கரூர் பைபாஸ் சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி வந்த கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த தமிழ்செல்வன் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று தமிழ்ச்செல்வன் உயிரிழந்தார்.

    டிரைவர் கைது

    இந்த விபத்து குறித்து வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ்ச்செல்வன் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த கார்த்திக் (36) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நிதிஷ்குமார் தூக்கில் தொங்கி கொண்டு இருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
    • இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு சாஸ்திரிநகர் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் காட்டுராஜா. இவருடைய மகன் நிதிஷ்குமார் (வயது 24). இவர் அதே பகுதியை சேர்ந்த விஜயா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

    தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்த நிதிஷ்குமார் கடந்த 2 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று காலையில் விஜயா வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பினார். கதவு உள் பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்ததால் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார்.

    அப்போது நிதிஷ்குமார் தூக்கில் தொங்கி கொண்டு இருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் ஓடோடி வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

    பின்னர் நிதிஷ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே நிதிஷ்குமார் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து நிதிஷ்குமார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×